மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) அதன் முதன்மை தலையங்க எழுத்தாளர் ஒருவர் வெளியிட்ட கட்டுரையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருப்பது பற்றிய ஒரு குறிப்பைக் காட்டுகிறது. அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய பணவியல் அமைப்பின் நிலையான தன்மைக்கு இது எதனைக் குறித்துக்காட்டுகிறது என்பதைப் பற்றிய இந்தப் பிரச்சினை நிதியியல் அமைப்புகளில் கவலைகளை எழுப்பத் தொடங்கியிருக்கிறது.
திங்கள் (15-04-2024) அன்று ராணா ஃபூரூஹரின் (Rana Foroohar) கட்டுரையில், “தங்கம் மீண்டும் வந்திருக்கிறது - அது எங்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறது” என்ற தலைப்பில் கட்டுரை தொடங்கியுள்ளது: “தங்கத்தின் மீது ஆர்வமாக முதலீடு செய்பவர்களைக் கேலி செய்வது எளிது, ஆனால் அவர்களின் இந்தத் தருணம் முடிவில் வந்திருக்கலாம்.”
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு சுமார் $1,800 டாலர்களிலிருந்து $2,400 டாலர்களுக்கு நெருங்கியிருக்கிறது, இந்த உயர்வுக்கான பல உடனடி காரணிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு அமெரிக்காவில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமான பணவீக்கம், புவிசார் அரசியல் மீதான பதட்டம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் நிதியியல் கொள்கை மீதான நிச்சயமற்ற தன்மை ஆகியவை இதில் அடங்கும்.
இருப்பினும், நீண்ட கால பணவீக்கம் உட்பட இந்த விடயத்தில் நீண்ட கால காரணிகள் இருந்தன, “தொழில்நுட்பத்தால் இயங்கும் வியக்கத்தக்க உற்பத்தித்திறன்” தவிர ஒரு உண்மையான வாய்ப்பாகத் தெரிகிறது.
அவர் சுட்டிக்காட்டிய முக்கிய காரணிகளில் ஒன்று உலகப் பொருளாதார ஒழுங்கில் ஏற்பட்ட பெரும் நகர்வு ஆகும்.
“வளர்ந்து வரும் நாடுகள் மேற்கு நாடுகளால் எழுதப்பட்ட தடையற்ற சந்தை வர்த்தக விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தது - மற்றும் போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் மேற்பார்வையிலிருந்த அமெரிக்க அமைதி (Pax Americana) முடிந்துவிட்டது என்ற வாஷிங்டனின் ஒருமித்த கருத்து என்பது இரகசியமல்ல.”
சீனாவுடனான வர்த்தக பதற்றம் அதிகரித்து வருகிறது மற்றும் உக்ரைன் போர் வெடித்த பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவின் மத்திய வங்கியின் நிதிச் சொத்துக்களை முடக்கி டாலரை ஆயுதமயமாக்கல் செய்ததன் மூலம் “பல நாடுகளில், குறிப்பாக சீனாவில், கருவூல பத்திரங்களை விற்பதற்கும், அமெரிக்காவின் நிதிய வலிமைக்கு எதிராக தங்கத்தை வாங்குவதற்கும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கு ஏற்படுத்திக்கொடுத்தது.”
“ஊசல் ஆட்டம்” (pendulum shift) என்று அவர் கருதியது பல ஆய்வாளர்களுக்கு “தங்கத்தில் மிகப் பெரிதாக நடக்கவிருக்கும் முந்தைய நிகழ்வாக” கணிக்க வழிவகுத்துள்ளது.
தங்கம் அதன் தற்போதைய நிலையான அவுன்ஸ் ஒன்றுக்கு $2,347 டாலர்களிலிருந்து “அதிக தொலைவில் இல்லாத எதிர்காலத்தில்” $4,000 டாலர்களாக உயரக்கூடும் இது பணவீக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படவில்லை என்றாலும், பணவியல் அடிப்படையில் ஏற்கனவே ஒரு சாதனை உயர்வாக உள்ளது என்று ஒரு பெரிய ஐரோப்பிய வங்கியான BNP Paribas Fortis இன் இரண்டு பொருளாதார மூலோபாய நிபுணர்கள் கணித்துள்ளனர்
ஆய்வாளர்களில் ஒருவர் கூறியது போல், “இது வெறும் வட்டி மதிப்பு சார்ந்தது அல்ல. ஒரு புதிய உலகத்திலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.”
அந்த “புதிய உலகம்” எல்லாவற்றிற்கும் மேலாக போர் மற்றும் உலகத்தை பொருளாதார மற்றும் அரசியல் முனைகளில் போட்டிக் குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. சீனா மட்டுமின்றி, பல நாடுகளும் தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகப் பணம் செலுத்தவும், டாலரைப் புறக்கணிக்கவும் நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.
