இந்தியா: நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை மீறி திட்டமிட்ட ஆலை மூடலுக்கு எதிராக சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அருகிலுள்ள ஃபோர்டு மோட்டார்ஸ் அசெம்பிளி ஆலையில் 1,500 க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்.

நிர்வாகத்தின் இறுதி எச்சரிக்கை மற்றும் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தை வேண்டுமென்றே தனிமைப்படுத்திய போதிலும் ஃபோர்டு தொழிலாளர்கள் இப்போது நான்காவது வார வேலை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம் செய்யும் ஃபோர்டு சென்னை தொழிலாளர்கள் தங்கள் வேலைப் பாதுகாப்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். (WSWS Media)

நிர்வாகம் அறிவித்த அதிகப்படியான பணி நீக்க ஓய்வு ஊதிய தொகையை அவர்கள் நிராகரித்து, அதற்குப் பதிலாக வேலைப் பாதுகாப்பிற்காகப் போராடுகிறார்கள்.

கடந்த செப்டம்பரில், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை நிறுத்தப் போவதாக ஃபோர்டு அறிவித்தது, சென்னை ஆலையையும், மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள மற்றொன்றையும் மூடப்போவதாக அறிவித்தது. மூடல்கள் நேரடியாக 4,000 வேலைகளை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், முக்கியமாக வாகன உதிரிபாகங்களில் உள்ள துணை வேலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், சென்னை தொழிற்சாலை மூடப்படுவதால் மட்டும் 40,000 வேலை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் ஆலை மூடப்படுவதற்கு முன்னதாக 1,400 க்கும் மேற்பட்ட கார்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் திட்டங்களை தற்போதைய வேலை நடவடிக்கை ஏற்கனவே சீர்குலைத்துள்ளது.

தி இந்து மற்றும் எகனாமிக் டைம்ஸ் போன்ற பெருநிறுவன ஊடகங்கள், நிர்வாகத்தை ஆவலுடன் எதிரொலிக்கின்றன, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியதாகவும், உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் செய்தி வெளியிட்டன. ஆனால் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து நாம் அறிந்தது போல், உண்மையில் 40க்கும் குறைவான நிரந்தரத் தொழிலாளர்களே பணிக்கு வந்துள்ளனர் மற்றும் உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை.

நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பீட்டளவில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பணி நடவடிக்கையில் பங்கேற்கும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் நிறுவனம் பழிவாங்கினால் அல்லது அவர்களுக்கு தரவேண்டிய பணி நீக்க ஓய்வூதிய தொகையை குறைத்தால் அவர்கள் இழப்பது அதிகமாக இருக்கும்.

வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஃபோர்டு நிர்வாகம் வேலைநிறுத்தங்களால் வேலையிழந்த பல டஜன் பயிற்சியாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மீண்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளது.

வேலைநிறுத்தத்தை முறியடிக்க சில தொழிலாளர்களை சேர்க்கும் முயற்சியில், கடந்த வாரம் ஃபோர்டு நிர்வாகம் அதன் முந்தைய சலுகையான 87 நாட்களுக்கான பணி நீக்க ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என்ற அடிப்படையிலிருந்து அதனை 110 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்தது. இதற்கு மேல் இரண்டாவது தொகையாக மே மாத இறுதியில் 87 நாட்களுக்கு மேலாக உழைத்த இணையான ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த சலுகையில் 2024 மார்ச் வரை மருத்துவக் காப்பீடும் கொடுக்கப்படும் என்பதும் அறிவிக்கப்பட்டது.

1,400 கார்களின் கடைசி உற்பத்தியை முடித்து ஆலையை நிரந்தரமாக மூட நிர்வாகம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. இருப்பினும், பெரும்பாலான இளைய தொழிலாளர்கள் தங்கள் வேலைப் பாதுகாப்பிற்கான கோரிக்கையில் இன்னும் உறுதியாக நின்று தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்.

