பைடென் நிர்வாகம் போலியான காஸா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து உலக மக்களின் சீற்றத்திற்கு இடையே, பைடென் நிர்வாகம் நீடித்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதாகக் காட்டி, பேச்சுவார்த்தைகள் பலனளிக்கப் போகிறது என்று பொய்யாகக் கூறிக் கொள்கிறது. அதேபோல், சியோனிச ஆட்சிக்கும் அதன் காட்டுமிராண்டித்தனமான போருக்கும் முழு அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவைப் பராமரிக்கும் அதே வேளையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு அதே குறிப்பில்-போர்நிறுத்தம் பற்றிய வெற்றுப் பேச்சை முடித்துள்ளது.

இஸ்ரேல்-காஸா எல்லைக்கு அருகில் உள்ள ஒரு டாங்கியின் மேல் இஸ்ரேலிய சிப்பாய்கள் நகர்கிறார்கள், தெற்கு இஸ்ரேலில் இருந்து எடுக்கப்பட்டது, புதன்கிழமை, ஆகஸ்ட் 21, 2024. [AP Photo/Leo Correa]

யதார்த்தத்தில், பல மாதங்களாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு மோசடியாகவே இருந்து வந்துள்ளன. இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஜூலை 31 அன்று ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் படுகொலைக்கு அங்கீகாரம் அளித்ததன் மூலம், மிகவும் ஆத்திரமூட்டும் வகையில், எந்தவொரு ஒப்பந்தத்தையும் பலமுறை நாசப்படுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க வழங்கிய ஒப்பந்தத்தின் வடிவமைப்பு அத்தகையதாக இருப்பதால், எந்த போர்நிறுத்தமும் தற்காலிகமானது என்பது மட்டுமின்றி, இஸ்ரேலிய இராணுவம் அதன் இனப்படுகொலையை தொடர்வதற்கு முழுமையான சுதந்திரத்தையும் கொடுக்கும்.

கடந்த வாரம் இஸ்ரேலில் இருந்த வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஆறு வார போர் நிறுத்தம், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தல் மற்றும் காஸாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக, திங்களன்று நடந்த நெதன்யாகுவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கூறினார்.

பிளிங்கன் வெளியேறிய உடனேயே, அமெரிக்க அதிகாரியுடன் பகிரங்கமாக முரண்பட்ட நெதன்யாகு, காஸா மற்றும் எகிப்துக்கு இடையிலான எல்லையை ஒட்டிய ஒரு இடைத்தடை மண்டலமான பிலடெல்பி தாழ்வாரத்தை ஒட்டி இஸ்ரேலிய இராணுவ பிரசன்னம் இருக்கும் என்று அறிவித்தார். எந்தவொரு ஆயுதக் கடத்தலையும் கட்டுப்படுத்த அதன் துருப்புக்கள் இருப்பது அவசியம் என்று கூறும் இஸ்ரேல், காஸாவிற்குள் நுழையும் வழிகள் மீதான தன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி உணவு, மருந்துகள், மருத்துவக் கருவிகள் உட்பட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள் காஸாவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளது.

நெதன்யாகு செவ்வாயன்று திட்டவட்டமாக அறிவித்தார்: “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கும் நிலையில் பிலடெல்பி தாழ்வாரத்தில் இருந்து பின்வாங்க நான் தயாராக இல்லை. நாங்கள் அங்கிருந்து வெளியேறினால், அங்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என்று எங்கள் மீது மிகப்பெரும் அரசியல் அழுத்தம் இருக்கும்—ஆனால் நாங்கள் அங்கேயே தங்கியிருந்தால் அதுபோன்ற எந்த அழுத்தமும் இருக்காது.”

இடைத்தடை பகுதியை இராணுவமயமாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள இஸ்ரேலிய ஆட்சி, ஹமாஸோ அல்லது எகிப்தோ அத்தகைய நிபந்தனைகளை ஏற்காது என்பதை நன்கு அறியும். இஸ்ரேல் பிலடெல்பி தாழ்வாரத்தை ஒட்டி எட்டு கண்காணிப்பு கோபுரங்களை கட்ட முன்மொழிந்திருந்தது. அமெரிக்கா அதை இரண்டாக மாற்ற முற்பட்டது. ஆனால் எகிப்து எந்த கண்காணிப்பு கோபுரங்களையும் கட்டுவதையோ அல்லது எல்லையில் நிரந்தர இஸ்ரேலிய பிரசன்னத்தையோ முற்றிலும் நிராகரிக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், வியாழனன்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூறுகையில், பிலடெல்பி தாழ்வாரம் உட்பட முக்கிய முட்டுக்கட்டைகள் மீது வெளிப்படையான உடன்பாடு இல்லாத போதிலும், ஒரு உடன்பாடு “இப்போது பார்வைக்கு வந்துள்ளது” என்றார். ஞாயிறன்று ஒரு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இதுபோன்ற விடயங்கள் தீர்க்கப்படும் என்ற கருத்து கற்பனையானது.