நாணய ஆராய்ச்சி சங்கத்தின் (Currency Research Association) சமீபத்திய அறிக்கையில் மேற்கோள் கீழ்கண்டவாறு தெரிவித்திருக்கிறது: “சீனா தங்கத்தை வாங்குவது மற்றும் கருவூலப் பத்திரங்களை விற்பதில் பிரதிபலித்தன, 1960 களின் பிற்பகுதியில் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு உடையத் தொடங்கிய சமயம் ஐரோப்பாவின் மத்திய வங்கிகள் தங்கத்திற்கான டாலர்களை எவ்வாறு மாற்றிக் கொள்ளத் தொடங்கின என்பதைப் இது பிரதிபலிக்கிறது.”
1930 களின் பெரும் மந்தநிலையால் சிதைந்த சர்வதேச நிதி அமைப்பை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு (Bretton Woods system) தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $ 35 டாலர்கள் என்ற விகிதத்தில் தீர்மானிக்கப்பட்டு டாலரை உலகளாவிய நாணயமாக நிறுவியது.
ஆனால் இது ஒரு ஆழமான முரண்பாட்டுக்கு வந்தது, 1960 களின் முற்பகுதியில் அடையாளம் காணப்பட்டது. வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நிதியளிக்க அமெரிக்காவிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு டாலர்கள் வெளியேற்றமானது இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு தேவைப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்காவிற்கு வெளியே டாலர்கள் குவிந்ததால், தங்கத்தைக்கொண்டு அவற்றை மீட்டெடுக்கும் அதன் நடவடிக்கையால் குறைமதிப்பிற்கு ஆளாகியது.
மற்றய பெரும் முதலாளித்துவ சக்திகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் மகத்தான பலம் காரணமாக ஆரம்பத்தில் இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் அந்தப் பொருளாதாரங்கள் போரின் பேரழிவில் இருந்து மீண்டு, கூடுதலான உற்பத்தித்திறன் கொண்ட தொழில்துறை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அமெரிக்காவின் போட்டித்தன்மை அரிக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்க வர்த்தக சமநிலை எதிர்மறையாக மாறியபோது திருப்புமுனை ஏற்பட்டது அதனால் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ஆகஸ்ட் 15, 1971 அன்று டாலரில் இருந்து தங்கத்தை அகற்ற வழிவகுத்துக்கொடுத்தது.
அப்போதிருந்து, உலகம் டாலரை ஒரு செல்வத்தின் நம்பகமான சேமிப்பாக உலகளாவிய நாணயமாக கொண்டு செயல்படுகிறது. மதிப்பைக் குறிக்கும் தங்கத்தைப் போலல்லாமல் காகித டாலர்களுக்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவுமில்லை. அவை அமெரிக்க அரசின் பொருளாதார சக்தி மற்றும் அதன் நிதி அமைப்பு ஆகியவற்றின் பின்னணியில் வர்த்தகம், முதலீடு, கடன் ஆகியவற்றை எளிதாக்குதலுக்கும் மற்றும் அவை மதிப்பின் சேமிப்பாக செயல்படுகின்றன.
அந்த அதிகாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்க வங்கிகளின் ஊகவணிக நடவடிக்கை களியாட்டத்தால் உருவான 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியால் அது கடுமையாக ஆட்டம் கண்டது. இது, மத்திய வங்கியின் (Federal Reserve) பாரிய தலையீடு இருந்திருக்காவிட்டால் உலக நிதி அமைப்பின் வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கும்.
அப்போதிருந்து, இது பெருந்தொற்று நோய் பரவிய மார்ச் 2020 உட்பட மேலும் பாரிய நிலைகுலைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க கருவூலச் சந்தை பல நாட்களுக்கு முடக்கப்பட்டது உலகின் பாதுகாப்பான நிதிச் சொத்தாகக் கூறப்படும் அமெரிக்கக் கடனை வாங்குவதற்கு யாரும் இல்லை மேலும் மத்திய வங்கி மீண்டும் சுமார் $4 டிரில்லியன் டாலர்களை கொடுக்கும் அளவுக்கு தலையிட வேண்டியிருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அமெரிக்க டாலரின் பங்கு மகத்தான பலன்களை வழங்கியுள்ளது. வேறு எந்த பொருளாதாரத்திற்கும் சாத்தியமில்லாத வகையில், இது பற்றாக்குறைகள் மற்றும் கடன்களை கொண்டு நடத்த அனுமதித்துள்ளது, இதில் பெரும்பகுதி இராணுவச் செலவுகள் மற்றும் போர்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் செயல்பாட்டின் விளைவாக, 1971ல் நடந்தவற்றுக்கு இணையான, ஆனால் அதைவிட மிக உயர்ந்த மட்டத்தில் ஒரு புதிய நெருக்கடி உருவாகிறது என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறிகள் இப்போது ஏற்பட்டிருக்கின்றன.
