டாலர் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க ட்ரம்ப் சுங்கவரிப் போரைத் தொடங்க இருக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னணி சர்வதேச செலாவணி நாணயமாகவிருக்கும் டாலரின் நிலையை ஈவிரக்கமின்றி பாதுகாக்க எப்போதுமில்லாத வகையில் அவரது சுங்கவரி போர் அச்சுறுத்தலைக் கொண்டு விரிவான முறையில் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

சனிக்கிழமை (30-11-2024) பிற்பகல் ட்ரம்ப்பின் சமீபத்திய அச்சுறுத்தல் அவரது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளத்தின் ஒரு பதிவில் வந்துள்ளது, அதில் அவர் கூறுகையில், டாலருக்கு ஒரு மாற்றீட்டை உருவாக்க முயற்சிக்க கூடாது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், பிரிக்ஸ் குழு நாடுகள் அமெரிக்காவிற்கு அவற்றின் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் 100 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024 அன்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கரோலினாவின் கிரீன்ஸ்போரோ கொலிசியத்தில் நடந்த பிரச்சார பேரணியில். [AP Photo/Alex Brandon]

ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் குழு, இப்போது ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்ஜென்டினா, எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகியவற்றை உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது, குழு உறுப்பினர்களுக்குக் குறைந்தபட்சம் டாலர் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிக்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறது.

அமெரிக்காவின் நிதியியல் மேலாதிக்கத்தைப் பராமரிப்பதில் உலகளவில் டாலர் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற போது, இந்த நகர்வுகள் ட்ரம்பிடம் இருந்து ஒரு ஆவேசமான விடையிறுப்பைக் கொண்டு வந்துள்ளது—இது உலகளாவிய சந்தைகளிலும் மற்றும் பொருளாதாரங்களிலும் மேலும் உறுதியிற்ற தன்மையை அச்சுறுத்துகிறது, சீனாவுக்கு எதிராக 60 சதவீதமும் உலகின் மற்றைய நாடுகளுக்கு 10-20 சதவீத சுங்கவரி விதிக்கும் அச்சுறுத்தலையும் ஏற்கனவே எதிர்கொள்கின்றன.

“பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கின்றன, அதே நேரத்தில் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் எழுதியுள்ளார்.

“அவர்கள் ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கமாட்டார்கள், அல்லது சக்திவாய்ந்த அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கமாட்டார்கள் என்று இந்த நாடுகளிடமிருந்து ஒரு உத்தரவாதம் தேவைப்படுகிறது, அல்லது அவர்கள் 100 சதவீத சுங்கவரிகளை எதிர்கொள்ள நேரிடும், மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்திலிருந்து விடைபெறுவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டும்.

“அவர்கள் வேறு ஒரு ‘ஏமாற்றுபவரிடம்’ போகலாம்! சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாகப் பிரிக்ஸ் கொண்டுவருவதற்கு வாய்ப்பில்லை, அப்படி முயற்சிக்கும் எந்த நாடும் அமெரிக்காவிடமிருந்து விடைபெறுகிறோம் என்று சொல்ல வேண்டும்.

இந்த அச்சுறுத்தல் ஒரு சனிக்கிழமை பிற்பகலில் ட்ரம்பின் தலையில் தோன்றிய ஒன்றல்ல, ஆனால் எந்தவொரு மாற்று நாணயமும் நிறுவப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே வரிவிதிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படலாம் என்பதை தெளிவுபடுத்திய ஒரு விவாதமாக சில காலமாக அவருடைய பரிவாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரலில், புளூம்பேர்க், “இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களை” மேற்கோளிட்டு, ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்கள் “அமெரிக்க நாணயத்தை குறைக்க முக்கிய வளர்ந்து வரும் சந்தைகளிடையே வளர்ந்து வரும் நகர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக— “டாலரைப் பயன்படுத்துவதிலிருந்து நாடுகள் விலகிச் செல்வதைத் தடுப்பதற்கு” வழிகளைப் பரிசீலித்து வருவதாக அறிவித்தது.

“ஏற்றுமதி கட்டுப்பாடுகள், செலாவணி மோசடி கட்டணங்கள் மற்றும் சுங்கவரிகள் உட்பட தெரிவுகளுடன், டாலர் அல்லாத பிற நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட செயலூக்கமான வழிகளை நாடும் கூட்டாளிகள் அல்லது எதிரிகளுக்கான அபராதங்களும்” அந்த விவாதங்களில், உள்ளடங்கி இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வணிக ஊடகமான சிஎன்பிசி க்கு மார்ச் 11 அன்று அளித்த ஒரு நேர்காணலில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலைப்பாட்டிற்கு டாலர் மேலாதிக்கத்தின் முக்கியத்துவத்தை ட்ரம்ப் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார்.

