ரஷ்யக் கொடி ஏந்திய எண்ணெய்க் கப்பலை கைப்பற்றி, வெனிசுவேலா எண்ணெயை சூறையாடியுள்ள ட்ரம்ப், கிரீன்லாந்தைத் தாக்கப் போவதாக மிரட்டுகிறார்
கடந்த சனிக்கிழமை, வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதல் மற்றும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் உலகளாவிய கொள்ளை நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ரஷ்ய கடற்படையுடனான மோதலுக்கு மத்தியில், நடுக்கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அத்துடன் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள வெனிசுவேலாவின் எண்ணெயைச் சூறையாடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்காக நேட்டோ (NATO) நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவதே ஒரு "விருப்பத் தேர்வாக" இருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
