ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதலை அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

வியாழனன்று ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்திற்குள்ளான உக்ரேனின் தற்போதைய இராணுவ தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்க, ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புதல் அளித்தனர்.

குர்ஸ்க் பிராந்தியத்தின் தற்காலிக ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் டெலிகிராம் சேனலால் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம், செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 6, 2024 அன்று குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்ஜா நகரில் உக்ரேனிய தரப்பின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த வீட்டைக் காட்டுகிறது.  [AP Photo]

செவ்வாயன்று, உயர்மட்ட பயிற்சி பெற்ற உக்ரேனிய இராணுவம் மற்றும் சிறப்புப் படைப் பிரிவுகள், அமெரிக்க ஸ்ட்ரைக்கர் மற்றும் ஜேர்மன் மார்டர் கவச வாகனங்களைப் பயன்படுத்தி, உக்ரேனிய எல்லைக்கு அருகே உள்ள குர்ஸ்க்கில் ஒரு தரைப்படைத் தாக்குதலைத் தொடங்கின.

இன்றுவரை, உக்ரேனிய படைகள் 350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ஒரு தாக்குதலில் கைப்பற்றியுள்ளன, இதில் குறைந்தது 1,000 துருப்புக்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவை இருக்கலாம். பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் இது மூன்றாவது உக்ரேனிய தாக்குதல் என்றாலும், இது வழக்கமான உக்ரேனிய இராணுவ துருப்புக்களைப் பயன்படுத்தும் முதல் தாக்குதல் மற்றும் இன்று வரையிலும் மிகப் பெரியதாகும்.

வியாழனன்று, அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக குர்ஸ்க் மீதான உக்ரேனிய தாக்குதலை ஆதரித்தனர், இது ரஷ்ய பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களை ஆதரிக்கவில்லை என்ற முந்தைய அமெரிக்க கூற்றுக்களுடன் முரண்பட்டது.

உக்ரேனின் தாக்குதல் “எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகிறது” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை பத்திரிகை செயலாளர் சப்ரினா சிங் வியாழக்கிழமை ஒரு மாநாட்டில் கூறினார்.

உக்ரேன் மீது தாக்குதல்களைத் தொடங்க குர்ஸ்க் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய சிங், அமெரிக்கா “எல்லையைக் கடந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆரம்பத்தில் இருந்தே உக்ரேனை ஆதரித்து வந்துள்ளது” என்று கூறினார்.

ரஷ்யா மீதான தாக்குதல், “தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக” உக்ரேனால் நடத்தப்பட்டு வருகிறது, மேலும் கியேவ் “நமது ஆயுதங்கள், நமது உபகரணங்கள், நமது தகைமைகளை எங்கும் இயக்க முடியும் என்ற அமெரிக்க கொள்கைக்குள்” செயல்பட்டு வருவதாகவும் சேர்த்துக் கொண்டார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மத்தேயு மில்லரும் இதேபோல் தாக்குதலை பாதுகாத்து கூறுகையில், “ஆம், ரஷ்ய எல்லையைக் கடந்து அவர்கள் தற்போது செயல்பட்டு வரும் பகுதியில், அங்கிருந்து தாக்குதல்கள் வருவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்றார்.

ஆகஸ்ட் 2024 உக்ரேனின் குர்ஸ்க் ஒப்லாஸ்ட் ஊடுருவல் [Photo by Ecrusized / CC BY 1.0]

இந்த அறிக்கைகள் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு செய்தித் தொடர்பாளரால் பிரதிபலிக்கப்பட்டன, அது பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், “ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான அதன் போராட்டத்தில் உக்ரேனை ஆதரிப்பதே ஜேர்மன் அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம்” என்று தெரிவித்தது.

ஐரோப்பிய ஆணையம், அதன் பங்கிற்கு, வியாழனன்று, உக்ரேனுக்கு “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை” இருப்பதாகவும், இது “அதன் பிராந்தியத்தில் எதிரியைத் தாக்குவதையும் உள்ளடக்கும்” என்றும் கூறியது.

வியாழனன்று உக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லைக்கு பின்னால் 18.5 மைல் தூரம் வரை செயல்படுவதைக் காண முடிந்தது. இந்த தாக்குதல் அவசரகால நிலை மற்றும் பரவலான வெளியேற்றங்களைத் தூண்டியது.

வியாழக்கிழமையன்று ஒரு அறிக்கையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதலை முறியடித்ததாகக் கூறியது. இத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1,000 படையினர் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் உக்ரேனிய இராணுவம் 600 படையினரையும் 82 வாகனங்களையும் இழந்துவிட்டதாகவும் அது அறிவித்தது. சுமி பிராந்தியத்தில் உக்ரேன் இராணுவப் படைகள் முன்னேறி வருவது குறித்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நாள் முழுவதும் போர்கள் தொடர்ந்து சீற்றத்துடன் இருந்தன, போர் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்ததையும், பிராந்தியம் முழுவதும் பரந்த சேதத்தையும் காட்டும் காட்சிகள் காட்டின.

