மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (கனடா) தேசிய செயலாளர் கீத் ஜோன்ஸ் (Keith Jones), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழுவின் (Sosyalist Eşitlik Grubu) நிறுவனரும் தலைவருமான ஹலில் செலிக்கிற்கு (Halil Çelik) வழங்கிய அஞ்சலியை இங்கு வெளியிடுகிறோம். ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஹலீலின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் ஜோன்ஸின் கருத்துக்கள் வாசிக்கப்பட்டன.
டிசம்பர் 31, 2018 அன்று, வெறும் 57 வயதில் தோழர் ஹலீல் செலிக் இறந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவு சோசலிச சமத்துவக் குழு கூட்டியுள்ள கூட்டத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது பெருமையாக உள்ளது .
தோழர் ஹலீலைச் சந்தித்துப் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும், தூரம் மற்றும் நேரம் காரணமாக வரையறுக்கப்பட்ட அளவிற்குப் அவரோடு பணியாற்றுவதற்கு எனக்கு பாக்கியம் கிடைத்தது. ஹலீலின் அடக்கமான நடத்தை அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் தைரியம், தொழிலாள வர்க்கத்தின் விடுதலையை முன்னேற்றுவதற்கான உறுதிப்பாடு மற்றும் அரசியல் கொள்கையை நிலைநிறுத்துவதில் உறுதியான தன்மை ஆகியவற்றை கொண்டிருந்தார்.
ஒப்பீட்டளவில் குறைந்த வயதில் ஏற்பட்ட தோழர் ஹலீலின் மரணம் ஒரு கொடூரமான அடியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அக்டோபர் புரட்சியை உயிர்ப்பித்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் துருக்கிய தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புதல் என்ற இலக்கை அவர் உணரத் தொடங்கினார் அதுவே அவர் வாழ்க்கையை உயிரூட்டியது.
உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஒரு புரட்சிகரப் போராளியாக நான்கு தசாப்தங்களாக, அடக்குமுறை, சிறைவாசம், தனிமைப்படுத்தல் மற்றும் பல ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் உட்பட பலவற்றை ஹலீல் தாங்கினார். ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொண்டு, அவரும் அவர் தலைமையிலான தோழர்கள் குழுவும் பல்வேறு பப்லோவாத போலியான ட்ரொட்ஸ்கிச அமைப்புகளுடன் ஒன்றன் பின் ஒன்றாக கசப்பான அனுபவங்களை அனுபவித்திருக்கின்றனர். தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அரசியல் சுயாதீனம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கான போராட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டிய வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகள் மீதான அலட்சியம் மற்றும் விரோதப் போக்கில் இந்த அமைப்புகள் ஒன்றுபட்டிருக்கின்றன.
ஹலீல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நோக்கித் திரும்பியது என்பது அவரது நித்திய பெருமையை குறிக்கிறது. பப்லோவாதம், ஸ்ராலினிசம், மாவோயிசம் மற்றும் அனைத்து விதமான குட்டி முதலாளித்துவ தேசியவாத சக்திகளுக்கும் எதிராக உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும் அதன் நீண்ட போராட்டத்தை ஒரு கவனமாக மறுஆய்வு செய்த ஹலீல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் தத்துவார்த்த அடித்தளங்களை அமைக்கும் கடினமான பணியை மேற்கொள்வது தனக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஒரே சாத்தியமான மற்றும் கொள்கை ரீதியான பாதை என்பதை உணர்ந்தார்.
தோழர் ஹலீல் தனது வாழ்க்கையின் கடைசி தசாப்தத்தில் அந்த அஸ்திவாரங்களை அமைப்பதிலும், ICFI இன் வரலாறு மற்றும் முன்னோக்குகளின் அடிப்படையில் ஒரு பணியாளர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் நிறைவேற்றப்பட்ட பணியின் முக்கியத்துவம், அதுதான் உண்மையான ட்ரொட்ஸ்கிசம் என்று இறந்த ஐந்து ஆண்டுகளில், சோசலிச சமத்துவக் குழுவிற்கு அவர் செய்த முக்கிய முன்னேற்றங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது - எல்லாவற்றிற்கும் மேலாக, ஜூன் 2022 இல் ICFI யில் அதன் துருக்கியப் பிரிவாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்று, துருக்கியில் உள்ள தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து புரட்சிகரப் போராட்டத்திற்குள் நுழைகையில், அது தோழர் ஹலீலின் வாழ்வில் இருந்து உத்வேகத்தின் ஆதாரமாக கொண்டிருக்கும். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்திவாய்ந்த ட்ரொட்ஸ்கிச அரசியல்-கோட்பாட்டின் திசைகாட்டியாக ஹலீல் இருந்திருக்கிறார்.
Keith Jones, National Secretary SEP (Canada)