ஃபூரூஹர் (Foroohar) தனது கருத்துப் பகுதியில் குறிப்பிட்டது போல், மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உட்பட, அமெரிக்க நிதி அமைப்பின் உயர் மட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள், அமெரிக்க அரசாங்கக் கடன்களின் குவிப்பு “விரைவில் நீடிக்க முடியாததாகி வருகிறது”.
“மிக சமீபத்திய காங்கிரஸின் பட்ஜெட் அலுவலக (Congressional Budget Office - CBO) கணிப்புகள் இந்த ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 99 சதவீதமாக அமெரிக்கக் கடன் இருப்பதாக காட்டுகின்றன, மேலும் 2054 இல் 172 சதவீதத்தை எட்டும். இது நடந்தால், இதன் விளைவாக பணமாக்குதல் [கடனை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்கள் மதிப்பற்றதாக மாறும் சூழ்நிலை], பணவீக்கம், நிதிக்கட்டுப்பாடுகள் மற்றும் பணவியல் கொள்கை மற்றும் சந்தைகளில் தீவிர குழப்பம் ஏற்படும்.
இத்தகைய நிலை 30 வருடங்களாக இல்லை ஆனால் கடனின் பாரிய விரைவான வளர்ச்சியின் காரணமாக வளர்ந்து வரும் இன்றைய யதார்த்தமாக இருக்கிறது. மத்திய வங்கியின் அதன் நிதி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்க தளர்த்தும் திட்டத்தின் காரணமாக வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தபோது, சிக்கலை மூடி மறைக்க முயல்கிறது.
மத்திய வங்கி வட்டி விகிதம் சுமார் 5 சதவீதமாக உள்ளது, நிலைமை மாறிவிட்டது, இது 20 ஆண்டுகளில் மிக அதிகமானதாகும்.
காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் (CBO) கூற்றுப்படி, அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அடுத்த பத்தாண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, $1.6 டிரில்லியன் டாலர்கள் முதல் $2.6 டிரில்லியன் டாலர்கள் வரை உயரும், அதில் முக்கால்வாசி உயர்வு வட்டிகளுக்கான செலவுகளிலிருந்து வருகிறது, இதில் மிகப்பெரிய கடன் இராணுவ பட்ஜெட்டின் பெரிய அங்கமாக மாறும்.
கடந்த மாதம் ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) க்கு அளித்த பேட்டியில், CBO இன் இயக்குனர் பிலிப் ஸ்வாகல் (Phillip Swagel), எதிர்காலத்தில் நிதி நெருக்கடிக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க நிதி நிலைமை “முன்னொருபோதும் இல்லாத” பாதையில் இருப்பதாகவும் லிஸ் டிரஸ் (Liz Truss) பாணி நிதி நெருக்கடியின் அபாயத்தை அதிகரித்திருக்கிறது. அவர் குறுகிய கால பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்தபோது செப்டம்பர் 2022 இல் பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான வரியைக் குறைத்து கடனைப் அதிகரிப்பதன் மூலம் மூலம் நிதியளிக்க முயன்றார் என்று அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் தீர்க்கமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல்-அதாவது வர்க்கப் பிரச்சினைகள் உள்ளன.
நிதி அமைப்புமுறையானது அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வகையில் எங்காவது செயல்படுவதாக சில நேரங்களில் தோன்றுகிறது, ஒரு கணினி பொத்தானை அழுத்துவதன் மூலம் மத்திய வங்கிகள் ஒன்றுமில்லாமல் பணத்தை உருவாக்குவது போன்ற ஒரு வகையான மாயையான தன்மையை ஏற்றுக் கொண்டாலும் கூட. இருப்பினும், இறுதி ஆய்வில், அது உண்மையான பொருளாதாரத்தில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கறந்தெடுக்கப்படக்கூடிய மதிப்பைப் பொறுத்ததாக அமைகிறது.
2008 இன் கசப்பான அனுபவங்கள் வெளிப்படுத்தியபடி, நிதி நெருக்கடி என்பது ஊதியங்கள் மீதான தாக்குதல்கள், வேலைகள் அழிக்கப்படுதல் மற்றும் முக்கிய சமூக சேவைகளை அகற்றுதல் ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது.
அனைத்து நிலைமைகளாலும் உருவாக்கப்பட்ட மற்றொரு நெருக்கடி, இன்னும் ஆழமான தாக்குதலைக் கொண்டுவரும். எச்சரிக்கும் அறிகுறிகளில் ஒன்று, தங்கத்தின் விலை உயர்வானது வரலாற்று ரீதியாக இறுதியில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பின் நம்பகமான சேமிப்பாக இருக்கிறது.
தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக தொழிற்சாலை அல்லது பணியிட மட்டத்தில் உள்ள தொழிலாளர்களால் இதற்கு பதிலளிக்க முடியாது. முழுத் தொழிலாள வர்க்கமும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை ஒட்டுமொத்தமாக தூக்கிவீசுவதை சோசலிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியின் நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் மூலோபாயத்தால் எதிர்கொள்ள வேண்டும்.