2024 பாரிஸ் ஒலிம்பிக் பாரிய பொலிஸ்-அரசின் கடும் நடவடிக்கைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை, 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆரம்பித்துள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 11,310 விளையாட்டு வீரர்கள் 48 வெவ்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள். இந்த விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடைந்த பிறகு, ஆகஸ்ட் 28 லிருந்து செப்டம்பர் 8 வரை இடம்பெற இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 4,400 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள். சர்வதேச அளவில் மூன்று பில்லியன் மக்கள் இந்த விளையாட்டுகளைப் பார்ப்பார்கள், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் இங்கு சாதிப்பார்கள்.

2024 கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு முன்னர், பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் பொருட்களை ஆய்வு செய்கிறார்கள், Friday, July 26, 2024. [AP Photo/Andy Wong]

இருப்பினும், அடிப்படையில் இந்த விளையாட்டு நிகழ்வுகளின் சர்வதேச மற்றும் மனிதாபிமான தன்மையானது, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புடன் கூர்மையான மோதலில் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய நட்பு நாடுகளின் கொள்கைகளுக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பு போராட்டங்கள் வளர்ச்சியடைந்து வருவதுக்கு மத்தியில், பிரான்சில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு போராட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடும் பில்லியன் கணக்கான மக்களிடையே வெடிக்கும் கோபத்தை தூண்டக்கூடும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.

ஆத்திரமூட்டும் வகையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அழைத்துள்ளார்.

ரஷ்யாவுடன் போரிடுவதற்காக உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கு மக்ரோனின் அழைப்பையும், ஓய்வூதிய வெட்டுக்களுடன் இராணுவ செலவினங்களுக்கு நிதியளிப்பதையும் பிரெஞ்சு மக்களில் பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த நிலைமையில் பாராளுமன்ற தேர்தல்களில் மக்ரோனின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த மூன்று வாரங்களுக்குள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன. மேலும், இனப்படுகொலை, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு, சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே விரிவடைந்து வருகின்றன. 

பாரிஸ் ஒலிம்பிக்கின்போது, “சமூக எதிர்ப்பின் பின்னணியில் செய்யப்படும் பல்வேறு செயல்களைக் காண்பிக்கும் ஆபத்து உள்ளதென”, உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் ஒரு குறிப்பில் எச்சரித்துள்ளன என்று BFM-TV, அறிவித்தது.

பாரிசில் “மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது,” குறிப்பாக மில்லியன்கணக்கானவர்கள் விளையாட்டு போட்டிகளை பார்வையிட வருவதால், பிரெஞ்சு புலனாய்வு அமைப்புகள் அஞ்சுகின்றன. இது வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கான அவர்களின் திறனை அடக்கக்கூடும். 

இளம் நஹேலை பொலிசார் கொலை செய்த பின்னர் கடந்த கோடைகாலத்தில் இடம்பெற்ற பாரிய நகர்ப்புற கலவரங்கள் போன்ற “சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு இது மீண்டும் நிகழக்கூடும். மேலும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பில் ஏற்கனவே அணிதிரட்டப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புப் படைகளின் பொறுப்பு திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர்கள் எச்சரித்தனர்

இது பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மோசடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒலிம்பிக்கின் போது பொலிஸ் நடவடிக்கைகள் எல்லா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் மேலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் வெடிப்புக்கு பயந்து, ஆளும் வர்க்கம் பிரெஞ்சு மற்றும் உலக மக்கள்தொகையை, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு கடும் பொலிஸ் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, பொது ஒழுங்குக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி, நான்ந் பகுதியில், ஒலிம்பிக் விளையாட்டின் போது அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் பொலிஸ் தடை செய்துள்ளது. அருகிலுள்ள நகரமான சாத்தோரோ நகரில், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்கிற்கு அழைப்பதை எதிர்த்து இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தை போலீசார் தடைசெய்தனர்.