போர் ஆய்வுக்கான நிறுவனமானது (Institute for the Study of War) புதனன்று கொடுத்த அறிக்கை ஒன்றின்படி, உக்ரேனிய படைகள் 11 குடியிருப்புக்களை கைப்பற்றியுள்ளன.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி வியாழனன்று தாக்குதல்கள் குறித்து ஒரு மறைமுகமான குறிப்பை வெளியிட்டார். அதாவது, “உக்ரேனுக்கு போரைக் கொண்டு வந்த ஆக்கிரமிப்பாளர் மீது ரஷ்யா மீது அதிக அழுத்தம் செலுத்தப்படுகிறதோ, அவ்வளவு நெருக்கமான அமைதி இருக்கும். நியாயமான பலாத்காரத்தின் மூலம்தான் சமாதானம் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

டெலிகிராப்பில் வெளியான ஒரு தலையங்கமானது, “குர்ஸ்க்கில் உக்ரேனின் தாக்குதல் நடவடிக்கைகள் குறைவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. இரவோடு இரவாக, உக்ரேனிய படைகள் சுட்ஜ்னாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, கொரேனெவோவின் புறநகர்ப் பகுதியை அடைந்து, வடக்கு நோக்கி மலாயா லோக்ன்யாவை நோக்கி முன்னேறியதாகக் கூறப்படுகிறது. நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள், உக்ரேன் முழு துரதிர்ஷ்டவசமான கோடை 2023 எதிர் தாக்குதலின் போது இருந்ததை விட அதிகமான நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளது” என்று புகழ்ந்தது.

“எஃப்-16 ஜெட் விமானங்களும் முன்னரங்குகளுக்கு வந்து கொண்டிருப்பதால், புட்டின் கவலைப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன,” என்பதையும் அந்தப் பத்திரிகைத் தலையங்கம் சேர்த்துக் கொண்டது.

இது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 போர் விமானங்களை போர்க்களத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதைக் குறித்த ஒரு குறிப்பாகும், அவைகள் இந்த வாரம் போர் நடவடிக்கைகளைத் தொடங்கின.

வாஷிங்டன் போஸ்ட், அதன் பங்கிற்கு, “ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா பயன்படுத்தி வரும் விமான தளங்களைத் தாக்க நீண்ட தூர அமெரிக்க ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள் வாஷிங்டனைக் கேட்டுள்ளனர்—இந்த முடிவு, ஒப்புதல் அளிக்கப்பட்டால், கியேவ் குர்ஸ்க்கின் ஒரு பகுதியை சிறிது காலத்திற்கு வைத்திருக்க அனுமதிக்கும்,” என்று அறிவித்தது.

சர்வதேச இராணுவத் தளவாடங்கள் மற்றும் இதர தளவாடங்களின் ஒருங்கிணைப்பை நேட்டோவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றும் திட்டத்துடன் வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாட்டை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஏப்ரலில், பைடென் நிர்வாகம் 300 கிலோமீட்டர் (186 மைல்) வரம்பைக் கொண்ட நீண்ட தூர ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கத் தொடங்கியது, அதேவேளையில் அவைகள் ரஷ்யாவுக்குள்ளேயே தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாது என்று கூறியது.

மே மாதத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்ய எல்லைக்குள் “எங்கும்” தாக்க அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிக்கிறது என்று வலியுறுத்தினார்.

குர்ஸ்க்கில் கணிசமான தாக்குதல் இருந்தபோதிலும்கூட, போரின் முக்கிய போர்க்களமான டோனெட்ஸ்க்கில் உள்ள உக்ரேனிய முன்னணி நிலை, உக்ரேனுக்குள் போருக்கு பெருகும் மக்கள் எதிர்ப்பு மற்றும் மனிதவளத்தில் பெரும் பற்றாக்குறைக்கு இடையே சரிவின் விளிம்பில் உள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், அமெரிக்காவும் நேட்டோவும் போரில் அவற்றின் நேரடிப் பங்கு மீது எஞ்சியுள்ள தடைகளையும் அகற்றி வருகின்றன.

குர்ஸ்க் தாக்குதலின் பரந்த இராணுவ முக்கியத்துவம் என்னவாக இருந்தாலும், உக்ரேனியர்களால் இயக்கப்பட்ட ஜேர்மன் மற்றும் அமெரிக்க கவச வாகனங்கள் ரஷ்ய எல்லையைக் கடந்து கொண்டு செல்லப்பட்டு ரஷ்யா மீது தாக்குதல்களைத் தொடங்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும், இந்த மோதலில் நேட்டோவின் ஈடுபாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அபாயகரமான போர் விரிவாக்கம் இப்போதைய விடயமாக உள்ளது

Loading