ஃபோர்டு நிர்வாகம் உற்பத்தியை மீண்டும் தொடங்க செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது மற்றும் தொழிலாளர்களுக்கான அதன் மேம்படுத்தப்பட்ட பணி நீக்க ஓய்வூதிய தொகையை ஜூன் 13-18லிருந்து ஜூன் 22 க்கு நீடித்துள்ளது.

அதே நேரத்தில், பணி நீக்க ஓய்வூதிய தொகையை ஏற்றுக் கொள்ளாத மற்றும் அதன் காலக்கெடுவைத் தாண்டி வேலைநிறுத்தத்தைத் தொடரும் தொழிலாளர்கள் 'சட்டரீதியான விளைவுகளை' எதிர்கொள்ள நேரிடும் என்று ஃபோர்டு நிர்வாகம் ஆணவத்துடன் அச்சுறுத்தியுள்ளது. அது ஏற்கனவே இருக்கும் நிலை ஆணை ஜூன் 14இன் உத்தரவுகளின்படி 'ஊதிய இழப்பை' திணித்துள்ளது மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைக்காவிட்டால், ஏற்றுமதிக்காக மீதமுள்ள 1,400 கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது.

தற்சமயம், ஃபோர்டின் குஜராத் ஆலையை டாடா மோட்டார்ஸ் எந்த வேலையும் குறைக்காமல் கையகப்படுத்தியுள்ளது. சென்னை ஃபோர்டு தொழிலாளர்களும் அதே மாதிரியான பணிப் பாதுகாப்பைக் கோருகின்றனர்.

தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலை நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் துரோகத்தனமாக தனிமைப்படுத்தியதன் மூலம் ஃபோர்டு இந்தியா நிர்வாகம் அதன் வேலைநிறுத்தத்தை முறிக்கும் நடவடிக்கைகளில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் (CFEU) மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்க கூட்டமைப்புகள்-இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை அடங்கும். அவை முறையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), CITU மற்றும் AITUC ஆகியவை இந்தியா முழுவதும் உள்ளதைப் போலவே தமிழ்நாட்டில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

தற்போதைய வேலை நடவடிக்கைக்கு CFEU கூட அழைப்பு விடுக்கவில்லை. மாறாக இது போர்க்குணமிக்க இளம் தொழிலாளர்களால் எடுக்கப்பட்ட முன் முயற்சியாகும். CFEU பின்னர் வேலைநிறுத்தத்திற்கு தனது ஆதரவை அறிவித்தாலும், அது தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பிற்கான கோரிக்கையை ஆதரிக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு மிக உயர்வான பணி நீக்க ஓய்வூதிய தொகையை ஊக்குவிக்கிறது, அதாவது, தொழிலாளர்களை பணத்திற்காக தங்கள் வேலையை தியாகம் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. ஸ்ராலினிச கட்சிகள், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், CFEU தொழிலாளர்களை நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறது, அது வேலைநிறுத்தம் செய்பவர்களை தனிமைப்படுத்தி, அரசாங்க தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் 2021 மே மாதம் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பயனற்ற முறையீடுகளை செய்யுமாறு அவர்களை திசை திருப்பின.

ஜூன் 9 அன்று ஸ்ராலினிச சிஐடியு அதன் மாநில உதவிச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் மறைமலைநகர் அருகே ஃபோர்டு ஆலை மூடலை எதிர்ப்பதாகக் கூறி ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. வேலைநிறுத்தம் செய்யும் ஃபோர்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் பிற இடங்களிலோ என்பது ஒருபுறம் இருக்க, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மறைமலைநகர் தொழிற்துறை மண்டலங்களில் உள்ள தொழில்துறை தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்க அது வேண்டுமென்றே மறுத்து விட்டது. மாறாக ஆலை மூடலைத் தடுக்க திமுக தலைமையிலான மாநில அரசு மற்றும் தொழிலாளர் அமைச்சகம் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

