முன்னோக்கு

மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவு வெறியாட்டம், பிராந்திய அளவிலான போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைத் தாக்குதலின் பத்தாவது மாதத்தில், நெதன்யாகு ஆட்சியும் அதன் அமெரிக்க ஏகாதிபத்திய ஊதியம் மற்றும் ஆயுதங்களை வழங்கிவரும் எஜமானர்களும், இடைவிடாமல் மத்திய கிழக்கை செங்குத்துப் பாதையில், முழுப் பிராந்தியத்தினையும் போரின் நரகத்துக்குள் தள்ளி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் மற்றும் தீவிர பொறுப்பற்ற தாக்குதலில், புதன்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரில், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனாயை இஸ்ரேல் படுகொலை செய்தது.

ஈரான் தலைநகரான தெஹ்ரானில் ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிராப்டொல்லாஹியனுடனான சந்திப்புக்குப் பிறகு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசுகிறார். Tuesday, March 26, 2024. [AP Photo/Vahid Salemi]

ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹனியே தெஹ்ரானில் இருந்தார். அவர் தங்கியிருந்த வளாக கட்டிடத்தை, நாட்டிற்கு வெளியில் இருந்து ஏவப்பட்ட வழிகாட்டும் ஏவுகணை தாக்கியபோது, அவர் தனது மெய்க்காப்பாளருடன் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெட்கக்கேடான குற்றச் செயல் இடம்பெறுவதுக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், பெய்ரூட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட இடத்தில் இருக்கும் ஒரு ஐந்து மாடிக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் இடித்து நொறுக்கியது. இதனை, “இலக்கு வைக்கப்பட்ட” தாக்குதல் என்று இஸ்ரேலிய அரசாங்கம் விவரித்தது. இந்த ட்ரோன் தாக்குதலில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டதோடு, அந்தக் கட்டிடத்தில் வசித்துவந்த பலர் காயமுற்றனர். கொல்லப்பட்டவருகளில் ஐந்து பேர்களில் ஃபுவாட் சுக்ரும் அடங்குவார். ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வலதுகரம் என்று கூறப்படும் ஃபுவாட் ஷுக்ர் மற்றும் 10 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்தனர்.

62 வயதான காஸாவில் பிறந்த ஹனியே, நீடித்த காஸா போர் அமைதி பேச்சுவார்த்தைகளில் ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளராக இருந்தார். “ஒரு தரப்பினர் மறுபக்கத்தில் இருக்கும் பேச்சுவார்த்தையாளரை படுகொலை செய்யும்போது மத்தியஸ்தம் எவ்வாறு வெற்றிபெற முடியும்?” என்று சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்திய கட்டாரி பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, டுவிட்டர் X இல் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால், இந்தப் பேச்சுவார்த்தைகள் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட ஒரு உருவகப்படுத்துதல் ஆகும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவோடு இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு “இறுதித் தீர்வு” என்ற பேரழிவு, இனச் சுத்திகரிப்பு மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை அழித்தல் போன்ற அதன் தொடர் முயற்சிகளுக்கு இவற்றைப் புகை திரையாகப் பயன்படுத்தி வருகிறது. 

ஹனியாவின் மரணதண்டனை ஒரு போர்க்குற்றமாகும். இது ஈரானிய மண்ணிலும், புதிய ஜனாதிபதியான மசூத் பெசெஷ்கியான் பதவியேற்பதைக் குறிக்கும் விழாக்களுக்கு நடுவிலும் நடத்தப்பட்டது என்பது குற்றவியல் மற்றும் ஆத்திரமூட்டலின் கூடுதல் வெடிக்கும் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

இஸ்ரேலிய தாக்குதல், ஈரானை அவமானப்படுத்துவதையும், அதன் தலைமையை சீர்குலைப்பதையும், அதன் பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இறுதியாக, அதை பதிலடி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. இது, இஸ்ரேலுக்கு இன்னும் தாக்குவதுக்கான ஒரு சாக்குப்போக்கை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ஹனியே இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கமேனியை அவர் சந்தித்திருந்தார்.

இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்திவரும், ஒரு இஸ்ரேலிய அரசாங்கம் காஸா போரின் போது குறைந்தது 186,000 இறப்புகளுக்குப் (உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டின் கூற்றுப்படி) பொறுப்பாகும். அதன் நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே வரம்புகள் இல்லை. ஆயினும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஹமாஸின் பொலிட் பீரோவிற்கும், முன்னர் செயற்பட்டுவந்த காஸா சிவில் நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கிய ஹனியே மீதான மரணதண்டனை என்பது, சர்வதேச உறவுகளில் ஒரு புதிய அளவிலான சட்டவிரோதத்தையும், மிருகத்தனத்தையும் குறிக்கிறது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரை இஸ்ரேல் ஏவுகணையால் தாக்கி கொன்றதுடன் ஒப்பிடுகையில், வாஷிங்டன் அல்லது பேர்லினுக்கு விஜயம் செய்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ட்ரோனைப் பயன்படுத்தி ரஷ்யா கொல்வதற்கு ஒப்பானதாகும்.

ஏகாதிபத்திய தலைநகரங்களில், இது தர்ம சங்கடத்தையோ, நடுக்கத்தையோ கூட ஏற்படுத்தவில்லை. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு, அவர்களின் உலகளாவிய பதில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை அச்சுறுத்துவதோடு, இஸ்ரேலிய “தற்காப்பு” மீதான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

ஒவ்வொரு இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகும், இப்போது ஒரு வழக்கமான வடிவமாக, வாஷிங்டன், லண்டன், பேர்லின் மற்றும் பாரிஸ், ஒரு பரந்த போரின் அச்சுறுத்தலுக்காக ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் குற்றம் சாட்டி வருகின்றன. “இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூச்சலிட்ட ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பேர்பாக், “ஒரு பிராந்திய மோதலைத் தடுப்பது முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

புதன்கிழமை பிற்பகல் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க துணை தூதர் ரொபேர்ட் வூட் பின்வருமாறு அறிவித்தார்: “ஹிஸ்புல்லாஹ்வின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் நின்று தற்காத்துக் கொள்வதன் மூலம் ஹிஸ்புல்லாவுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புமாறு பாதுகாப்புக் குழுவை நாங்கள் அழைக்கிறோம்.”

அதே பாணியில் தொடர்ந்து, “ஈரானைப் பொறுப்புக்கூற வைப்பதற்கும், அதன் பயங்கரவாத பினாமிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தீர்ப்பதற்கும்” புதிய பொருளாதாரத் தடைகள் உட்பட நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புச் சபைக்கு வூட் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக கடந்த புதனன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், தெஹ்ரானில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றது பற்றி அமெரிக்கா “அறிந்திருக்கவில்லை அல்லது அதில் ஈடுபடவில்லை” என்று கூறினார். டெல் அவிவ் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், வாஷிங்டனின் கைகள் இந்தக் குற்றத்தின் இரத்தத்தால் கறைபட்டுள்ளன.

பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஹமாஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக “இலக்கு” வைத்து படுகொலைகளை அதிகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலை பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், “சமாதான பேச்சுவார்த்தைகள்” என்று அழைக்கப்படுவதற்கு மத்தியில் கூட வாஷிங்டன், கட்டாரை நாடுகடத்தப்பட்ட ஹமாஸ் தலைமையை வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, போரின் விரிவாக்கத்திற்கு மக்களைத் தயார்படுத்துவதற்காக ஒரு அச்சுறுத்தும் வார்த்தையை வெளியிட்டுள்ளார். “இஸ்ரேலின் குடிமக்கள்” சவாலான நாட்களுக்கு முன்னால் உள்ளனர் என்று அவர் அறிவித்தார். பெய்ரூட்டில் தாக்குதல்களை நடத்தியதிலிருந்து எல்லா திசைகளிலிருந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால், எந்தவொரு சூழ்நிலையிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் [மேலும்] எந்தவொரு தாக்குதலுக்கும் அதிக விலை தேவைப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

கடந்த வாரம் வாஷிங்டனுக்கு நெதன்யாகுவின் வருகை, ஜனாதிபதி பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கின்ற துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடனான சந்திப்புக்களுக்கு பின்னர், இஸ்ரேலின் நடவடிக்கை வெறித்தனமாக சென்றுள்ளது. பெய்ரூட் மற்றும் தெஹ்ரான் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, இஸ்ரேல் தெற்கு லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஜூலை 20 அன்று, ஹவுதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற யேமன் ஹோடிடா துறைமுகத்தையும் இஸ்ரேல் தாக்கியது. 

