மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தேசிய சுகாதார சேவை (NHS) அரை நூற்றாண்டில் எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை நெருங்கியுள்ளது. இது, BMJ இதழின் தலைமை ஆசிரியர் கம்ரான் அப்பாஸியும், சுகாதார சேவை இதழின் (HSJ) அலஸ்டெய்ர் மெக்லெல்லனும் ஒரு கூட்டுத் தலையங்கத்தில் விடுத்த எச்சரிக்கையாகும்.
பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கோவிட்-19 இன் பரவலுக்கு எதிராக எஞ்சியிருந்த அனைத்து பாதுகாப்புக்களையும் அகற்றி, 'சுதந்திர தினம்' என பிரகடனப்படுத்திய ஜூலை 19 ஆண்டு நிறைவுக்கு முன்னதாக, இந்த தலையங்கம் வெளியிடப்பட்டது. இந்த கொலைகார முடிவு ஏற்படுத்திய பேரழிவை இது விவரிக்கிறது.
கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் “தொற்றுநோய் முடிவதற்கு இன்னும் வெகுகாலம் பிடிக்கும் என்பதையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்புவது அவசியம் என்பதையும் அங்கீகரிக்கத் தவறியதற்கு” எதிராக ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.
வெப்ப அலையால் தேசிய சுகாதார சேவைக்கு (NHS) ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு, BMJ, HSJ இதழ்கள், NHS மற்றும் சமூக பாதுகாப்பிற்கான பல தசாப்த கால குறைந்த நிதி ஒதுக்கீடு உட்பட, ‘இந்த மிருகத்தனமான சூழ்நிலை பல காரணிகளின் உச்சம்’ என்று குறிப்பிடுகின்றன. ஆனால், “இப்போது ‘கோவிட் உடன் வாழ’ வைப்பதற்கான தேசத்தின் முயற்சி என்பது NHS இன் முதுகை உடைக்கும் வைக்கோல் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரமாகும்” என்கின்றன.
தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளின் நீண்டகால விளைவுகளை NHS எதிர்கொள்கிறது, அந்த நேரத்தில் அது தனது வழமையான வேலைகளை நிறுத்துவதன் மூலம் அல்லது மெதுவாக்குவதன் மூலம் நோய்தொற்றின் உச்சத்தை சமாளித்தது. 2022 ஆம் ஆண்டு மீட்சிக்கான ஆண்டாக இருக்க வேண்டும். ஆனால் அந்த இலக்கு, “கோவிட்-19, ஒருவேளை டிசம்பரில் குளிர்கால அலையாக இருக்குமே தவிர, ஆண்டின் பெரும்பகுதியில் ஒரு எரிச்சலூட்டும் நோய் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டது.
அதற்கு மாறாக, இங்கிலாந்து, ஜனவரியில் உச்சத்தில் இருந்த ஆரம்பகட்ட ஓமிக்ரோன் எழுச்சியாலும், மற்றும் ஓமிக்ரோனின் புதிய துணைமாறுபாடுகளான BA.4, BA.5 தொடர்பான “அடுத்தடுத்த இரண்டு கோவிட் அலைகளாலும், இவற்றின் உச்ச நிலைகளுக்கு இடையில் மூன்று மாதங்களுக்கும் குறைவான இடைவெளிகளே இருந்தன” பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற விகாரங்கள் ‘உலகளாவிய பரவலுக்கு விரைவில் தயாராக இருக்கும்.’
குறைவதற்கு பதிலாக, கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனை அனுமதிப்புக்கள் புதிய உச்சத்திற்கு உயர்ந்து வருகிறது, அதாவது, 2021 இல் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பெரும்பாலும் அதிகரித்து 6,000 க்கு குறைவாக இருந்தது, மற்றும் 2020 இல் 7,000 க்கு குறைவாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், 2022 இன் முதல் ஆறரை மாதங்களில் சராசரியாக 9,000 க்கும் மேலாக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓமிக்ரோன் மாறுபாடு குறைந்த தீவிரம் உள்ளது, அதாவது பாதிக்கப்பட்ட மருத்துவமனை நோயாளிகளில் 40 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் இந்த நோய்க்காக ‘முதன்மை’ சிகிச்சை பெறுகின்றனர். “ஆனால் கோவிட்-19 நோயறிதல் என்பது, பல நிலைமைகள், மோசமான விளைவுகள் மற்றும் நீண்ட மீட்பு காலம் ஆகியவற்றால் ஒரு சிக்கலான காரணியாக உள்ளது, மற்றும் அதன் விளைவாக சுகாதார ஊழியர்களுக்கு நோய் ஏற்படுவதுடன் அவர்கள் பணிக்கு வராமையும் நிகழ்கிறது. மேலும், “மருத்துவமனை சேர்க்கை புள்ளிவிபரங்கள் நெடுங்கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அலையென உயர்வதை மறைக்கின்றன, இப்போது இரண்டு மில்லியனாக உள்ளது மற்றும் ஒரு தலைமுறைக்கு சுகாதார சேவை மற்றும் நாட்டின் உற்பத்தித் திறன் மீதான பெரும் சுமையாக அது இருக்கும்.”
நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புக்கள், மற்றும் இறப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு உடைந்துவிட்டதாக கூறப்படுவதால், அரசாங்கத்தின் பதில் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக உள்ளது. “ஆனால் நோய்தொற்றுக்களுக்கும் மருத்துவமனை அனுமதிப்புக்களுக்கும் இடையேயான தொடர்பு தெளிவாக உடைக்கப்படவில்லை என்பதால், இந்த நோய் குறித்து ‘முதன்மை’ சிகிச்சை பெறுபவர்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்” என்று ஆசிரியர்கள் எதிர்வாதம் செய்கின்றனர்.
“இறப்புக்களைப் பொறுத்தவரை, சமீபத்திய ONS புள்ளிவிபரங்கள் 2022 இன் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த ‘கோவிட் சம்பந்தப்பட்ட’ 24,000 இறப்புக்களை குறிப்பிடுகின்றன, இது 2021 இன் கடைசி ஆறு மாதங்களில் நிகழ்ந்த 21,000 இறப்புக்களை விட அதிகமாகும். மேலும் “அனைத்து காரணங்களிலான அதிகப்படியான இறப்புக்கள் தொற்றுநோய்க்கு முந்தைய ஐந்தாண்டு சராசரியை விட இன்னும் அதிகரிக்கின்றன.”
டோரி தலைமைப் போட்டியின் போதான NHS இன் நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் கோவிட் கொள்கை பற்றிய ஒரே குறிப்பு, Tom Tugenhadt “NHS ஐ அசைக்க இராணுவத்தைக் கொண்டுவருவது பற்றி பேசியது” அல்லது முன்னாள் சான்சிலர் ரிஷி சுனாக் ‘நிலையற்ற’ சுகாதாரச் செலவுகள் பற்றி விமர்சித்தது” உள்ளது என்று தலையங்கம் குறிப்பிட்டது.
சுகாதார அமைப்புக்கள், பொது போக்குவரத்து மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் முகக்கவசம் அணிதல், காற்றோட்ட வசதியை உறுதி செய்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல், பெரியளவிலான கூட்டங்களை நிறுத்திக் கொள்ளுதல், மேலும் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் இலவச பரிசோதனைக்குத் திரும்புதல் ஆகிய மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை திரும்பச் செயல்படுத்துவதற்கான அழைப்புடன் இது முடிவடைகிறது.
அப்பாஸி மற்றும் மெக்லெல்லனின் முக்கிய எச்சரிக்கை இருந்தாலும், அவர்கள் பரிந்துரைக்கும் ‘தடுப்பூசி மற்றும் சில தணிப்பு நடவடிக்கைகள்’ அணுகுமுறை தொற்றுநோயின் விரைவான பரவலைத் தடுக்காது.
ZOE சுகாதார ஆய்வின் சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்தில் தற்போது 15 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போதைய நோய்தொற்று முடுக்கத்தின் மையமாக ஓமிக்ரோன் மற்றும் அதன் துணைமாறுபாடுகளின் உச்சபட்ச தொற்றும் தன்மை உள்ளது. கடந்த டிசம்பரில் ஓமிக்ரோன், மறுத்தொற்று பரவலில் 15 மடங்கு அதிகரிப்புக்கு வழிவகுத்தது, காரணம் அதன் விரிவான பிறழ்வுகள் முந்தைய நோய்தொற்று அல்லது தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை பெரிதும் மறுத்தது. இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் நோயெதிர்ப்புத்துறை பேராசிரியரான, டேனி ஆல்ட்மேன், ஓமிக்ரோன் மற்றும் அதன் துணைமாறுபாடுகளான BA.4, BA.5 ஆகியவை “மோசமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவை, அதாவது அது தொற்றுவது மீண்டும் தொற்றுவதில் இருந்து கூடுதல் பாதகாப்பை அளிக்கிறது” என்று கார்டியனுக்கு தெரிவித்தார்.
தடுப்பூசிகள் நோய்தொற்றுக்களின் விளைவுகளை தொடர்ந்து மேம்படுத்துகின்றன, அதே சமயம் எஞ்சியிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக மறுதொற்றுக்கள் இலேசானதாக இருக்கும், என்றாலும் புதிய மாறுபாடுகள் உருவாகியுள்ளதால் இந்த பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது. மேலும், டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, புதிய துணைமாறுபாடுகள் ஆபத்தான தாக்கத்துடன் மேல் சுவாசக் குழாய் திசுக்களை விட நுரையீரல் செல்களின் தொற்றுக்கு சாதகமாக உருவாகியிருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளது.