எகிப்துடனான பிலடெல்பியா தாழ்வாரத்தில் இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் இராணுவ நிலைகளின் எண்ணிக்கை பற்றிய ஒரு புதிய இஸ்ரேலிய முன்மொழிவு, எல்லையை இராணுவமயமாக்கும் முந்தைய திட்டத்தை விட எகிப்து மற்றும் ஹமாஸுக்கு ஏற்புடையதாக இருக்காது.

ஆரம்பத்தில் இருந்தே நெதன்யாகு காஸாவில் இராணுவத் தாக்குதலுக்கு ஒரு தற்காலிக நிறுத்தம் மற்றும் அவரது நிபந்தனைகளைத் தவிர வேறு எதிலும் தனக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அவரது அரசாங்கத்தின் மற்றும் மந்திரிசபையின் அதிதீவிர வலதுசாரி உறுப்பினர்கள் எந்தவொரு போர்நிறுத்தத்தையும் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.

மே 31 அன்று பைடெனால் அறிவிக்கப்பட்ட மூன்று கட்ட ஒப்பந்தத்தின் கட்டமைப்பானது, சியோனிச ஆட்சியின் இனப்படுகொலைப் போரைத் தொடரும் உறுதிப்பாட்டிற்கும், ஹமாஸின் நிரந்தரப் போர்நிறுத்தம் மற்றும் காஸாவின் மறுகட்டமைப்புக்கான கோரிக்கைகளுக்கும் இடையே உள்ள கட்டுப்பாடற்ற இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.

மே 31 அன்று அறிவிக்கப்பட்ட மூன்று கட்ட உடன்பாட்டிற்கான கட்டமைப்பு, சியோனிச ஆட்சி அதன் இனப்படுகொலை போரைத் தொடர்வதற்கான உறுதிப்பாட்டிற்கும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காஸாவின் மறுகட்டமைப்பிற்கான ஹமாஸின் கோரிக்கைகளுக்கும் இடையிலான இணைக்க முடியாத இடைவெளியை நிரப்பும் என்று கருதப்பட்டது. முதல் ஆறு வார போர்நிறுத்தம் கோட்பாட்டளவில் இரண்டாவது கட்டம் —இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், காசாவில் இருந்து அனைத்து இஸ்ரேலிய துருப்புக்களும் திரும்பப் பெறுதல் மற்றும் எஞ்சியுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் விடுவித்தல்— பின்னர் மூன்றாவது கட்டம் புனரமைப்பு மற்றும் இறுதி மீட்சியை உள்ளடக்கியுள்ளது.

பைடெனின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர், நெதன்யாகு எக்ஸ்/ட்விட்டரில் “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிலைமைகள் மாறவில்லை” என்று பதிவிட்டார். மேலும் அவர், “ஹமாஸின் இராணுவ மற்றும் ஆளும் திறன்களை அழிப்பது, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது,” என்று அதில் குறிப்பிட்டார். அதற்குப் பிந்தைய மாதங்களில், காஸா மீதான ஒரு நிரந்தர இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு நிகரான ஒன்றைப் பாதுகாப்பதற்கான அவரது தீர்மானத்தை நெதன்யாகு மாற்றிக் கொள்ளவில்லை—எகிப்துடனான எல்லையில் உள்ள கண்காணிப்பு கோபுரங்கள் வெறுமனே ஒரு அம்சம் மட்டுமே.