'செங்கல்பட்டு மாவட்டம் சுரண்டல் மற்றும் மலிவு உழைப்பு மண்டலமா?' என்ற சிடுமூஞ்சித்தனமான கேள்வியை எழுப்பியதன் மூலம் ஆலை மூடல் மற்றும் அதன் விளைவாக வேலைகள் அழிக்கப்படுவதை உள்ளூர் அல்லது பிராந்திய நடவடிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் சித்தரித்தது. ஃபோர்டு ஆலை அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களை வேறு இடங்களில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரிக்கும் ஸ்ராலினிச முயற்சியுடன் இது ஒத்துப்போகிறது. அவர்கள் அனைவருமே மிருகத்தனமான மற்றும் சுரண்டல் நிலைமைகளை எதிர் கொண்டுள்ள நிலையில் அதே பெரு வணிக – அரசாங்கம் தொழிலாளர்களின் வியர்வையை மேலும் இலாபமாக்கும் உந்துததலில் ஈடுபட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பல தசாப்தங்களாக அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ஸ்ராலினிஸ்டுகள், இந்தியா முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கி காட்டிக் கொடுப்பதில் நீண்ட சான்றை கொண்டுள்ளனர்.

2014ல், 4,000க்கும் மேற்பட்ட நோக்கியா இந்தியா தொழிலாளர்கள், சென்னையின் புறநகரில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) நோக்கியாவின் செல்போன் உற்பத்தி ஆலையை மூடும் அச்சுறுத்தலுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியபோது, தொழிலாளி வர்க்கத்தின் எந்த அணிதிரட்டலுக்கும் விரோதமாக CITU இருந்தது.

தொழில்துறை மண்டலத்தில் நாடுகடந்த பெருநிறுவனங்களின் மிருகத்தனமான சுரண்டலுக்கு எதிராக, ஜாதி அடிப்படையிலான பிராந்திய அரசியல் கட்சிகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற தொழிலாள வர்க்க விரோத சக்திகளுக்கு முறையீடு செய்யப்பட்டது, இதில். 2003ல் மாநில அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து ஒடுக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மாநில முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் இதில் அடக்கம்.

2010 இல், CITU இதேபோன்று 7,000 Foxcon மற்றும் 3,000 BYD தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்தது, அவர்கள் இதே போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடினர், இதில் மேம்பட்ட ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல் மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்டவை அடங்கும். இரண்டு வேலைநிறுத்தங்களும் தமிழ்நாட்டின் திமுக மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொண்டன.

தொழிலாள வர்க்கத்தின் கட்சிகளாக காட்டிக் கொள்ளும் ஸ்ராலினிசக் கட்சிகளின் துரோகப் பாத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மறைமலைநகரில் உள்ள தொழில்துறை மண்டலங்களில் கடந்த காலங்களில் ஸ்ராலினிச மற்றும் மாவோயிஸ்ட் தலைமையிலான தொழிற்சங்கங்கள் உட்பட தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் கூட்டமைப்புகளின் முழுமையான மௌனம், ஃபோர்டு நிர்வாகத்தின் கரங்களை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன. இது வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, உற்பத்தியை தொடங்குமாறு அசச்சுறுத்தியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் ஃபோர்டு தொழிலாளர்களிடையே பலமுறை தலையிட்டு, தொழிற்சங்கங்கள் சாராமல் தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுவை உருவாக்கித் தங்கள் போராட்டத்தை வழிநடத்தவும், தமிழ்நாட்டில் மற்ற தொழிலாளர்களுடன் ஒற்றுமைக்காகப் போராடவும் வேண்டும் என்று அவர்களுடன் விவாதித்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில். அந்த அரசியல் தலையீட்டின் ஒரு பகுதியாக, வேலைநிறுத்தம் செய்யும் ஃபோர்டு தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களின் ஆதரவாளருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த விவாதத்தில் பங்கேற்ற முன்னணி இளம் வேலைநிறுத்தக்காரர் ரமேஷ், 32, “உங்கள் அமைப்பு மட்டுமே உண்மையைச் சொல்கிறது மற்றும் நடவடிக்கைக் குழுக்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே ஒழுங்கமைக்க உதவுகிறது என்று நான் நம்புகிறேன். எங்கள் தொழிற்சங்கங்கள் கைகளை கட்டிக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றன. அவர்கள் எங்களை எங்கும் வழிநடத்தவில்லை. தொழிலாளர் ஆணையர்கள் ஃபோர்டு நிர்வாகத்தின் குரலை வெளிப்படையாக எதிரொலிக்கின்றனர். ஒரு காவல் ஆணையாளர், ‘30 மாத இழப்பீட்டுத் தொகை போதாதா?’ என்று கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வெளிப்படையாக மிரட்டினார்.

