மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்திற்கும் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் எதிரான வழக்கில் வெற்றி பெறவும், “ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை. சோசலிச சமத்துவக் கட்சி 20,000 யூரோக்கள் சட்ட உதவிநிதியை நிறுவியுள்ளது. இன்றே முடிந்த அளவு நன்கொடை அளியுங்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடுங்கள். உலக சோசலிச வலைத் தளத்தில் நாங்கள் வெளியிடுவதற்கு மேலும் ஆதரவுகாட்டும் புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளை எங்களுக்கு அனுப்பவும். (கீழே உள்ள புகைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள போஸ்டரைப் பதிவிறக்கி அச்சிடவும்.)
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei-SGP) ஜேர்மனியின் கூட்டாட்சி குடியரசிற்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்குக்கும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான அதன் போராட்டத்திற்கும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். 'உளவுத்துறை, சோசலிச சமத்துவக் கட்சி உட்பட அனைத்து சோசலிச குழுக்களின் மீதான கண்காணிப்பு மற்றும் அவதூறு' உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரும் ஒரு இணையவழி மனுவில் இதுவரை 5,300 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பேர்லினில் உள்ள நிர்வாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மனுவில், அதன் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சோசலிச சமத்துவக் கட்சி குற்றப்படுத்தப்படுவதைக் கண்டித்து பின்வருமாறு முடிவடைகிறது:
பின்பற்றப்படும் நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நீதி வழங்குதலை (Gesinnungsjustiz) இத்தகைய வழக்குகள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படைத் தாக்குதலாகும். சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் அழிவு, அரசு அடக்குமுறை, இராணுவவாதம் அல்லது முதலாளித்துவ சமூகத்தின் பிற தீமைகளை எதிர்த்துப் போராடும் எவரையும் எளிதில் ஒடுக்குவதற்கு இது பயன்படுத்தப்படலாம்.
ஜேர்மன் மொழி பேசும் நாடுகளில் இருந்து 4,950 கையொப்பங்கள் தவிர, உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான நாடுகளில் இருந்து கட்சி குறிப்பிடத்தக்க செய்திகளைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் வெகுஜன இறப்பு அலைகளுக்கு மத்தியில், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கொலைகார சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கும் ஒரே கட்சியை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டதை அறிந்து பல ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
'நான் சோசலிச சமத்துவக் கட்சியின் மனுவில் கையெழுத்திட்டேன்' என்று ட்விட்டரில் ஒரு இடுகையில் குடும்பங்கள் ஆபத்தில் உள்ளன (Households at Risk Initiative) என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர் சில்க ஆரேட்ஸ் விளக்குகிறார். “ஒரு கட்சி முதலாளித்துவத்திற்கு எதிரானது என்பதால், அது இடதுசாரி தீவிரவாதமானது அல்ல. சோசலிசம் என்பது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும்! தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பெற்றோரின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் பாதுகாப்பான கல்விக்காக போராடுவதிலும் சில்க முக்கிய பங்கு வகித்துள்ளார். உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பிய செய்தியில் அவர், 'வழக்கில் வெற்றிகிடைக்கும் என்று நம்புகிறேன்!' என எழுதினார்.
ஜேர்மனியில் உள்ள பசாவ் நகரில் தனது குழந்தைகளுடன் வசிக்கும் கிளவ்டியா, பாதுகாப்பான கல்வி நடவடிக்கைக் குழு வலையமைப்பில் (Safe Education Action Committee Network) உறுப்பினராக உள்ளார். மேலும் வேண்டுமென்றே வெகுஜனங்களை தொற்றுக்குள்ளாக்கும் கொள்கைக்கு உடனடி முடிவுக்காக போராடுகிறார். தொற்றுநோய்களின் போது நேரில் பள்ளிக்குச் செல்வது தினசரி மற்றும் உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துவதற்கு, அவர் #நிழல்குடும்பங்கள் (#shadowfamilies) என்ற சொற்றொடரின் கீழ் அழைப்பு விடுக்கிறார். கோவிட்-19 காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த நூறாயிரக்கணக்கானவர்களின் சார்பாகவும் அவர் பேசுகிறார்:
தொற்றுநோயிலிருந்து நமது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புள்ள ஒரு கட்சி, இரகசிய சேவையால் கட்டுப்படுத்தப்படுவது முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. ஏற்கனவே நோயுற்றிருக்கும் அல்லது உடல்நல குறைபாடுகள் உள்ள குடும்பங்களின் பாதுகாப்பை வேறு எந்தக் கட்சி கவனத்தில் கொண்டுள்ளது? மற்ற அரசியல் கட்சிகள் பொதுவாக இந்த குடும்பங்களைப் புறக்கணிக்கின்றன. அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடுகாட்டப்படுவதோடு மற்றும் களங்கப்படுத்தப்படுகின்றார்கள்!
பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்களுடன் இணைந்து நின்று #schattenfamilien உடன் போராடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும். இதனால் தான் அவர்கள் தொற்றுநோய்க்காலத்தில் மறக்கப்படாது இருந்தனர். ஜனநாயகம் என்பது இக்குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் பாதுகாப்பதுமாகும்.
'இராணுவவாதத்தை விமர்சிப்பது மட்டும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் (இரகசிய சேவை என்று அழைக்கப்படும்) மூலம் கண்காணிக்கப்படுவதற்கு போதுமானது என நியாயப்படுத்துவது அச்சமூட்டுவதாக உள்ளது' என்று சாக்சோனி-அன்ஹால்டில் தொழிற்கல்விக்கூடத்தில் பயிலும் கட்சியின் ஆதரவாளரான லாரா கூறுகிறார்:
எந்தவொரு உறுதியான காரணமும் இல்லாமல் ஜனநாயக விரோதக் கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் கண்காணிப்பு நியாயப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், சமூக அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய எங்கள் கருத்துக்கள் தடைசெய்யப்படவில்லை.
ஆனால் குறிப்பாக முதலாளித்துவம் மீதான இந்த விமர்சனம் மட்டுமே சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு 'இடதுசாரி தீவிரவாத' அமைப்பாக ஆக்குகிறது என்று இரகசிய சேவை கூறுகிறது. அதன் பார்வையில், நீங்கள் சோசலிசத்தில் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தால், நீங்கள் ஏற்கனவே அரசியலமைப்பிற்கு முரணானவராக கருதப்படுகிறீர்கள். இடதுசாரி குழுக்கள் மற்றும் அமைப்புகளின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் அல்லது இந்த குழுக்களை தடை செய்யும் இந்த முயற்சி நடக்கக்கூடாது. இது நமது மனித உரிமைகள் மீதான ஆதாரமற்ற தாக்குதலாகும்.
ஹெஸ்ஸ நகரில் படிக்கும் டானியல் இன்ஸ்டாகிராமில்: 'அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கான கருவியாகும்” என எழுதினார்.
முதலாளித்துவத்தின் ஒரு கருவியாக, அது, உங்கள் கட்சி உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு சவால் விடும் அனைத்தையும் எதிர்க்கிறது. நான் ஒரு ட்ரொட்ஸவாதி அல்ல, ஆனால் அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், உங்களுக்கு எனது முழு ஐக்கியமும் உள்ளது.
பவேரியாவில் பராமரிப்புப் பணியாளராகப் பணிபுரியும் மார்க்கோ, ஊனமுற்றோருக்கான இல்லங்களில் கோவிட்-19 இன் கொலைகார விளைவுகளைப் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்கு முன்பு கூறியிருக்கிறார். எங்களுக்கு அவர் பின்வருமாறு எழுதினார்:
ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை மதிக்கும் வரை, ஒரு ஜனநாயகம் எதிர்கருத்துள்ளவர்களின் சுதந்திரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். செல்வாக்கு செலுத்தும் குழுக்களின் பாரிய சக்தியால் இப்போது தெரிகிறவாறு அரசியலில் செல்வாக்கு பெற பணத்தைப் பயன்படுத்த முடியாத ஒவ்வொரு நபரின் குரல் சமமாக எடைபோடப்படும் ஒரு சமத்துவமான சமுதாயத்தை ஆதரிக்கும் ஒரு கட்சியைக் கண்காணிப்பதை நான் கண்டிக்கிறேன்.
