"வரும் நாட்களில்" தைவான் நீரிணை வழியாக அமெரிக்கா போர்க்கப்பல்களை அனுப்பும் என அமெரிக்க கடற்படை நிறுவனம் தெரிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதையடுத்து, தைவான் ஜலசந்தியில் ஏற்பட்ட இராணுவ முட்டுக்கட்டைக்கு மத்தியில், 'வரும் நாட்களில்”, தைவான் ஜலசந்தி வழியாக போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என, அமெரிக்க கடற்படை நிறுவனத்தின் வெளியீடு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

திங்களன்று, வெள்ளை மாளிகையின் முந்தைய அறிக்கைகளை பென்டகன் உறுதிப்படுத்தியது, அமெரிக்கா மற்றொரு 'தடையற்ற வழிசெலுத்தலின் பயிற்சி' என்று அழைக்கப்படுவதைத் திட்டமிடுகிறது, கொள்கைக்கான பாதுகாப்பு துணைச் செயலாளர் கொலின் கால், 'நாங்கள் கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, தைவான் நீரிணை போக்குவரத்துகளையும் தொடர்ந்து செய்வோம், வரவிருக்கும் வாரங்களில்... பிராந்தியத்தில் பிற இடங்களில் வழிசெலுத்துவதற்கான தடையற்ற செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.”

அமெரிக்க கடற்படை வழங்கிய இந்த புகைப்படத்தில், Arleigh Burke-class வழிகாட்டி-ஏவுகணை அழிப்பான் யுஎஸ்எஸ் பென்ஃபோல்ட் (DDG 65) ஜூன் 24, 2022 அன்று பிலிப்பைன்ஸ் கடலில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. (Mass Communication Specialist 2nd Class Arthur Rosen/U.S. Navy via AP)

அமெரிக்கா, USS ரொனால்ட் ரீகன் தலைமையிலான ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவை, தீவுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் நிறுத்தியுள்ளது. USS America Expeditionary Strike Group தற்போது ஜப்பானின் சசெபோவில் அருகிலுள்ள துறைமுகத்தில் உள்ளது.

அமெரிக்கா சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து உலகின் மறுபுறத்தில், சீன நீர்நிலைக்கு அருகே அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரித்துள்ளது.

ஆனால் அமெரிக்க மற்றும் சீன போர்க்கப்பல்கள் ஒன்றையொன்று நிழலாடுவதையும் வானொலி எச்சரிக்கைகளை வெளியிடுவதையும் வழக்கமாக உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகள் எதுவும் இதுபோன்ற பதட்டமான இராணுவ மற்றும் அரசியல் சூழலில் இதுவரை நடந்ததில்லை.

சீனப் படைகள் பெலோசியின் வருகைக்குப் பின்னர் தைவானைச் சுற்றி நேரடி-சூட்டு இராணுவப் பயிற்சிகளை காலவரையின்றி நீட்டித்துள்ளன, மேலும் 'சிக்கலான மின்காந்த சூழலின் கீழ் கூட்டு முற்றுகையின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன' என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் தைவான் பகுதியில் இயங்கி வருகின்றன, ஆனால் இன்னும் பயிற்சியில் இணைந்ததாக அறிவிக்கப்படவில்லை.

குளோபல் டைம்ஸ், சீன விமானம் தாங்கி கப்பல்கள் பயிற்சியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 'தைவான் தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளிப்புற சக்தி குறுக்கீடுகளின் பாதைகளைத் தடுத்து துண்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என தகவல் தெரிவிக்கிறது.

பெலோசியின் பயணத்தைத் தொடர்ந்து, சீன அரசாங்கமும் சீன இராணுவப் படைகளும் தங்கள் அமெரிக்க சகாக்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன, இது அமெரிக்க மற்றும் சீனப் படைகளுக்கு இடையே நிகழும் முட்டுக்கட்டை இன்னும் கூடுதலான ஆபத்து மற்றும் கணிக்க முடியாத தன்மையைக் கொடுத்துள்ளது.

