குர்ஸ்க் மீதான உக்ரேனிய தாக்குதலானது, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க விரிவாக்கத்திற்கான ஊடக அழைப்புகளைத் தூண்டுகிறது

ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில், உக்ரேனின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறிய போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக, உக்ரேன் தனது தாக்குதலை மேற்கொண்டு தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ஆகஸ்ட் 8, 2024 அன்று ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அழிக்கப்பட்ட ரஷ்ய இராணுவப் போக்குவரத்து அணியின் ஒரு நெடுவரிசை. [AP Photo/Government of Kursk]

இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் கூட்டு சேர்ந்து, நாஜி ஜேர்மனியின் படைகளை தீர்க்கமாக தோற்கடித்ததை குறிப்பிட்டு, “இரண்டாவது குர்ஸ்க் போர்” என்று தி எகனாமிஸ்ட் பத்திரிகை பெயரிட்டதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் பாராட்டியுள்ளன. இந்த முறை, எண்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நிலப்பரப்பின் ஒரு பகுதியில் ரஷ்யாவிற்கு எதிராக ஏவி விடப்பட்ட ஜேர்மன் கவச வாகனங்கள் அமெரிக்க வாகனங்களுடன் இணைந்து, ரஷ்யாடன் சண்டையிட்டு வருகின்றன.

உக்ரேனிய, அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் தாக்குதலின் செயற்பாட்டு விவரங்கள் குறித்து பெரிதும் மெளனமாக உள்ளனர். ஆனால், சமூக ஊடக காட்சிகள்தான் நிலைமையின் ஒரே பொதுவான குறிகாட்டி ஆகும்.

கடந்த வெள்ளியன்று, சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகள், ரஷ்ய கூடுதல் படைகளின் ஒரு கவச காலாட்படை அணிவரிசை மீது உக்ரேனிய தாக்குதலுக்குப் பிந்தைய விளைவுகளைக் காட்டின. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும், அந்த காட்சிகள் ஏறத்தாழ ஒரு டசின் அழிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பாரிய இறப்புக்களை காட்டின. இது இன்னும் சரிபார்க்கப்படாத நிலையில், அந்த தாக்குதல் நூற்றுக்கணக்கான ரஷ்ய துருப்புக்களைக் கொன்றிருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், ரஷ்ய மத்திய அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளதாகவும், “அமைதியாக இருங்கள், உங்கள் போராட்ட உணர்வைத் தொடரவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், பீதி மற்றும் விரக்திக்கு அடிபணிய வேண்டாம்” என்றும் குடியிருப்பாளர்களிடம் கூறியதாக தெரிவித்தார். இன்றுவரை, சுமார் 3,000 ரஷ்யர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனித்தனியாக, உக்ரேனிய துருப்புக்கள் ஒரு வீடியோவை வெளியிட்டன. அதில் அவர்கள் ரஷ்ய எல்லைக்குள் சுமார் ஆறு மைல்கள் தொலைவில் உள்ள சுட்ஜா நகரத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டு, ஒரு முக்கிய இயற்கை எரிவாயு நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறினர்.

ஆகஸ்ட் 9 நிலவரப்படி குர்ஸ்கில் உக்ரேனிய தாக்குதல் நிலை [Photo by Ecrusized / CC BY 1.0]

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்து வரும் உக்ரேனிய ஊடுருவலுக்கு அமெரிக்க ஊடகங்கள், நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவை இலக்கில் வைப்பதற்கான ஈடுபாட்டு விதிகளை இன்னும் கூடுதலாக தளர்த்துவதற்கான கோரிக்கைகளுடன், நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு நேரடி மோதலுக்கு முன்பினும் நெருக்கமாக கொண்டு வருவதற்கான கோரிக்கைகளுடன் விடையிறுத்துள்ளன.

“கியேவ் தாக்குதலைத் தொடர அமெரிக்கா உதவுமா?” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் வலியுறுத்தியது, அணுஆயுத அரசுக்கு எதிரான போரில் நேரடியாக ஈடுபடுவதற்காக பைடென் நிர்வாகம் அதன் “சிவப்புக் கோடுகளை” கடக்க வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்தது.

The Journal continued,

ஜேர்னல் பின்வருமாறு தொடர்ந்தது,

ரஷ்யர்கள் ஆச்சரியத்தில் சிக்கிக் கொண்டது, தங்கள் பிரதேசம் ஒரு சரணாலயம் என்று அவர்கள் எவ்வளவு நினைத்தார்கள் என்பதைக் காட்டுகிறது. நேட்டோவை எதிர்த்துப் போராடுவது மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த திரு. புட்டினின் உளறல்களின் இலக்குகளில் இதுவும் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் உக்ரேனை அதன் பிராந்தியத்தில் மட்டுமே சண்டையிடக் கூடியதாக கட்டுப்படுத்த வேண்டும் என்று புட்டின் விரும்புகிறார்.