என் கருத்துப்படி, நிச்சயமாக தற்போதைய கூட்டாட்சி குடியரசின் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்திற்கு நல்ல ஒரு விளக்கம். வெகுஜனங்களை தொற்றுக்குள்ளாக்கும் அரசியலைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் தலையிடாதது பற்றி இதை கேள்விக்குரியதாகக் கருதுகிறேன். அதே நேரத்தில் மிக உயர்ந்த அடிப்படை உரிமையான வேறொருவராலும் உடலியல்ரீதியாக பாதிக்கமுடியாத உரிமை ஏன் பாதுகாக்கப்படவில்லை.
இந்த நிலைமைகளின் கீழ், சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச முன்னோக்கு விரைவாக செல்வாக்கு பெறுகிறது என ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது என மூனிச் நகரில் வசிக்கும் ஒரு இளம் வாகன தொழில்நுட்ப வல்லுநரான அன்டி விளக்குகிறார்.
சமூக சமத்துவமின்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போர், பாசிசம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகிய முதலாளித்துவத்தால் ஏற்படும் அனைத்து பாரிய சமூகப் பிரச்சனைகளுக்கும் எதிராகப் பேசும் ஒரு கட்சி இரகசிய சேவையின் ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்படும்போது அது மிகவும் தெளிவாக காட்டுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சமூக மோதல்கள் சர்வதேச அளவில் தீவிரமடைந்து விரிவடைந்து வரும் நிலையில் கொலைகார 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கைகள் செயல்படுத்தப்படும் நேரத்தில் இது நடக்கிறது.
இது குறிப்பாக வாகனத் துறையில் உலகளாவிய வேலைநிறுத்தங்களில் தெளிவாகத் தெரிகிறது. தொழிலாளர்களின் இழப்பில் இலாபத்தைப் பாதுகாப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அங்கு பாரிய வேலை வெட்டுக்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்களை எதிர்த்துப் போராட, அரசாங்கம் இந்த உணர்வை வெளிப்படுத்தும் மற்றும் அனுப்பும் ஒவ்வொரு சுதந்திரக் குரலையும் மற்றும் கட்சியையும் தடை செய்து கண்காணித்து வருகிறது. ஏனெனில் அரசியல் போராட்டம் அனைத்து ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும்!
நாஜி சர்வாதிகாரத்தின் கீழ் சோசலிஸ்டுகள் மற்றும் போர் எதிர்ப்பாளர்கள் துன்புறுத்தப்பட்டதை தொடர்புபடுத்தி டிரெஸ்டன் நகரில் இருந்து டானியல் எழுதினார்:
அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்திற்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் நான் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்புகிறேன். சோசலிச மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகள் தண்டிக்கப்படக்கூடிய மிகவும் ஆபத்தான அடிப்படையை சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தயார்படுத்துகின்றன. மூன்றாம் குடியரசில் நடந்ததைப் போல, எதிர்காலத்தில், பின்பற்றப்படும் கருத்துகளின் அடிப்படையில் நீதி வழங்குதலை நான் பார்க்க விரும்பவில்லை.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக ஜேர்மனியில் நிலவும் தன்னிச்சையான அதிகாரங்கள், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பெரும் எதிர்ப்பு, உலக சோசலிச வலைத் தளத்திற்கு கிடைத்த பல செய்திகளால் வெளிப்படுத்தப்படுகிறது.
ஜேர்மனியில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜோசுவா பின்வருமாறு கூறினார்:
இராணுவவாதம், போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான அதன் அயராத போராட்டத்தின் காரணமாக சோசலிச சமத்துவக் கட்சி அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் கண்காணிப்புக்கு உள்ளாவது ஆளும் உயரடுக்கின் வலதுசாரி நோக்கிய திருப்பத்தின் தெளிவான வெளிப்பாடாகும். அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் நவ-நாஜி NSU அமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்ததாக வெளிவந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதை எதிர்க்கும் அனைத்து சக்திகளும் குற்றமாக்கப்பட வேண்டும் என்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி ஆரம்பம் மட்டுமே. நவ-நாஜிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கலைஞர்கள் அல்லது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் படைப்புகளை அச்சிடும் பதிப்பாளர்களும் விரைவில் இதைத் பின்தொடரப்படுவார்கள். ஆளும் வர்க்கத்தின் கொலைகார கொரோனா வைரஸ் கொள்கைக்கு எதிராக, விஞ்ஞான சோசலிசக் கண்ணோட்டத்துடன் அதை எதிர்த்து இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் ஒரே சக்தி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே!
சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல், அனைத்து ஜனநாயக உரிமைகள் மீதான பொதுவான தாக்குதலின் தொடக்கமாகும். இவற்றைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரும் சோசலிச சமத்துவக் கட்சியையும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் இந்த மனுவில் கையெழுத்திட வேண்டும்!
நியூயோர்க்கில் இருந்து ஹார்வி லிச்ட்மன் எழுதினார்:
நியூ யோர்க் நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியராக, சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதலை முழு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாக நான் எதிர்க்கிறேன். ஒரு சோசலிச மாற்றுடன் முதலாளித்துவத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சுரண்டல், தொற்றுநோய், சமூக சமத்துவமின்மை, போர், காலநிலை மாற்றம் மற்றும் குறிப்பாக பாசிச சர்வாதிகாரத்தைப் பின்தொடர்வதை எதிர்ப்பதற்கான திறவுகோலாகும்.
பவேரியாவைச் சேர்ந்த மிரியம் விளக்கினார்:
என் மகன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சி வழக்கு பற்றி அறிந்தேன். சோசலிச சமத்துவக் கட்சி, 'இடதுசாரி தீவிரவாதி' என வகைப்படுத்தப்பட்டு அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தால் கண்காணிக்கப்படுவது முற்றிலும் சட்டவிரோதமானது என நான் கருதுகிறேன். கட்சி வன்முறையானதும் இல்லை, மற்றவர்களை வன்முறைக்கு அழைப்பதும் இல்லை. நான் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் இல்லை. ஆனால் முதலாளித்துவம் மற்றும் குறிப்பாக தொற்றுநோய்களின்போது அதன் அரசியல் பற்றிய அவர்களின் விமர்சனங்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஜேர்மனிய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டும் இந்த ஜனநாயக விரோத வழிமுறைகள் மூலம், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம், தான் பாதுகாப்பதாக கூறும் அரசியலமைப்பை கைவிடுகிறது. ஒரு உறுதியான ஜனநாயகவாதி என்ற வகையில் சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கின்றேன்.
டெக்சாஸைச் சேர்ந்த சேஸ் லாரன்ஸ் எழுதினார்:
செய்தியைப் பரப்புங்கள்: சோசலிச சமத்துவக் கட்சி மீது கைவைக்காதே! அமெரிக்காவில் SGP இன் சகோதரக் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியின் இன் உறுப்பினராக, சோசலிச சமத்துவக் கட்சியை குற்றவாளியாக்க அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் நடத்திய தாக்குதல்களை நான் எதிர்க்கிறேன். இது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் எதிர்க்கப்பட வேண்டும். ஜேர்மன் ஏகாதிபத்தியம் இராணுவவாதத்திற்கும் பாசிசத்திற்கும் புத்துயிர் கொடுக்கையில் ஜேர்மனியில் சோசலிச அரசியலை குற்றமயமாக்கல் நடைபெறுகிறது, மேலும் அது மற்றும் உலக ஏகாதிபத்தியம் மனிதகுலத்திற்கு ஒரு இருத்தலுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் அணுசக்தி உலகப் போரை நோக்கி உருண்டு செல்கின்றது. சோசலிச கருத்துக்கள் தொழிலாள வர்க்கத்தால் கேட்கப்பட வேண்டும், இளைஞர்களால் கேட்கப்பட வேண்டும், இவை, பாசிசம் மற்றும் போருக்கு மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான ஆயுதங்களாகும். இதனால்தான் ஆளும் வர்க்கம், அதை மௌனமாக்க முற்படுகிறது, எல்லாவற்றுக்கும் மேலாக சோசலிசத்தினால் ஆயுதமயமாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு அஞ்சுகிறது!
மேலும் படிக்க
- புதிய சோசலிச எதிர்ப்பு சட்டங்களை நிறுத்து! ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கவும்!
- ஜேர்மனிய இரகசிய சேவையானது உத்தியோகபூர்வமாக ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியை "சந்தேகத்திற்குரிய வலதுசாரி தீவிரவாத வகை" என அடையாளப்படுத்துகிறது
- வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!