பெலோசியின் வருகைக்கு முன்னரே, சீன அதிகாரிகள் தங்கள் அமெரிக்க சகாக்களிடம் தைவான் நீரிணையை சர்வதேச கடற்பகுதியாக கருதக்கூடாது என வாதிட்டனர், அமெரிக்க போர்க்கப்பல்கள் அல்லது விமானங்கள் ஜலசந்தியை கடந்து செல்வதைத் தடுக்க முற்படும் வாய்ப்பை சீன கடற்படை எழுப்பியது.

குளோபல் டைம்ஸ், சீன இராணுவ நிபுணரின் யோசனைகளை தனது வார்த்தையில் கூறுகையில், 'PLA தைவான் தீவைச் சுற்றி அதன் தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு மத்தியில் புதிய வழிசெலுத்தல் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைக்க முடியும், மேலும் இது அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தியில் நுழைவதை தந்திரோபாய அலகுகள் மட்டத்தில் இருந்து தடுக்கும்' என்று குறிப்பிட்டது.

அது தொடர்ந்தது, 'தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தைவான் பிரச்சினை போன்ற முக்கிய விட்டுக்கொடுக்க முடியாத நலன்களை பாதுகாப்பதில் PLA ஒரு அங்குலத்தையும் கொடுக்காது என்பதை அமெரிக்கா உணர வேண்டும்' என்று சாங் கூறினார்.

தைவான் ஜலசந்தியைச் சுற்றியுள்ள இந்த மிகைப்படுத்தப்பட்ட இராணுவ நிலையை கருத்தில் கொண்டு, மேலும் ஒரு அமெரிக்க சுதந்திரமான வழிசெலுத்தல் நடவடிக்கை ஆபத்தை உயர்ந்த அளவில் விளைவிக்கும்.

தைவான் விவகாரத்தில், சீனாவுடன் அமெரிக்க போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவது குறித்து ஊடகப் பிரிவுகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், கட்டுரையாளர் ஜிடியோன் ராக்மன் எச்சரித்தார், 'கடந்த காலத்தில் தைவான் மீதான அமெரிக்க-சீனா போர் ஒரு உண்மையான சாத்தியம் போல் தோன்றியது — ஆனால் அதற்கு மேல் இல்லை. இப்போது அதிக எண்ணிக்கையிலான வல்லுநர்கள் அமெரிக்க-சீன மோதல் சாத்தியமானது மட்டுமல்ல, நிகழக்கூடியது என்று நம்புகிறார்கள்.”

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் ஆசியா இயக்குனர் ஜேம்ஸ் க்ராப்ட்ரீ இன் ஒரு அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார், அவர் எச்சரித்தார், 'எங்கள் தற்போதைய போக்கில், வரவிருக்கும் தசாப்தத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒருவித இராணுவ மோதல், இப்போது இருப்பதை விட அதிகமாக தெரிகிறது.”

செவ்வாயன்று, தைவான் மீதான அமெரிக்கப் போரின் விளைவுகளை அரங்கேற்றம் செய்யும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியமான இறுதி முடிவுகள் குறித்து தொடர்ச்சியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பங்கேற்பாளர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றாலும், இந்த அனுமானமான போர், இதுவரை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் அழிவுகரமான அமெரிக்க இராணுவ மோதலாக இருந்தது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், 'தைவானை ஆக்கிரமித்த முதல் மூன்று வாரங்களில், சீனா இரண்டு பில்லியன் டாலர் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களை மூழ்கடித்து, ஜப்பான் மற்றும் குவாம் முழுவதும் அமெரிக்க தளங்களைத் தாக்கி, நூற்றுக்கணக்கான மேம்பட்ட அமெரிக்க ஜெட் போர் விமானங்களை அழித்தது.”