ZOE ஆய்வுக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், “நிச்சயமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் நோய்தொற்றுக்கு ஆளானவர்களில் ஏராளமானோர் மீண்டும் அதன் மறுதொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டவர்களான நான்கு மாதங்களுக்கு முன்னர் BA.1/2 துணைமாறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் BA.4/5 துணைமாறுபாடுகளால் பாதிக்கப்படுவது இதில் அடங்கும்” என்று கார்டியனுக்கு தெரிவித்தார். வைரஸ் அறிகுறியின் சுயவிபரம் ஒரு புதிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று அவர் எச்சரித்தார், அதாவது, சளி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் எவருக்கும், மற்ற வகை வைரஸைக் காட்டிலும், இப்போது ‘இரண்டு மடங்கு அதிகமாக’ கோவிட் பாதிப்பு ஏற்படுகிறது. நாங்கள் ‘இதை இதற்கு முன் பார்த்ததில்லை” என்கிறார்.
கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) சிறப்புத் தூதர் டாக்டர் டேவிட் நபாரோ, “இந்த வைரஸ் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்து மாற்றமடையக் கூடியது… மேலும் இது நமக்கு மிகவும் புத்திசாலித்தனமாக மாறிவிட்டது. இது நமது நோயெதிர்ப்பு பாதுகாப்பை முறியடிக்கக்கூடும், மேலும் அதனால் தான் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன” என்று Sky News க்கு தெரிவித்தார்.
கடந்த ஆறு வாரங்களில் ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக WHO இந்த வாரம் தெரிவித்துள்ளது. எனவே, மருத்துவமனை அனுமதிப்புகளின் விகிதமும் இரட்டிப்பாகியுள்ளது.
ஆயினும்கூட, தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு கூட்டுக் குழுவில் (JCVI) உள்ள விஞ்ஞான ஆலோசகர்கள் இன்னும், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் முன்னணி சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகியோரை குளிர்காலத்திற்கு முன்னதாக கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். டெய்லி மெயிலில், ஹீத் செயலர் ஸ்டீவ் பார்க்லே “ஒரு கோவிட் தடுப்பு மருந்தின் கூட்டுப் பாதுகாப்பால்… அதாவது நாம் இப்போது விஞ்ஞானத்தின் மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமே தவிர, கட்டுப்பாடுகளினால் அல்ல” என்று மீண்டும் கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் வைரஸை வெடித்து பரவ அனுமதிப்பதில் டோரிகளுக்கும் தொழிற் கட்சியினருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. தொற்றுநோய் குறித்து தொழிற் கட்சி கடைசியாக ஜனவரியில் விடுத்த எந்த அறிக்கையும் ‘கோவிட் உடன் நன்றாக வாழக் கற்றுக்கொள்வது” என்ற அரசாங்கத்தின் சொந்தக் கொள்கை முழக்கத்தில் ஆபாசமான மாறுபாட்டை உருவாக்கியது. அதன் அறிவிக்கப்பட்ட நோக்கம், “வைரஸின் பரவலைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளின் தேவையைத் தடுப்பதாகும்,” அதாவது “எதுவும் செய்யாதீர்கள்” என்பதாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP), தொற்றுநோயைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இங்கிலாந்தில், SEP பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்திற்கான போராட்டத்தை பொதுத் தேர்தலுக்கான அதன் அழைப்பின் மையமாக வைத்துள்ளது, அதாவது, தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கம் விடுபடவும், டோரி அரசாங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆட்சி நெருக்கடியில் தங்கள் சொந்த நலன்களில் தலையிடவும் இது வழிவகை செய்கிறது.
“தொற்றுநோய் 200,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொள்வதற்கு வழிசெய்த குற்றவியல் நடவடிக்கைகளை எடுத்த ஜோன்சனின் வீழ்ச்சியை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொண்டாடினர். ஆயினும்கூட, ‘இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!’ என அறிவித்தவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட போதிலும், அவரது கொள்கைகள் இன்னும் தொடர்கின்றன” என்று நாங்கள் விளக்கினோம்.
தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு வழங்கி அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவது, மற்றும் பரிசோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் தேவைப்படும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் பூட்டுதல்களை விதித்தல் உட்பட தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றை மீட்டெடுப்பது உட்பட, வைரஸை அடக்குவதற்குத் தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் மீட்டெடுக்கக் கோருமாறு தொழிலாளர்களை நாங்கள் அழைக்கிறோம். இதற்கான நிதி, பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொற்றுநோய் கால கொள்ளை இலாபமீட்டுபவர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதன் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
