இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் மே 6 அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபைக்கும், கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ நகர சபைக்கும் சோசலிச சமத்துவக் கட்சி மொத்தம் 34 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தும் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏற்கனவே வெளியிடப்பட்டு, எங்கள் வேட்பாளர்களால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு உண்மையைச் சொல்லும் ஒரே அமைப்புகள் ஆகும்.
ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி தலைமையிலான மக்கள் போராட்ட முன்னணி உட்பட ஏனைய கட்சிகளின் தேசியவாத வாய்வீச்சுக்களை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கின்றது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளை தேசிய அடிப்படையிலோ அல்லது முதலாளித்துவ அமைப்பின் கீழோ தீர்க்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது.
கடந்த ஆண்டு தேர்தல்களின் போது, ஜே.வி.பி./தே.ம.ச.யின் வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு தன்மை குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அதன் தொடக்கத்திலிருந்தே, அனைத்து எதிர்க்கட்சிகளின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவுடன், திசாநாயக்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தொழிலாள வர்க்கம் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியையும் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தையும் மட்டுமன்றி, பூகோள நிதி மூலதனத்தையும் அனைத்து ஏகாதிபத்திய முகவரமைப்புகளையும் எதிர்கொள்கின்றது.
இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மையமாகக் கொண்டு ஆழமடைந்து வரும் பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியிலேயே நடைபெறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாசிச வழிமுறைகளைப் பயன்படுத்தி, புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறார், சமூக சேவைகளை நீக்குகிறார், அனைத்து நாடுகள் மீதும் வர்த்தகப் போரைத் தொடங்குகிறார், குறிப்பாக பூமியை ஒரு பேரழிவு தரும் மூன்றாம் உலகப் போரை நோக்கித் தள்ளும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்துகிறார்.
முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்துப் போராட, தொழிலாள வர்க்கத்திற்கு ட்ரொட்ஸ்கிசத்தை, அதாவது இன்றைய மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டம் தேவையாகும். அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் அவற்றிற்கு உடந்தையாக இருப்பவர்களிடம் இருந்தும் விலகி, தங்கள் அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை சுயாதீனமாக அணிதிரட்டி, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணையுமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் கிராமப்புற மக்களுக்கு ஆதரவாக அணிதிரண்டு, திசாநாயக்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக பரந்த அளவிலான நாடு தழுவிய போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி/ஐ.வை.எஸ்.எஸ்.இ. தேர்தல் பிரச்சாரம், அனைத்து வேலைத் தளங்களிலும் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், சிறு விவசாயிகள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக ஒன்றுபட்ட நடவடிக்கையில். இதேபோன்ற குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் தொழிலாளர்களுக்குக் கல்வியூட்டப் போராடுகிறது.
இந்த முன்னோக்கு, இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி விடுத்துள்ள அழைப்பின் ஒரு பகுதியாகும். பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், சமூகத்தை மறு ஒழுங்கு செய்ய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே எங்கள் முன்னோக்கு ஆகும்.
தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களை இந்த முக்கியமான பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்தைப் பற்றிய பரந்த சாத்தியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்பைத் தொடர்பு கொண்டு எங்கள் பிரச்சாரத்திற்கு பரந்த ஆதரவை வழங்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணம்
கூட்டம் நடைபெறும் இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள YMCA கேட்போர் கூடம் (கச்சேரி அருகில்)
திகதி மற்றும் நேரம்: ஏப்ரல் 7 பிற்பகல் 3.30 மணிக்கு.
கொழும்பு
கூட்டம் நடைபெறும் இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
திகதி மற்றும் நேரம்: ஏப்ரல் 9 மாலை 4.30 மணிக்கு.
மாத்தறை
கூட்டம் நடைபெறும் இடம்: மாத்தறையில் உள்ள தபால் அலுவலக கேட்போர் கூடம்
திகதி மற்றும் நேரம்: ஏப்ரல் 26 பிற்பகல் 3.00 மணிக்கு.
எங்கள் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி:
வட்ஸ்அப் எண்: 0773562327
மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk
மேலும் படிக்க
- சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராக, சோசலிசத்திற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றது
- இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு
- இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார்