இலங்கை பல்கலைக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் சம்பந்தமாக சோ.ச.க./IYSSE நடத்திய கூட்டத்திற்கு உறுதியான பிதிபலிப்பு கிடைத்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான முன்னோக்கிய பாதை பற்றி கலந்துறையாடுவதற்கு கடந்த வெள்ளி அன்று ஒரு வெற்றிகரமான இணையவழி கூட்டத்தை நடத்தியது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பதினைந்து பேரும் பல மாணவர்களும் உட்பட இந்த நிகழ்வில் சுமார் அறுபது பேர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 17 அரச பல்கலைக்கழகங்களில் இருந்து கிட்டத்திட்ட 13,000 கல்விசாரா ஊழியர்கள் மே 2 முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் உள்ளனர். அவர்கள் மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவில் 25 சதவீத அதிகரிப்பையும் ”சம்பள முரண்பாட்டை” அகற்றுவதற்கு 15 சதவீத அதிகரிப்பையும் கோருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திற்கு மொரட்டுவ பலகலைக்கழக ஊழியரும் சோ.ச.க.யின் முன்னணி உறுப்பினருமான தேஹின் வசந்த தலைமைதாங்கினார். அவர் சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக அவர் மேற்கொள்ளும் சளைக்காத போராட்டத்தால் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் அவார். தற்போது 44 ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வேலைநிறுத்தமானது தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது என வசந்த அந்தக் கூட்டத்தில் கூறினார்.

“பல்கலைக்கழக ஊழியர்கள் அதிகரித்துச்செல்லும் சகிக்க முடியாத வாழ்க்கைச் செலவை சமாளிக்க சம்பள அதிகரிப்பை கோரி இந்த போராட்டத்துக்கு வந்துள்ளனர். அங்கத்தவர்களின் ’அழுத்தம்’ காரணமாகவே வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சம்பளக் கோரிக்கைக்கு மட்டுமே மட்டுப்படுத்தியுள்ளனர்.

“எவ்வாறாயினும், விக்கிரமசிங்க, நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு எந்த சம்பள அதிகரிப்பையும் அரசாங்கம் வழங்காது என வலியுறுத்தியுள்ளார். கல்வி-சாரா ஊழியர்களோ அல்லது பிற அரச துறை தொழிலாளர்களோ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமது கோரிக்கைகளை வெல்ல முடியாது என்பது தெளிவாகின்றது. சம்பள அதிகரிப்பு உட்பட தமது சமூக கோரிக்கைகளை வெல்வதற்கு தொழிலாள வரக்த்துக்கு ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியம் ஆகும்”

பழிவாங்கப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஆதரவாக, 1 பெப்பிரவரி 2024 கொழும்பில் நடந்த ஒரு பகிரங்க கூட்டத்தில், தேஹின் வசந்த ஒரு அறிக்கையை முன்வைக்கின்றார்.

வசந்த, தொழிலாளர்களின் சரிந்துபோயுள்ள சம்பள சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப அங்கத்தவர்களை தொழிற்சங்கங்கள் அனுமதிப்பதில்லை என தெளிபடுத்தி, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஜனநாயக-விரோத வழிமுறைகளை சுட்டிக்காட்டினார். இந்த தொழிற்சங்க அதிகாரிகள் இத்தகைய கோரிக்கைகளை வெல்ல எவ்வாறு போராட்டத்தை அபிவிருத்தி செய்வது என்பது பற்றி எந்தவொரு ஜனநாயக கலந்துரையாடலையும் அனுமதித்ததில்லை.

தொழிற்சங்கத் தலைவர்களே தீர்மானிக்கின்றார்கள் அங்கத்தவர்கள் அதற்கு அடிபணியவேண்டும்! வடக்கு, கிழக்கு உட்பட பிரதேசங்களில் இருந்து சுமார் 4,000 தொழிலாளர்கள் கலந்துகொண்ட பாரிய போராட்டம் ஒன்று மே 7 அன்று கொழும்பில் நடந்த போதிலும், தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைகளை தற்போது மட்டுப்படுத்தியுள்ளன“, என அவர் கூறினார்.

வசந்த, வேலைநிறுத்தம் செய்யும் தனது சக கல்வி-சாரா ஊழியர்களை, உடனடியாக நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஐக்கியப்ப்பட்ட போராட்டத்தில் ஏனைய துறைத் தொழிலாள வர்க்கத்துடன் இணையுமாறும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதான உரை நிகழ்த்திய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில், இலங்கை முழுதும் உள்ள தொழிலாளர்கள் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்ததை நன்கு அவதானிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் சகலதுறைத் தொழிலாள வர்க்கத்தினதும் சம்பள அதிகரிப்பு கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்துள்ளது, என அவர் கூறினார். மாறாக, அது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்யைின் வழியில் தாக்குதல்களை அதிகரிக்கின்றது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், ரூபாவின் பெறுமதியை கீழிறக்குதல் மற்றும் வரி அதிகரித்தல் ஊடாக அத்தியவசிய பண்டங்களின் விலையை அதிகரித்தல், சமூக சேவைகள் மீதான கூர்மையான சம்பள வெட்டுக்களை அழுல்படுத்துதல் என்பன இதில் அடங்கும்.

விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்புக்கு நிதி இல்லை என கூறுவதோடு நாட்டின் பொருளாதார பேரழிவின் சுமையை தொழிலாளர்கள் தாங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். “ஆனால் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் ஏன் சுமக்க வேண்டும்.? என சுனில் கேள்வியெழுப்பினார்.

காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போருக்கு எதிராக 21 நவம்பர் 2023 அன்று கொழும்பில் நடந்த கூட்டத்தில் W.A. சுனில் உறையாற்றிய போது.

கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்றது என்பதை ”புரிந்துகொண்டுள்ளதாகவும்” அதை தாம் ”ஏற்றுக்கொள்வதாகவும்” பகிரங்கமாக அறிவித்தனர்.

“ஆனால், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது தினிக்கும் கட்டுப்பாடுகளை தொழிலாளர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? என சுனில் கேட்டார். தொழிற்சங்க அதிகாரத்துவம் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை ஏனைய துறைத் தொழிலாளர்கிளிடம் இருந்து தனிமைப்படுத்தும் அதே வேளை, ஏனைய தொழிற்சங்க வகையறாக்களும் அதையே செய்கின்றன.”

13 ஜூன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை பாராட்டிய போதிலும், பொருளாதாரம் இன்னமும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையிலேயே இருப்பதாக கூறியதை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கை, கடன் ஸ்திரத்தன்மைக்கான பாதை, கத்திமுனையிலேயே உள்ளது என எச்சரித்தது.

“தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்திற்கு எந்த ஒரு சலுகைகளும் அரசாங்கம் வழங்க கூடாது, என்பதே இதன் அர்த்தம் ஆகும்” என்று சுனில் விளக்கினார்.

“நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ முறைமையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கிடையாது. இலங்கையில் நிதி நெருக்கடியானது உலக பொருளாதார நெருக்கடியின் ஒரு பாகம் ஆகும். இந்த நெருக்கடியே ஊதியங்கள், தொழில்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க, பிரதான முதலாளித்துவ நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்களை போராடுவதற்கு உந்தித் தள்ளுகின்றது.

“தொழிலாளர்களின் பிரச்சினைகள், வரவிருக்கும் தேர்தல்களின் பின்னர் தீர்க்கப்படும் என தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளும் கூறும் பொய் பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல்கள் ஊடாக அதிகாரத்துக்கு வரும் எந்த முதலாளித்துவ அரசாங்கமும் வெகுஜனங்களின் பிரச்சினையைத் தீர்க்காது, மாறாக, அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்தி, தொழிலாளர்களின் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கும். இலங்கைளில் உள்ள சகல முதலாளித்துவ கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை அமுல்படுத்த அர்பணித்துக்கொண்டுள்ளன. இப்போது தேவைப்பபடுவது முதலாளித்துவ ஆட்சியல்ல மாறாக தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கமே ஆகும்.”

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் கல்விசாரா ஊழியர்ளை தமது ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, தமது போராட்டங்களை சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறு, சுனில் தொழிலாளர்களளை வலியுறுத்தினார்.

“தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த நடவடிக்கை குழுக்களில் எந்தவொரு முதலாளித்துவ கட்சிகளோ அல்லது தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்களோ இணைந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது” என அவர் கூறினார். இந்த குழுக்கள் தமது சொந்தக் கோரிக்ககைகளை தீர்மானித்து அவற்றுக்காக போராட வேண்டும். அவர்கள் ஏனைய தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவை வெல்வதற்கு போராடி உலகலாவிய ஐக்கியத்துக்காக உலகத் தொழிலாளர்களை நோக்கித் திரும்ப வேண்டும்.”

18 ஜூன் 2024 அன்று கொழும்பில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட, வேலைநிறுத்தம் செய்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த வேலைத்திட்டத்திற்கு மிகவும் விரோதமானது என சுனில் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் 30 அன்று, வசந்த ம்றறும் சோ.ச.க.யின் இன்னொரு உறுப்பினரான லக்ஷ்மன் பெர்னாண்டோவும் இன்திக பெரேரா, சுரங்க பியவர்தன ஆகியோரால் தாக்கப்பட்டதை கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார். அவர்கள் ஆளும் கட்சியுடன் நெருக்கமாக உள்ள பொதுஜன முற்போக்கு சேவை சங்கத்தின் மொரட்டுவ பல்பலைக்கழக கிளையின் தலைவரும் செயலாளரும் ஆவர். வசந்த இந்த அதிகாரிகளால் தாக்கப்பட்டதற்கு பிரதான காரணம், அவர் இந்த சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடியதே ஆகும்.