“ரஷ்யாவில் உள்ள தளங்கள் மற்றும் வினியோக பாதைகளை இலக்கில் வைக்கும் மற்றும் ATACMS ஏவுகணைகளின் பயன்பாட்டின் மீதான வரம்புகளை நீக்கும் மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் உட்பட உக்ரேனுக்குள் இன்னும் அதிக ஆயுதங்களை பாய்ச்சுவதே சிறந்த விடையிறுப்பாகும்” என்று அந்த பத்திரிகை தலையங்கம் நிறைவு செய்தது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மேக்ஸ் பூட், ஒரு ஆசிரியர் தலையங்கத்தில் அமெரிக்காவின் போர் விரிவாக்கத்துக்கான இந்த அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார்:

இந்த தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து பைடென் நிர்வாகம் புகார் செய்யவில்லை என்றாலும், ரஷ்ய விமானத் தளங்கள் மற்றும் ரஷ்யாவிற்குள் ஆழமான பிற இலக்குகளைத் தாக்க அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அது இன்னும் அனுமதி வழங்கவில்லை. ரஷ்யாவின் “சிவப்புக் கோடுகளை” தண்டனையின்றி உக்ரேன் எவ்வாறு அழித்து வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ஜோ பைடென் போட்டியிடத் தயாராக இருக்கும் ஆபத்து இதுவாகும்.

இந்த இரண்டு கருத்துக்களும் வியாழன் அன்று டுவிட்டர் X இல் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக் வெளியிட்ட அறிக்கையின் மாறுபாடுகளாகும். உக்ரேனின் தாக்குதலின் விளைவாக, “உலகளாவிய சமூகத்தின் கணிசமான பகுதியானது ரஷ்யாவை எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஆயுத வகைகளுக்கும் சட்டபூர்வமான இலக்காகக் கருதுகிறது” என்று அவர் கூறினார். மேலும், உக்ரேன் “உலகின் சில பிராந்தியங்களில் வரலாற்று ரீதியாக வலுவான ரஷ்ய சார்பு அனுதாபங்களையும் மேற்கு நாடுகளில் அதிகரிக்கும் அச்சத்தையும் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன் ராய்ட்டர்ஸிடம், பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் ரஷ்ய எல்லையைத் தாக்க பயன்படுத்தலாம் என்று கூறினார்.

ஏப்ரல் மாதம், பைடென் நிர்வாகம் 190 மைல்களுக்கும் அதிகமான தூரத்தில் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பியதை உறுதிப்படுத்தியது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி கடந்த மே மாதம் கிரிமியாவில் உள்ள விமானப்படை தளம் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அசோவ் கடல் பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைத் தாக்கவும் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்கா ரகசியமாக ஆயுதங்களை வழங்கியதை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், மார்ச் மாதத்தில், “அவைகள் இப்போது உக்ரேனில் உள்ளன, சில காலமாக உக்ரேனில் உள்ளன” என்று கூறினார்.

மே 2022 இல், பைடென், “உக்ரேன் அதன் எல்லைகளைத் தாண்டி தாக்குவதை நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது உதவவோ இல்லை” என்று அறிவித்தார். செப்டம்பர் 2022 இல், பைடென், “ரஷ்யாவைத் தாக்கும் ராக்கெட் அமைப்புகளை நாங்கள் உக்ரேனுக்கு அனுப்பப் போவதில்லை” என்று அறிவித்தார்.

ஆனால் ஜூலை மாதம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்ய எல்லைக்குள் “எங்கும்” தாக்க அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிக்கிறது என்று வலியுறுத்தினார்.

இன்றுவரை, ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களை நடத்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எவ்வாறிருப்பினும், குர்ஸ்க் தாக்குதல் மீதான தற்போதைய ஊடக பிரச்சாரம் மீண்டுமொருமுறை உக்ரேனுக்கான அமெரிக்காவின் ஈடுபாட்டு விதிகளை விரிவுபடுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய தாக்குதல் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின் வந்துள்ளது. இது நேட்டோவின் கீழ் உக்ரேனுக்கான மேற்கத்திய ஆதரவின் பரிமாற்றம் மற்றும் ஆயுத தளவாட மேற்பார்வையை மறுசீரமைத்துள்ளது. நூறாயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்களை முழு அளவிலான போரில் ஈடுபடுத்துவதற்கான ஒரு உயர்நிலை தயார்நிலையில் வைக்க நேட்டோவின் படைகளை மறுசீரமைப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களையும் அது செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை உக்ரேனுக்கு மேலும் $125 மில்லியன் டொலர்கள் ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது. போர் ஆய்வுக்கான பயிலகத்தின் கூற்றுப்படி, “HIMARS அமைப்புகள்; 155 மிமீ மற்றும் 105 மிமீ பீரங்கி வெடிமருந்துகள்; ஸ்டிங்கர் ஏவுகணைகள்; Javelin மற்றும் AT-4 டாங்கி எதிர்ப்பு அமைப்புகள்; ரொக்கட் ஏவிகள், ஒளியியல்-கண்காணிப்பு (TOW) டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள்; பல்நோக்கு ரேடார்கள்; HMMWV பல்நோக்கு சக்கர வாகனங்கள்; சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கூடுதல் ஆயுத உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகள்” என்பன அவற்றில் அடங்குகின்றன.

Loading