மக்ரோன் பாரிஸில், 45,000ம் கலவரம் அடக்கும் இராணுவ பொலிஸ் படையினர், 10,000ம் இராணுவத்தினர் மற்றும் 22,000 தனியார் பாதுகாப்பு படையினரைக் கொண்ட இராணுவத்தை அணிதிரட்டியுள்ளார். அத்தோடு, ட்ரோன்கள் வானத்தில் ரோந்து செல்கின்றன, அதே நேரத்தில் குறைந்த உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ள சுற்றுப்புறங்களில் பறந்து இடி ஓசையை எழுப்புகின்றன.

பாரிசில் ரோந்தில் ஈடுபடுவதற்காக டசின் கணக்கான நாடுகள், தமது பொலிஸ் அல்லது துருப்புக்களை அனுப்பியுள்ளன. பாரிஸ் நகரத்தை கடக்கும் எவரும், உடல் கவசம் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன், கட்டாரி அல்லது பிற நாட்டு பொலிஸ்காரர்களை சந்திக்கிறார்கள். 

பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்பட்ட QR குறியீடு இல்லாவிட்டால், இது பெரும்பாலும் போதுமானதாக இல்லாவிட்டால், பெரும்பகுதி தடைசெய்யப்பட்டுள்ள பாரிசின் பகுதிகளுக்கு செல்ல முடியாது. அதே நேரம், பொலிஸ் உபகரணங்கள் மோசமாக செயல்படுகின்றன. மேலும் அதிக சூரிய ஒளி இருந்தால் QR குறியீடுகளைப் சரியாக படிக்க முடியாது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி, பொலிசார் நிறுவியுள்ள மூன்று செறிவான பாதுகாப்பு சுற்று வளைவுகளை அல்லது பாரிஸ் நகர் முழுவதையும் அதிகமான பொதுமக்கள் தவிர்க்கிறார்கள்.

இதன் விளைவாக, பாரிஸின் உணவகங்கள் தங்கள் வருமானத்தில் 30 முதல் 60 சதவீதம் வரை இழக்க நேரிடும் என்று விருந்தோம்பல் தொழில்துறை ஒன்றியத்தின் தலைவர் (UMIH) தியரி மார்க்ஸ் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரத்தின் மத்தியிலுள்ள இரண்டு தீவுகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து உணவகங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பாரிஸில் உள்ள வணிகங்களுக்கான வாகன விநியோகங்கள் பாரிய தாமதங்களை எதிர்கொள்கின்றன. 

இந்த வெடிக்கும் அரசியல் சூழலில்தான் கடந்த வெள்ளிக்கிழமை, பிரான்சின் அதிவேக ரயில் (TGV) வலையமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தீ தாக்குதல் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதிர்வினையுடன் வெளிவந்தன.  

அதிவேக ரயில்களின் சிக்னல் அமைப்புகளுக்கான கேபிள்களை குறிவைத்து, நான்கு ஒருங்கிணைந்த வேண்டுமென்றே தீ தாக்குதல்களை மேற்கொண்ட அறிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரெஞ்சு ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தின. பிரெஞ்சு அதிகாரிகள் பெரும்பாலான அதிவேக ரயில்களின் போக்குவரத்தை இடை நிறுத்தினர். வெள்ளிக்கிழமை 250,000 பேர்களும், வார இறுதியில் 800,000 பேர்களும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம்வரை, தீ வைத்தது அல்லது தீ வைத்தவர்களின் எந்தவொரு அடையாளம் பற்றிய தெளிவான அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பே, பிரெஞ்சு அதிகாரிகள் இவை யுத்தச் செயலாக இருப்பதாக கருதினர்.

“பிரான்ஸ் தாக்கப்பட்டு வருகிறது” என்று பிரெஞ்சு தேசிய ரயில்வே (SNCF) தலைமை நிர்வாக அதிகாரி ஜோன்-பியர் ஃபராண்டோ அறிவித்தார். பாரிஸ் பகுதி பிராந்திய தலைவரான வலேரி பெக்ரெஸ், இந்தச் செயல் “பிரான்சை ஸ்திரமின்மையாக்கும் முயற்சி” என்று அழைத்தார். பாரிஸ் வழக்குரைஞர்கள் அலுவலகம், இந்த தீ சம்பவம் “தேசத்தின் அடிப்படை நலன்களின் மீதான தாக்குதல்” என்றும், இதனை விசாரிப்பதாகவும் கூறியது.