தொழிலாளர்கள், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் பொது வேலை நிறுத்தத்திற்கு தயாராவதோடு பாரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களையும் பொது உடைமையின் கீழ் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுபபாட்டுக்குள் வைத்தல், வெளிநாட்டு கடன்களை தள்ளுபடி செய்தல் உட்பட சோசலிசக் கொள்கைளுக்காகப் போராடுவதற்கான அவசியத்தை சுனில் விளக்கினார்.

கலந்துரையாடல் அமர்வின் போது, இந்த வேலைநிறுத்தமானது மாணவர்களின் கல்வியை குழுப்புவதாகவும் அவர்களின் பரீட்சைகளை பிற்போடுவதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்ற பிரச்சினைகள் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்துக்குள் வரும் போதும் எப்போதும் எழுப்பபடுவதை சுட்டிக்காட்டிய சோ.ச.க.யின் அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க இந்த கேள்விக்குப் பதிலளித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதும் இதே போன்று தான் அவர்களும் விமர்சனத்துக்குள்ளாகினர். மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் இவ்வாறே கண்டிக்கப்பட்டனர், என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வேலைநிறுத்தமானது மாணவர்களின் வாழ்க்கையில் இருந்து ஒரு ஆண்டை இல்லாமல் செய்கின்றது எனக் கூறி, பரீட்சைகளை பிற்போடுவதற்காகவும் மாணவர்களின் கல்வியை சீர்குழைப்பதற்காகவும் வேலைநிறுத்தம் செய்பவர்களை கண்டனம் செய்த டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை ரட்நாயக்க சுட்டிக்காட்டினார்.

“இந்த பொய்ப்பிரச்சாரத்துக்குள் அகப்பட வேண்டாம்” என கூட்டத்தில் பங்குபற்றியவர்களை எச்சரித்த அவர், வெகுஜனங்களின் வாழ்க்கையை உண்மையில் குழப்புபவர்கள் முதலாளித்துவ வர்க்கமும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் தான் என சுட்டிக்காட்டினார். இந்த விடயம் எம் மீது எவ்வாறு உடனடியாக தாக்கம் செலுத்துகின்றது என்ற அடிப்படையில் இல்லாமல் கவனமாக சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

”தொழிற்சங்கங்களே இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி அரசாங்கத்தால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அதே சிக்கன நடவக்கைளையே கல்விசாரா ஊழியர்களும் முகங்கொடுத்தாலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

“சம்பள உயர்வுக்கும் ஏயை சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பணம் இல்லை என அரசாங்கம் கூறினாலும், தொழிலாளர்களைப் பிழிந்து எடுத்து சம்பாதிக்கும் பணத்தை ஏகாதிபத்தியவாதிகளுக்கு. அதாவது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச்செலுத்த செலவு செய்கின்றது. முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்வு கிடையாது. சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் உதவியுடன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாள வர்க்கத்திடம் ஒரு வேலைத்திட்டம் இருக்க வேண்டும்,” என ரநாயக்க கூறினார்.

தற்போது நடைபெறும் வேலை நிறுத்தம் அரச பல்கலைக்கழ முறைமையின் வீழ்ச்சியை காணுமா? அதாவது தனியார் பல்கலைக்கழங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்குமா என ஒரு மாணவர் வினவினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுனில், கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியடையாது, மாறாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் ஒட்டுமொத்தமாக அரச பொது கல்வியின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாரிய வெட்டுக்களாலேயே இலவசக் கல்வி அழிக்கப்படும் என விளக்கினார்.

கல்வியைத் தனியார்மயமாக்குதல் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்தது. அரசாங்க கொள்கைகளை தோற்கடிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இலவசக் கல்வியைப் பாதுகாக்க முடியும், என அவர் மேலும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க, ஒரு சரியான அரசாங்கத்தை வரவிருக்கும் தேர்தல் உருவாக்கும் என நோக்க முடியுமா என கூட்டத்தில் பங்குபற்றிய வசந்த என்பவர் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சுனில், “மக்களின் பிரச்சினைகள் ஆட்சிக்கு வரும் அடுத்த முதலாளித்துவ அரசாங்கத்தால் தீர்க்கப்படும் என நம்புவது ஒரு பாரதூரமான பிழையாகும். ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே தொடர்ந்து முன்னெடுக்கும்.

“இலங்கையின் நெருக்கடியானது, மத்திய கிழக்கில் காஸாவில் இனப்படுகொலையுடன் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஏகாதிபத்தியம் போரைத் தீவிரப்படுத்துவதால் ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பாகம் ஆகும்.

“பொருளாதார நெருக்கடியையும் மக்களின் பிரச்சினைகளையும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தி்ன் ஒரு பாகமாக சோசலிச பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகம் செய்யும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் கீழ் மாத்திரமே தீர்க்க முடியும்.”

Loading