ஒபாமா நிர்வாகத்திற்கான இஸ்ரேலிய-பாலஸ்தீன விவகாரங்கள் மீதான ஒரு பேச்சுவார்த்தையாளரான பிராங்க் லோவன்ஸ்டைன் நேற்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் “உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முழு மூன்று கட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதில் நெதன்யாகு பல மாதங்களாக தெள்ளத் தெளிவாக உள்ளார்... [திங்களன்று] செயலாளர் பிளிங்கனிடம் அவர் என்ன கூறினார் என்றாலும், அவர் உண்மையில் ஒரு தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலையை கூட விரும்பவில்லை என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

உண்மையில், போர்நிறுத்த உடன்பாடு, இறுதியில் ஒப்புக் கொள்ளப்பட்டால், உண்மையில் இஸ்ரேல் கடைசி இரண்டு கட்டங்களை புறக்கணித்து, காஸாவில் அதன் அழிவுகரமான தாக்குதலை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது - இனப்படுகொலையை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் ஒரு சாக்குப்போக்கை அது இட்டுக்கட்டவில்லை என்று கருதுகிறது. காஸாவை ஒரு தரிசு நிலமாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை அளிப்பது உட்பட, இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் பைடென் நிர்வாகம் தொடர்ந்து கொடுக்கும் என்பதையும் முற்றிலும் தெளிவாக்கியுள்ளது.

மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில், இஸ்ரேலிய துருப்புக்கள் நேற்று மத்திய மற்றும் தெற்கு காஸாவில் மேலும் 18 பாலஸ்தீனியர்களை கொன்றதாக அல் ஜசீரா அறிவித்தது. இது அக்டோபர் 7 முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை குறைந்தபட்சம் 40,265 ஆக கொண்டு வந்தது. மேலும் 93,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீண்டும் கூடுதலான வெளியேற்றங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது காஸாவில் உள்ள முழு மக்களையும் போதுமான தங்குமிடம், உணவு, சுத்தமான நீர் மற்றும் மருத்துவ கவனிப்பு இல்லாத உள்நாட்டு அகதிகளாக மாற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் மார்ஃபின் தீர்ந்தபோது, உறுப்பு நீக்கம் என்பது ‘முடிவில்லாத கொடுங்கனவாக’ மாறிவிட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்” என்ற தலைப்பில், வாடிக்கையாகி விட்ட பல சமூக கொடூரங்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்துள்ளது. காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் பொறுப்பற்ற குண்டுவீச்சின் விளைவாக குழந்தைகள் மீது ஏற்படுத்தப்பட்ட கொடூரமான காயங்கள் ஏராளமான உடல் உறுப்புக்களை வெட்டுவதற்கு வழிவகுத்தது. அவற்றில் சில மயக்க மருந்து கொடுக்காமலேயே செய்யப்பட வேண்டியதாயிற்று.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் மூர்க்கத்தனம், “உதவி மற்றும் சுகாதார அமைப்புகள் புரிந்து கொள்ள சிரமப்படுவதாக கூறும் அளவிற்கு, உறுப்பு இழந்த குழந்தைகளின் ஒரு புதிய தலைமுறையை” உருவாக்கியுள்ளது என்று கட்டுரை குறிப்பிட்டது. மேலும், ஐ.நா குழந்தைகள் அமைப்பின் கூற்றுப்படி, யுனிசெஃப், “போரின் முதல் இரண்டு மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கால்கள் துண்டிக்கப்பட்டன-அதாவது, ஒரு நாளைக்கு 13க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்,”

கடந்த டிசம்பரில் அல்-அக்ஸா மருத்துவமனையில் பணிபுரிந்த அமெரிக்க குழந்தை மருத்துவர் சீமா ஜிலானி, அவரும் மற்ற மருத்துவர்களும் வேலை செய்த அதிர்ச்சிகரமான நிலைமைகளைப்பற்றி விவரித்தார் — தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் இல்லாமல் குழந்தைகள் உயிரிழப்புகளால் நிரம்பி வழிந்தனர். இந்த நிலைமை “முடிவில்லாத கனவு” என்று அவர் கூறினார், அதாவது குழந்தைகள் உட்பட மிகவும் மோசமாக காயமடைந்த சிலர் பெரும்பாலும் இறக்க விடப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

காஸாவில் மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் இப்போது மேலும் சீரழிந்துள்ளன. ABC அறிவித்துள்ளபடி, உறுப்புக்களை இழந்த காஸா மக்களின் எண்ணிக்கை குறித்து துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், மருத்துவ அதிகாரிகளும் உதவிக் குழுக்களும் இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த துயரமான இறப்பு எண்ணிக்கை, மற்ற இறப்புக்கள், காயங்களுடன் சேர்ந்து, அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலிய இனப்படுகொலை, எந்த தற்காலிக போர் நிறுத்தமும் எட்டப்பட்டாலும், அல்லது அடையப்படாவிட்டாலும் நிச்சயமாக உயரும்.

Loading