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முன், சாத்தியமான அளவில், தீ வைத்தவர்களின் அடையாளத்தில் தங்களுக்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்று போலீசார் ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த தீ வைத்த சம்பவத்தை இடது பயங்கரவாதமாக கருத வேண்டும் என்று கோரினர். 

வலதுசாரி லு ஃபிகாரோ பத்திரிகையானது, “பொலிஸ் வட்டாரங்களை” மேற்கோள் காட்டி: “இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை தெளிவாகக் கூற முடியாது என்றாலும், இந்த கட்டத்தில் பெரும்பாலும் சந்தேக நபர்களாக அதி இடதுகள் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டது.

குறைந்தபட்சம் எந்த ஆதாரமும் கிடைக்கும் வரை, பிரான்ஸ் மீதான தாக்குதலுக்கு இடதுசாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று பல ஊடக நிறுவனங்கள் மூலம் பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஒரு போலீஸ் அதிகாரி லு ஃபிகாரோ பத்திரிகையிடம், “கடந்த காலங்களில் அதி இடது உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட அதே செயல்முறையினை இந்த தாக்குதல்கள் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

உண்மையில், இந்த அறிக்கைக்கு பதிலளிப்பதை விட பல கேள்விகளை எழுப்புகிறது. அதிவேக ரயில்கள் மீதான “அதி இடதுகளின்” தாக்குதல் மற்றும் மதிப்பிழந்த டார்னாக் 2008 விவகாரத்தில், ஒரு சிறிய அராஜகவாத குழு இந்த ரயில் பாதைகளை அழிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் இறுதியில் வீழ்ச்சியடைந்தன. மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த அதிவேக ரயில்கள் மீதான தாக்குதல்களை ஆதரிக்கும் குழுவில் இருந்தவர், ஒரு பிரிட்டிஷ் “உளவு பொலிஸ்”ஆத்திரமூட்டியான மார்க் கென்னடி ஆவார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது, பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மத்தியில், ஒரு சிறிய, அதி-இடது அமைப்பு எவ்வாறு SNCF மீது ஒருங்கிணைந்த, நாடு தழுவிய தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியும் என்பது உட்பட, இந்த தீ சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், TGV மீது திட்டமிட்ட தாக்குதல்களின் கடந்தகால செயல் முறை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளப்பட்டால், இந்த தீ விபத்து ஒரு அரச ஆத்திரமூட்டல் என்பதைக் குறிக்கும்.

வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள், சர்வதேச அளவில் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நேட்டோ யுத்தத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய உலக சக்திகள் இந்த தீ விபத்து தொடர்பான முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஈரானுடனான போருக்கான இஸ்ரேலிய ஆட்சியின் பிரச்சாரங்களுக்காக, இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், எந்த ஆதாரத்தையும் வழங்காமல், ரயில்களின் சிக்னல் மீதான தாக்குதல்கள் “ஈரானிய தீய அச்சின் செல்வாக்கின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார். 

வெள்ளியிரவு, பிரான்சின் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் கேப்ரியல் அட்டல், TGV பற்றிய கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை “எச்சரிக்கையாக” இருக்குமாறு கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த தீ பற்றி என்ன வெளிப்பட்டாலும், ஒன்று மட்டும் நிச்சயம். ஒலிம்பிக் போட்டிகளுக்கான மக்ரோனின் நம்பிக்கைகள் ஏமாற்றமடையும். (”தேசிய பெருமையின் உணர்வு அரசியல் பிளவுகளை வெல்லும் இடத்தில் அவர்கள் ஒரு மந்தமானதைத் திறப்பார்கள்”) தொழிலாள வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான ஆழமாக வேரூன்றிய மோதல் காரணமாக, பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒரு பாசிச பொலிஸ் அரசை உருவாக்குகிறது, இது விரைவில் வெடிக்க உள்ளது.

Loading