“நாடுகள் டாலரை விட்டு வெளியேறுவதை நான் வெறுக்கிறேன்,” என்று அவர் கூறினார். “நாடுகள் டாலரை விட்டு வெளியேறுவதை நான் அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால் அந்த அளவுகோலை நாம் இழக்கும்போது, அது ஒரு புரட்சிகர போரில் தோற்பதற்குச் சமமாக இருக்கும். அது நம் நாட்டுக்குப் பேரிடியாக அமையும்” என்றார்.

பைடென் நிர்வாகம் உலக அளவுகோலாக இருந்த டாலரை இழந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார், இது “நாம் மிகப்பெரிய போரில் இழப்பதற்கு சமம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

விஸ்கான்சினில் நடந்த ஒரு பிரச்சார பேரணியிலும், நியூ யோர்க் பொருளாதார மன்றத்தில் வழங்கிய ஓர் உரையிலும் உட்பட, இதுபோன்ற கருத்துக்கள் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன, அதில் சுங்கவரி விதிப்புகளைத் கட்டாயமாக்குதல் அவரது பொருளாதார திட்டநிரலின் மையத்தில் இருப்பதாக ட்ரம்ப் விளக்கினார்.

பிரிக்ஸ் குழு ஒரு புதிய உலகளாவிய நாணயத்தை உருவாக்குவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்றாலும் —அதன் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் பிளவுபட்டு கிடக்கின்றனர் மற்றும் மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவிடம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு அதனிடம் மூலதனம் மற்றும் நிதிச் சந்தைகள் இல்லை— டாலர் சார்புநிலையைக் குறைப்பதற்கான நகர்வுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும், அவை அதன் உலகளாவிய பங்கைப் பலவீனப்படுத்துகின்றன.

பிப்ரவரி 2022 இல் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோவைத் தூண்டிய போரின் தொடக்கத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் அப்போதிருந்து விவாதத்தில் இருந்த டாலரிலிருந்து விலகிச் செல்வது பற்றி மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டிருந்தது. ரஷ்ய மத்திய வங்கி வைத்திருந்த $300 பில்லியன் டாலர் நிதியியல் சொத்துக்களை முடக்கியதன் மூலம் அமெரிக்கா பதிலளித்திருந்தது மற்றும் ஸ்விஃப்ட் (SWIFT) சர்வதேச பணவழங்கீடு முறையிலிருந்தும் ரஷ்யாவை விலக்கிவிட்டது.

உலக மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையை மீறும் எந்தவொரு நாடும் அதே நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசின் நிதியுதவியில் நீண்டகாலமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்த டாலர் மேலாதிக்கம், வரலாற்றில் மிகுந்த கடனாளியாக மாறியுள்ள நிலைமைகளின் கீழ், மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது; சாராம்சத்தில், இது ஒரு திவாலான பேரரசாக மாறுகிறது.

அமெரிக்க தேசிய அரசாங்க கடன் சமீபத்திய ஆண்டுகளில் அதிவேகமாக அதிகரித்து இப்போது 36 டிரில்லியன் டாலரை நோக்கிச் செல்கிறது. கடன் அளவு எந்தளவிற்கு உள்ளது என்றால், பழைய கடன்களுக்கான ஆண்டு வட்டி இப்போது 1 டிரில்லியன் டாலருக்கு பக்கமாக உள்ளது. அரசாங்க செலவினங்களில் ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு டாலர் அதை ஈடுகட்ட ஒதுக்கப்படுகிறது.

டாலர் மேலாதிக்கம், மிதமிஞ்சிய சலுகை என்று அழைக்கப்படுவது, பெரிய அல்லது சிறிய வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்காவை அனுமதிக்கிறது. அதாவது, அமெரிக்க நாணயத்தின் மீது உலகளாவிய ரீதியில் சார்ந்திருப்பதன் காரணமாக உலகின் பிற நாடுகளால் நிதி அளிக்கப்படும் என்பதை அறிந்திருப்பதால், எப்போதும் விரிவடைந்து செல்லும் இராணுவ வரவு-செலவு திட்டத்திற்கு நிதியளவைக் குறைக்காமல், அது அரசாங்கத்தைக் கடனில் இயக்க முடியும்.

ட்ரம்பின் கருத்துப்படி, எவ்வாறிருப்பினும், எப்பொழுதும் நிலவும் மற்றொரு நிதியியல் நெருக்கடி அச்சுறுத்தலாலோ அல்லது அமெரிக்க செலாவணியின் பிடியிலிருந்து வெளியேற முனையும் மற்ற நாடுகளாலோ டாலரின் நிலைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டால், பின்னர் அமெரிக்கா ஒரு பெரும் நிதி நெருக்கடியை முகங்கொடுக்கும் —இது ஒரு போரில் தோற்பதற்கு சமமானதாகும்.