“திமுக தலைமையிலான மாநில அரசை விமர்சித்ததற்காக தொழிலாளர் ஆணையர்கள் கூட எங்களை மிரட்டியுள்ளனர். ஃபோர்டு நிறுவனத்தின் உதிரி பாகங்கள் உற்பத்திசெய்யும் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் மற்றும் முன்பு வேலைப் பாதுகாப்புக்காக போர்க்குணமிக்க போராட்டங்களில் ஈடுபட்ட ஃபோர்டு குஜராத் தொழிலாளர்களுடன், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர்-மறைமலைநகர் மண்டலத்தில் உள்ள மற்ற தொழில்துறை தொழிலாளர்களுடன் சேர வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இழப்பீட்டுத் தொகையை எங்களால் ஏற்க முடியாது மற்றும் ஏற்க மாட்டோம். பணி உறுதிக்காக இறுதிவரை போராடுவோம். நடவடிக்கைக் குழுக்களை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களைப் போன்ற இளம் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் உங்கள் அமைப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.'

வேலைநிறுத்தம் செய்யும் ஃபோர்டு தொழிலாளி இளையராஜா (WSWS Media)

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி நகரைச் சேர்ந்த நிரந்தரத் தொழிலாளி இளையராஜா, வயது 35, “எனக்கு இப்போதுதான் திருமணம் நடந்தது. நான் சிறு வயதிலிருந்தே வேலை செய்த ஆலை இப்போது மூடப்படப் போகிறது என்பதால் என் எதிர்காலம் முற்றிலும் நிச்சயமற்றதாகவும் இருளாகவும் இருக்கிறது. வேலைநிறுத்தம், நடவ்டிக்கைக் குழுக்கள் மூலம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். இந்த விரிவாக்கம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது இந்த மண்டலத்தில் உள்ள தொழிற்சங்கங்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் மற்றும் வெகுஜன வேலைநிறுத்தங்கள் ஆகியவை மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் எங்கள் தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் கூட்டு விவாதம் என்று அழைக்கப்படுவதை நோக்கி எங்கள் போராட்டங்களை உணர்வுபூர்வமாக தனிமைப்படுத்தியது. தொழிற்சங்கத் தலைவர்கள் உண்மையில் எங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் வெறுமனே ஒதுங்கி நிற்கிறார்கள். ஆனால் நிர்வாகம் இப்போது ‘சட்டவிரோத வேலைநிறுத்தம்’ என்று எங்களை மிரட்டி இப்போது சம்பளத்தை பறித்துவிட்டது. எங்கள் போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதே ஒரே வழி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

வேலை பாதுகாப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான ஃபோர்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அனைத்து அரசியல் முகவர்களுக்கும் சவால் விடுவதன் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். இதற்கு CFEU மற்றும் அனைத்து ஸ்ராலினிச-மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிடமிருந்து முழுமையாக முறித்துக் கொள்வது அவசியமானது. மற்றும் தொழிலாளர்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் உண்மையான சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் குழுவை அமைக்க வேண்டும், அது ஒரு சோசலிச மற்றும் மற்றும் சர்வதேச வேலை திட்டத்தில் கார்த் தொழிலாளர்களை

இந்தியா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் ஒரு ஐக்கியப்பட்ட நடவடிக்கையில் அணிதிரட்ட போராடும்.

Loading