இஸ்ரேல் யுத்தத்தை அதிகரிப்பதற்கான நேரம் தெளிவுபடுத்துவது என்னவென்றால், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையிலிருந்து  ஒரு பெரிய பிராந்திய மோதலாக விரிவடைவதுக்கு, வாஷிங்டன் நெதன்யாகுவின் வருகையின் போது பச்சை விளக்கு காட்டியுள்ளது என்பதாகும். வாஷிங்டன் பயணத்தின்போது அவர் கலந்துகொண்ட முக்கிய பொது நிகழ்வாக ஜூலை 24 காங்கிரஸின் கூட்டு அமர்வு இருந்தது. அங்கு உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர், ஈரான் மீதான போர்வெறிமிக்க கண்டனங்களுடன் கூடிய கருத்துக்களில் பெரும் பகுதியை மையமாகக் கொண்டிருந்தார். 

யதார்த்தத்தை தலைகுப்புற திருப்புவதன் மூலம், அவர் தெஹ்ரானை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரித்தார், அவர் கோரமான முறையில், காஸாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார். ஆரவாரமான கைதட்டலுக்கு மத்தியில், ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்த்துப் போரிடுவதில், இஸ்ரேல் அமெரிக்காவின் சண்டையை நடத்துகிறது என்றும், இனப்படுகொலை முறைகளைப் பயன்படுத்துவதிலும், சர்வதேச சட்டத்தை துண்டாடுவதற்கும் இஸ்ரேல் வாஷிங்டனின் அலாதியான ஆதரவுக்கு தகுதியானது என்றும் நெதன்யாகு அறிவித்தார். “இஸ்ரேலின் கைகள் கட்டப்பட்டால், அடுத்தது அமெரிக்கா” என்று அவர் அறிவித்தார்.

எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் யுத்தம் எவ்வாறு அபிவிருத்தியடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. மறுக்கமுடியாதது என்னவென்றால், இஸ்ரேலிய ஆட்சியின் நெருக்கடி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, வாஷிங்டன் மற்றும் அவர்கள் தொடங்கிய போரின் தர்க்கம் (தொடர்ச்சியான கொள்ளையடிக்கும் நோக்கங்கள் மற்றும் அதிகரிக்கும் வன்முறை மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை அவர்கள் உருவாக்க முற்படுகிறார்கள்) ஆகியவை, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் இணைந்த வகையில், அவர்களை ஒரு பிராந்திய பரந்த மத்திய கிழக்குப் போருக்கு தவிர்க்கமுடியாமல் இட்டுச் செல்கின்றன.

அத்தகைய போர், பிராந்திய மற்றும் பெரும் வல்லரசுகளின் கூட்டை விரைவாக இழுத்து, ஒரு உலகளாவிய மோதலைத் தூண்டுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் சந்திப்பில், மகத்தான புவி-மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இந்தப் பிராந்தியத்தின் தலைவிதியானது பிரச்சினையாக இருக்கும், 

இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரித்துவரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், காஸா மீதான யுத்தத்தை மத்திய கிழக்கில் ஒரு வெறித்தனமான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாகக் கருதுகின்றன. மேலும், பைடென் மற்றும் பிளிங்கன் தெளிவுபடுத்தியபடி, இஸ்ரேலுடன் அவர்கள் பின்தொடரும் போரானது, வளர்ச்சி கண்டு வரும் உலகப் போரில், ஒரு போர் முனையாகும். மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை பாதுகாப்பது என்பது அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் ஏற்கனவே போரில் உள்ள ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அனைத்து பக்கங்களிலும் இருந்தும், இராணுவ-மூலோபாய மற்றும் பொருளாதார தாக்குதலை மேற்கொள்வதுக்கு அவசியமானது.  

1930 களின் பிற்பகுதியில், பல்வேறு பிராந்திய மோதல்கள் தவிர்க்கமுடியாமல் ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போரில் ஒன்றிணைத்தன. அத்தகைய பேரழிவு தவிர்க்கப்பட வேண்டும் என்றால் - அது தவிர்க்கப்பட வேண்டும் - உலகத் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப்பட வேண்டும். மேலும், ஏகாதிபத்திய போருக்கும் அதற்கு மூலமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

அத்தகைய போராட்டத்திற்கான வேலைத்திட்ட அடித்தளங்களை, ஜூலை 24 அன்று, நெதன்யாகு உரையாற்றிய அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வுக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சி கோடிட்டுக் காட்டியது. போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்தின் சீரழிவுகள், சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுக்கான போராட்டம் என்பது, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது. 

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைத் தாக்குதலின் பத்தாவது மாதத்தில், நெதன்யாகு ஆட்சியும் அதன் அமெரிக்க ஏகாதிபத்திய ஊதியம் மற்றும் ஆயுதங்களை வழங்கிவரும் எஜமானர்களும், இடைவிடாமல் மத்திய கிழக்கை செங்குத்துப் பாதையில், முழுப் பிராந்தியத்தினையும் போரின் நரகத்துக்குள் தள்ளி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் மற்றும் தீவிர பொறுப்பற்ற தாக்குதலில், புதன்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரில், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனாயை இஸ்ரேல் படுகொலை செய்தது.

ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹனியே தெஹ்ரானில் இருந்தார். அவர் தங்கியிருந்த வளாக கட்டிடத்தை, நாட்டிற்கு வெளியில் இருந்து ஏவப்பட்ட வழிகாட்டும் ஏவுகணை தாக்கியபோது, அவர் தனது மெய்க்காப்பாளருடன் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெட்கக்கேடான குற்றச் செயல் இடம்பெறுவதுக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், பெய்ரூட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட இடத்தில் இருக்கும் ஒரு ஐந்து மாடிக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் இடித்து நொறுக்கியது. இதனை, “இலக்கு வைக்கப்பட்ட” தாக்குதல் என்று இஸ்ரேலிய அரசாங்கம் விவரித்தது. இந்த ட்ரோன் தாக்குதலில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டதோடு, அந்தக் கட்டிடத்தில் வசித்துவந்த பலர் காயமுற்றனர். கொல்லப்பட்டவருகளில் ஐந்து பேர்களில் ஃபுவாட் சுக்ரும் அடங்குவார். இவர் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வலது கையாக இருந்ததாக கூறப்படுவதோடு, இவருக்கு 10 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

62 வயதான காஸாவில் பிறந்த ஹனியே, நீடித்த காஸா போர் அமைதி பேச்சுவார்த்தைகளில் ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளராக இருந்தார். “ஒரு தரப்பினர் மறுபக்கத்தில் இருக்கும் பேச்சுவார்த்தையாளரை படுகொலை செய்யும்போது மத்தியஸ்தம் எவ்வாறு வெற்றிபெற முடியும்?” என்று சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்திய கட்டாரி பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, டுவிட்டர் X இல் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால், இந்தப் பேச்சுவார்த்தைகள் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட ஒரு உருவகப்படுத்துதல் ஆகும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவோடு இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு “இறுதித் தீர்வு” என்ற பேரழிவு, இனச் சுத்திகரிப்பு மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை அழித்தல் போன்ற அதன் தொடர் முயற்சிகளுக்கு இவற்றைப் புகை திரையாகப் பயன்படுத்தி வருகிறது. 

ஹனியாவின் மரணதண்டனை ஒரு போர்க்குற்றமாகும். இது ஈரானிய மண்ணிலும், புதிய ஜனாதிபதியான மசூத் பெசெஷ்கியான் பதவியேற்பதைக் குறிக்கும் விழாக்களுக்கு நடுவிலும் நடத்தப்பட்டது என்பது குற்றவியல் மற்றும் ஆத்திரமூட்டலின் கூடுதல் வெடிக்கும் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

இஸ்ரேலிய தாக்குதல், ஈரானை அவமானப்படுத்துவதையும், அதன் தலைமையை சீர்குலைப்பதையும், அதன் பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இறுதியாக, அதை பதிலடி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. இது, இஸ்ரேலுக்கு இன்னும் தாக்குவதுக்கான ஒரு சாக்குப்போக்கை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ஹனியே இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கமேனியை அவர் சந்தித்திருந்தார்.

இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்திவரும், ஒரு இஸ்ரேலிய அரசாங்கம் காஸா போரின் போது குறைந்தது 186,000 இறப்புகளுக்குப் (உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டின் கூற்றுப்படி) பொறுப்பாகும். அதன் நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே வரம்புகள் இல்லை. ஆயினும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஹமாஸின் பொலிட் பீரோவிற்கும், முன்னர் செயற்பட்டுவந்த காஸா சிவில் நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கிய ஹனியே மீதான மரணதண்டனை என்பது, சர்வதேச உறவுகளில் ஒரு புதிய அளவிலான சட்டவிரோதத்தையும், மிருகத்தனத்தையும் குறிக்கிறது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரை இஸ்ரேல் ஏவுகணையால் தாக்கி கொன்றதுடன் ஒப்பிடுகையில், வாஷிங்டன் அல்லது பேர்லினுக்கு விஜயம் செய்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ட்ரோனைப் பயன்படுத்தி ரஷ்யா கொல்வதற்கு ஒப்பானதாகும்.

ஏகாதிபத்திய தலைநகரங்களில், இது தர்ம சங்கடத்தையோ, நடுக்கத்தையோ கூட ஏற்படுத்தவில்லை. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு, அவர்களின் உலகளாவிய பதில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை அச்சுறுத்துவதோடு, இஸ்ரேலிய “தற்காப்பு” மீதான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

ஒவ்வொரு இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகும், இப்போது ஒரு வழக்கமான வடிவமாக, வாஷிங்டன், லண்டன், பேர்லின் மற்றும் பாரிஸ், ஒரு பரந்த போரின் அச்சுறுத்தலுக்காக ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் குற்றம் சாட்டி வருகின்றன. “இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூச்சலிட்ட ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பேர்பாக், “ஒரு பிராந்திய மோதலைத் தடுப்பது முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

புதன்கிழமை பிற்பகல் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க துணை தூதர் ரொபேர்ட் வூட் பின்வருமாறு அறிவித்தார்: “ஹிஸ்புல்லாஹ்வின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் நின்று தற்காத்துக் கொள்வதன் மூலம் ஹிஸ்புல்லாவுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புமாறு பாதுகாப்புக் குழுவை நாங்கள் அழைக்கிறோம்.”

அதே பாணியில் தொடர்ந்து, “ஈரானைப் பொறுப்புக்கூற வைப்பதற்கும், அதன் பயங்கரவாத பினாமிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தீர்ப்பதற்கும்” புதிய பொருளாதாரத் தடைகள் உட்பட நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புச் சபைக்கு வூட் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக கடந்த புதனன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், தெஹ்ரானில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றது பற்றி அமெரிக்கா “அறிந்திருக்கவில்லை அல்லது அதில் ஈடுபடவில்லை” என்று கூறினார். டெல் அவிவ் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், வாஷிங்டனின் கைகள் இந்தக் குற்றத்தின் இரத்தத்தால் கறைபட்டுள்ளன.

பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஹமாஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக “இலக்கு” வைத்து படுகொலைகளை அதிகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலை பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், “சமாதான பேச்சுவார்த்தைகள்” என்று அழைக்கப்படுவதற்கு மத்தியில் கூட வாஷிங்டன், கட்டாரை நாடுகடத்தப்பட்ட ஹமாஸ் தலைமையை வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, போரின் விரிவாக்கத்திற்கு மக்களைத் தயார்படுத்துவதற்காக ஒரு அச்சுறுத்தும் வார்த்தையை வெளியிட்டுள்ளார். “இஸ்ரேலின் குடிமக்கள்” சவாலான நாட்களுக்கு முன்னால் உள்ளனர் என்று அவர் அறிவித்தார். பெய்ரூட்டில் தாக்குதல்களை நடத்தியதிலிருந்து எல்லா திசைகளிலிருந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால், எந்தவொரு சூழ்நிலையிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் [மேலும்] எந்தவொரு தாக்குதலுக்கும் அதிக விலை தேவைப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

கடந்த வாரம் வாஷிங்டனுக்கு நெதன்யாகுவின் வருகை, ஜனாதிபதி பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கின்ற துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடனான சந்திப்புக்களுக்கு பின்னர், இஸ்ரேலின் நடவடிக்கை வெறித்தனமாக சென்றுள்ளது. பெய்ரூட் மற்றும் தெஹ்ரான் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, இஸ்ரேல் தெற்கு லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஜூலை 20 அன்று, ஹவுதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற யேமன் ஹோடிடா துறைமுகத்தையும் இஸ்ரேல் தாக்கியது. 