உருவகப்படுத்தப்பட்ட பயிற்சியில், 'சீன ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் ஜப்பானிய மேற்பரப்பு கடற்படையின் பெரும் பகுதியை மூழ்கடித்து, 'தரையில் நூற்றுக்கணக்கான விமானங்களை' அழிக்கின்றன.'

ஒரு பங்கேற்பாளர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் தெரிவிக்கையில், “இழப்புகளின் அளவைப் பற்றிய உணர்வைப் பெற, எங்கள் கடைசி ஆட்டத்தில், அமெரிக்கா நான்கு வார மோதலில் 900 க்கும் மேற்பட்ட போர்/தாக்குதல் விமானங்களை இழந்தது. அது கடற்படை மற்றும் விமானப்படை இருப்புகளில் பாதியாகும்.

விமர்சன ரீதியாக, போர் அனுமான தயாரிப்புக்கள் அத்தகைய மோதலில் இழக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கையை கணக்கிடவில்லை, ஆனால் அத்தகைய இழப்புகளுடன் கூடிய குறைந்தபட்ச காட்சி சீனா, தைவான் மற்றும் ஜப்பான் மற்றும் அமெரிக்க மாலுமிகள் மற்றும் விமானப் படையினர்கள் உள்ளிட நூறாயிரக்கணக்கானோரின் மரணத்தை குறிக்கும்.

இந்த கொடூரமான வாய்ப்பு இருந்தபோதிலும், அமெரிக்கா இடைவிடாமல் சீனாவுடனான பதட்டங்களை அதிகரிக்க முயல்கிறது, அதன் நீடித்த பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் எதிர்ப்பின் வளர்ச்சியிலிருந்து ஒரு வழியை போரில் காண்கிறது.

சீனாவுடனான மோதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி வந்தாலும், ரஷ்யாவுடனான போரை அதிகரிக்க உக்ரேனில் உள்ள தனது பினாமி அரசாங்கத்தை ஊக்குவித்து வருகிறது. தைவான் ஜலசந்தி வழியாக பயணம் செய்ய அமெரிக்க திட்டங்களை மீண்டும் வலியுறுத்தி, அதே செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கா முதல் முறையாக உக்ரேனுக்கு HARM கதிர்வீச்சு-எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்புவதை ஒப்புக்கொண்டது.

அதே நாளில், கிரிமியாவில் ஒரு ஆயுதக் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டது, கிரெம்ளின் உக்ரேனிய தாக்குதல் என்று மறுத்தது.

வெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் பேசிய உக்ரேனிய ஜனாதிபதியும் அமெரிக்கப் பினாமியுமான வோலோடிமிர் செலென்ஸ்கி, “உக்ரேனுக்கு எதிரான இந்த ரஷ்யப் போர் மற்றும் சுதந்திர ஐரோப்பா முழுவதற்கும் எதிரான இந்த ரஷ்யப் போர், கிரிமியாவில் இருந்து தொடங்கியது, அது அதன் விடுதலையுடன் முடிவடைய வேண்டும். அது எப்போது நடக்கும் என்று இன்று சொல்ல முடியாது. ஆனால் கிரிமியாவின் விடுதலைக்கான சூத்திரத்தில் நாங்கள் தொடர்ந்து தேவையான கூறுகளைச் சேர்த்து வருகிறோம் ... நாங்கள் உக்ரேனிய கிரிமியாவுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தெரியும்.”

கிரிமியா மீதான படையெடுப்பை உயிர்வாழ்வு அச்சுறுத்தலாக கருதுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மால்கொம் சேம்பர்ஸ் எச்சரித்தார், 'கிரிமியாவை இழக்க நேரிடுகையில், புட்டின் [அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை] ஒரு பயனுள்ள சூதாட்டமாகக் கருதலாம்.'

ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல்களை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் திட்டவட்டமான மற்றும் ஒரே நேரத்திலான முயற்சிகள் மனிதகுலம் அனைத்தையும் ஒரு பாரிய பேரழிவிற்கு அச்சுறுத்துகின்றன. இந்த திட்டங்களை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும்.