உக்ரேனிய சோசலிஸ்டும் போர்-எதிர்ப்பு செயற்பாட்டாளருமான போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையைக் கோருங்கள்!

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் (Bogdan Syrotiuk) தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (Security Service of Ukraine - SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bogdan Syrotiuk

25 வயதான மோசமான உடல்நலத்துடன் இருக்கும் போக்டன், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொடூரமான நிலைமைகளின் கீழ் நிகோலேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்மையில், போக்டன் முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பிற்கும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பாளர் ஆவார். அவர் உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களானது ஒரு போலியான நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், போக்டனுக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது, இது மரண தண்டனைக்கு சமமாகும்.

இடதுசாரி இயக்கங்கள் மீதான செலென்ஸ்கியின் ஆட்சியின் மூர்க்கமான ஒடுக்குமுறைக்கு போக்டானின் கைது சமீபத்திய உதாரணமாகும். போருக்கு இடதுசாரி இயக்கங்களின் எதிர்ப்பு உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் விடையிறுப்பைக் கண்டு வருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் போக்டன் சிரோட்டியுக் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரும் ஒரு உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. போக்டனின் விடுதலைக்கான போராட்டம் என்பது ஏகாதிபத்தியப் போர், இனப்படுகொலை மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.

கோரிக்கை மனுவில் கையெழுத்திடுங்கள்
எங்களுடன் தொடர்பு கொள்ளவும்
நன்கொடை

போக்டனை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்!

போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான உலகளாவிய போராட்டத்தில் இணைந்து கொள்ள உங்கள் தகவலை இங்கே சமர்ப்பிக்கவும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது

இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.

Evan Blake

உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!

ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.

David North

உக்ரேனிய சோசலிஸ்டும் நேட்டோவின் பினாமிப் போரின் எதிர்ப்பாளருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!

ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோ.ச.க./IYSSE (இலங்கை) போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் சக்திவாய்ந்த கூட்டத்தை நடத்தியது

கட்சியின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட கொழும்பு பொதுக்கூட்டத்தை இதுவரை 2,200க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 200 பேர் பகிர்ந்துள்ளனர்.

Our reporters