இஸ்ரேல் யுத்தத்தை அதிகரிப்பதற்கான நேரம் தெளிவுபடுத்துவது என்னவென்றால், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையிலிருந்து  ஒரு பெரிய பிராந்திய மோதலாக விரிவடைவதுக்கு, வாஷிங்டன் நெதன்யாகுவின் வருகையின் போது பச்சை விளக்கு காட்டியுள்ளது என்பதாகும். வாஷிங்டன் பயணத்தின்போது அவர் கலந்துகொண்ட முக்கிய பொது நிகழ்வாக ஜூலை 24 காங்கிரஸின் கூட்டு அமர்வு இருந்தது. அங்கு உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர், ஈரான் மீதான போர்வெறிமிக்க கண்டனங்களுடன் கூடிய கருத்துக்களில் பெரும் பகுதியை மையமாகக் கொண்டிருந்தார். 

யதார்த்தத்தை தலைகுப்புற திருப்புவதன் மூலம், அவர் தெஹ்ரானை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரித்தார், அவர் கோரமான முறையில், காஸாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார். ஆரவாரமான கைதட்டலுக்கு மத்தியில், ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்த்துப் போரிடுவதில், இஸ்ரேல் அமெரிக்காவின் சண்டையை நடத்துகிறது என்றும், இனப்படுகொலை முறைகளைப் பயன்படுத்துவதிலும், சர்வதேச சட்டத்தை துண்டாடுவதற்கும் இஸ்ரேல் வாஷிங்டனின் அலாதியான ஆதரவுக்கு தகுதியானது என்றும் நெதன்யாகு அறிவித்தார். “இஸ்ரேலின் கைகள் கட்டப்பட்டால், அடுத்தது அமெரிக்கா” என்று அவர் அறிவித்தார்.

எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் யுத்தம் எவ்வாறு அபிவிருத்தியடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. மறுக்கமுடியாதது என்னவென்றால், இஸ்ரேலிய ஆட்சியின் நெருக்கடி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, வாஷிங்டன் மற்றும் அவர்கள் தொடங்கிய போரின் தர்க்கம் (தொடர்ச்சியான கொள்ளையடிக்கும் நோக்கங்கள் மற்றும் அதிகரிக்கும் வன்முறை மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை அவர்கள் உருவாக்க முற்படுகிறார்கள்) ஆகியவை, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் இணைந்த வகையில், அவர்களை ஒரு பிராந்திய பரந்த மத்திய கிழக்குப் போருக்கு தவிர்க்கமுடியாமல் இட்டுச் செல்கின்றன.

அத்தகைய போர், பிராந்திய மற்றும் பெரும் வல்லரசுகளின் கூட்டை விரைவாக இழுத்து, ஒரு உலகளாவிய மோதலைத் தூண்டுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் சந்திப்பில், மகத்தான புவி-மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இந்தப் பிராந்தியத்தின் தலைவிதியானது பிரச்சினையாக இருக்கும், 

இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரித்துவரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், காஸா மீதான யுத்தத்தை மத்திய கிழக்கில் ஒரு வெறித்தனமான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாகக் கருதுகின்றன. மேலும், பைடென் மற்றும் பிளிங்கன் தெளிவுபடுத்தியபடி, இஸ்ரேலுடன் அவர்கள் பின்தொடரும் போரானது, வளர்ச்சி கண்டு வரும் உலகப் போரில், ஒரு போர் முனையாகும். மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை பாதுகாப்பது என்பது அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் ஏற்கனவே போரில் உள்ள ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அனைத்து பக்கங்களிலும் இருந்தும், இராணுவ-மூலோபாய மற்றும் பொருளாதார தாக்குதலை மேற்கொள்வதுக்கு அவசியமானது.  

1930 களின் பிற்பகுதியில், பல்வேறு பிராந்திய மோதல்கள் தவிர்க்கமுடியாமல் ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போரில் ஒன்றிணைத்தன. அத்தகைய பேரழிவு தவிர்க்கப்பட வேண்டும் என்றால் - அது தவிர்க்கப்பட வேண்டும் - உலகத் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப்பட வேண்டும். மேலும், ஏகாதிபத்திய போருக்கும் அதற்கு மூலமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

அத்தகைய போராட்டத்திற்கான வேலைத்திட்ட அடித்தளங்களை, ஜூலை 24 அன்று, நெதன்யாகு உரையாற்றிய அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வுக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சி கோடிட்டுக் காட்டியது. போருக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்தின் சீரழிவுகள், சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுக்கான போராட்டம் என்பது, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது. 

மேலும் படிக்க

Loading