உலக சோசலிச வலைத் தளத்தினால் நடத்தப்படும் அவசர இணையவழி கூட்டம்

ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய அழித்தொழிப்புப் போரை நிறுத்து!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரை எதிர்கொள்வதற்கும், அதை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்கும் மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக சோசலிச வலைத் தளம் ஓர் அவசர இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளப் பதிவு செய்யுமாறு வாசகர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு பாரிய அட்டூழியம் நடந்து கொண்டிருக்கிறது. ஈரானிய சமூகத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு போரை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், நாகரிகத்தின் பெரும் மையங்களான — தெஹ்ரான், இஸ்பஹான், கோம் — குண்டுவீசி அழிக்கப்படுகின்றன.

வெனிசுலாவைத் தாக்கியும், கியூபாவை நெரிக்க முயன்றும் வரும் ட்ரம்ப் நிர்வாகம், இப்போது மற்ற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் தனது வன்முறைப் பிரச்சாரத்தை மத்திய கிழக்கு மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவுபடுத்தியுள்ளது. காசாவில் நடந்தவை ஒரு ஒத்திகையே. இப்போது 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு இலக்காக வைக்கப்பட்டுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தை அழிப்பதுடன் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தும் ஒரு பேரழிவான போராக மாறும் அபாயமும் உள்ளது.

ட்ரம்ப்பும் இஸ்ரேலிய ஆட்சியும் இந்தப் போரை முன்னின்று நடத்தும் அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு உடந்தையாக உள்ளனர். பெருநிறுவன ஊடகங்கள் அரசின் ஒரு பிரச்சாரக் கருவியாகச் செயல்படுவதோடு, ஐரோப்பிய சக்திகளும் வாஷிங்டனுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

இந்தப் போரைப் பற்றிய உண்மையைச் சொல்வதும், அதன் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்துவதும், போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தை வகுப்பதும் இக்கூட்டத்தின் நோக்கமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான சக்தியாக அணிதிரட்டுவதாகும்.

இந்த விவாதத்தை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழிநடத்துவார்.

Loading