ட்ரம்ப்பின் பொருளாதார திட்டநிரல், இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, கடன் தொகையில் ஒரு பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு கட்சி சார்பற்ற அமைப்பாக தன்னைத்தானே காட்டிக் கொள்ளும் ஒரு பொறுப்பான பெடரல் வரவு-செலவு திட்டக்கணக்கிற்கான (Responsible Federal Budget) குழுவின் மதிப்பீடுகளின்படி, பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்த தனிநபர்களுக்கான கூடுதல் பிரதான வரிக் குறைப்புகளை உள்ளடக்கிய ட்ரம்பின் முன்மொழிவுகள், 2026 மற்றும் 2035 க்கு இடையில் பெடரல் பற்றாக்குறை 7.8 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும். முன்மொழியப்பட்ட கட்டண உயர்வுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கூட.

உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாகப் பல பொருட்கள் அமெரிக்க எல்லையைக் கடந்து பல முறை முன்னும் பின்னுமாகச் செல்வதால் வரிக்கட்டண உயர்வுகள் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். உற்பத்தி நிறைவு செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதியாளரால் அவை செலுத்தப்படும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினாலும். சந்தைக்கு வரும்போது இது பணவீக்க விகிதத்தை அதிகரிக்கும்.

அதிகரித்து வரும் கடன் பிரச்சினையைச் சமாளிக்க கிரிப்டோ நாணயத்தைப் (crypto currency) பயன்படுத்தக் குடியரசு கட்சியின் சில பிரிவுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன.

குடியரசுக் கட்சி செனட்டர் சிந்தியா லும்மிஸ் (Cynthia Lummis) அமெரிக்க அரசாங்க நிதிக்குப் பயனளிக்கும் ஒரு “மூலோபாய பிட்காயின் (bitcoin) இருப்பு” நிறுவப்பட வேண்டும் என்றும், அமெரிக்க அரசாங்க கடனைக் குறைக்க ஒரு மில்லியன் பிட்காயின்களின் இருப்பு பயன்படுத்தப்படும் என்றும் முன்மொழிந்துள்ளார்.

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க நிதிய முறை பெருகிய முறையில் உள்ளார்ந்த மதிப்பு இல்லாத மற்றும் கடுமையான ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட ஒரு நிதிச் சொத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். “தெய்வங்கள் யாரை அழிக்கப் போகிறார்களோ, அவர்களை முதலில் பைத்தியமாக்க வேண்டும்” என்ற பழைய பழமொழி உடனடியாக நினைவுக்கு வருகிறது.

இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் மாரிஸ் ஒப்ஸ்ட்ஃபெல்ட் (Maurice Obstfeld), நிதியியல் அமைப்புமுறையில் கட்டுப்பாடற்ற கிரிப்டோவை அறிமுகப்படுத்தியதன் மூலம், அங்கே விதிமுறைகளைத் தளர்த்துவதாகவும், அமெரிக்காவை “உலகின் கிரிப்டோ தலைநகராக” மாற்றுவதறாகவும் ட்ரம்ப் சபதம் செய்ததாக என்று குறிப்பிட்டார். இது “நெருக்கடிகள், மந்தநிலைகள், பாரிய அரசாங்க பிணையெடுப்புகள் மற்றும் இன்னும் பெரிய பொதுக் கடன்களுக்கு நிச்சயமாக நெருப்பு வைத்துக்கொள்ளும் வேலையாகும்.”

அவரது பொருளாதார மற்றும் நிதியியல் திட்டநிரல் எவ்வாறு செயல்படும் என்பது ட்ரம்ப் உட்பட எவரொருவருக்கும் துல்லியமாகத் தெரியாது, ஆனால் சில முடிவுகளை ஏற்கனவே எடுக்க முடியும். அமெரிக்க டாலரிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அல்லது நாடுகளின் குழுவுக்கு எதிராகவும் அவர் ஒரு பொருளாதாரப் போரைத் தொடங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்திருப்பது, சாராம்சத்தில் அரசு திவால்நிலையை ஒப்புக்கொள்வதாகும்.

டாலர் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு உயிர் பிழைப்புகான பிரச்சினை ஆகும். அது அதன் இராணுவ சக்தியின் ஆதரவுடன் நட்பு மற்றும் எதிரிக்கு எதிராக சர்வதேச பொருளாதார, நிதியப் போரை மேற்கொள்ளும். அத்துடன் அதைத் தக்க வைத்துக் கொள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த தாக்குதல்களையும் மேற்கொள்ளும்.

Loading