பிரிட்டிஷ் ட்ரொட்கிஸ்டுகள் இலங்கை சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான அரசாங்க-சார்பு குண்டர் தாக்குதலை கண்டிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி)யின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் இருவர் மீது அரசாங்க-சார்பு குண்ர்கள் நடத்திய கொடூரமான தாக்குலை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுக்கு எதிர்ப்புக் கடிதங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கடிதங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை சட்ட அதிகாரிகளால் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தொழிற்சங்க குண்டர்களால் தாக்கப்பட்ட (இலங்கை) சோ.ச.க உறுப்பினர் தேஹின் வசந்த

நவம்பர் 30 அன்று, சோ.ச.க., உறுப்பினர்களான தேஹின் வசந்த, லக்ஷமன் பெர்னான்டோ ஆகியோர் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் உள்ள பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்க (PPSS) கிளையின் தலைவர் இந்திக பெரேரா மற்றும் செயலாளர் சுரங்க பியவர்தன ஆகியோரால் வன்முறையாகத் தாக்கப்பட்டுள்ளனர். பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கமானது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சங்கமாகும்.

வசந்தவுமு் பெர்னான்டோவும் கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்க சோ.ச.க.,யின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் உரையாற்றிய ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டு சம்பந்தமாக சோ.ச.க., நடத்திய பகிரங்க கூட்டங்களுக்காக பல்கலைக்கழக்தின் பின்புற வாசலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை சோ.ச.க ஆனது, இந்தக் குண்டர் தாக்குதலை எதிர்த்தும் கட்சி அதன் அரசியல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான அதன் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாக்கவும் தேசிய மற்றும் சர்வதேச ஆதரவை அணிதிரட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

நாம், பிரித்தானிய சோ.ச.க.யின் தேசிய செயலாளர் மற்றும் உதவி தேசிய செயலாளர் மற்றும் கட்சியின் உள்ளுர் கிளைகளில் ஒன்றினால் அனுப்பப்பட்ட கடிதங்களை கீழே பிரசுரிக்கின்றோம்.

பிரித்தானிய சோ.ச.க.:

பிரித்தானியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையில் உள்ள எமது சகோதர கட்சியின் இரு உறுப்பினர்களான தேஹின் வசந்த மற்றும லக்ஷ்மன் பெர்னாண்டோ மீது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்க கிளையின் தலைவர் இன்திக பெரேரா மற்றும் செயலாளர் சுரங்க பியவர்தன ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது.

மரக்கட்டைகளைப் பயன்படுத்தி நவம்பர் 30 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் வசந்தவின் இரண்டு விரல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான காயங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ள அதேவேளை லக்ஷ்மனுக்கு மோசமான கீறல்கள் மற்றும் கழுத்தில் காயமும் ஏற்பட்டன. வசந்தவின் தலையில் அடிக்கும் முயற்சியை அவர் தடுக்காமல் விட்டிருந்தால் இந்தக் தாக்குதல் மரணத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அமெரிக்க சோசலிச தலைவர் ஜோசப் கிஷோர் உரையாற்ற இருந்த ட்ரொட்ஸ்கிசத்தின் நுாற்றாண்டைக் குறிக்கும் ஒரு கூட்டத்திற்கான பிரச்சாரத்தை தடுக்க அரசியல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த மோசமான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கையால் சோசலிச சமத்துவக் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் கோபம் அடைந்துள்ளனர். பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கமானது இலங்கை ஆளும் பொது ஜன முன்னணி சார்ந்த அமைப்பு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து உறுப்பினர்களும் தமது தோழர்களான வசந்த, லக்ஷ்மன் ஆகியோருக்கு அக்கறையுடன் கூடிய ஆதரவு அறிக்கையை அனுப்புமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, குண்டர்களுக்கு எதிராக நடவடிக்ககை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்திக பெரேரா மற்றும் சுரங்க பியவர்தனவை கூடிய விரைவில் சட்டத்தின் முழுப் பலத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினம் அவர்களிடம் சோ.ச.க. கோருகின்றது.

இந்த கொடூரமான தாக்குதலை தனிப்பட்ட முறையில் கண்டிக்கவும் படமாக்கப்பட்ட இந்த சம்பவத்தின் மீது உடனடியாவும் பக்கசார்பற்ற விசாரணையைத் தொடங்கவும் இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக மிக விரைவான மற்றும் தகுந்த ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கவும் வேண்டுமென மொரட்டுவப் பல்கலைக்கழக துனைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்ய சோ.ச.க.யின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.

சோ.ச.க., இந்த மோசமான சம்பவத்தை பிரிட்டனில் உள்ள தொழிலாளர் இயக்கம் முழுவதும் தெரியப்படுத்தும் எனவும் அந்த சம்பவத்திற்கு பதிலிறுப்பாக உங்களால் எடுக்கப்ட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடும் எனவும் நாம் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

கிறிஸ் மார்ஸ்ட்

தேசிய செயலாளர்

சோசலிச சமத்துவக் கட்சி (பிரித்தானியா)

தோமஸ் ஸ்கிரிப்ஸ், ஐக்கிய இராச்சிய சோ.ச.க. உதவிச் செயலாளர்

அன்பின் ஐயா,

நான், நவம்பர் 30 வியாழன் அன்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீது குண்டர் தாக்குதலை நடத்திய பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலங்கையில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள அவர்களின் தோழர்கள் பயமுறுத்தல்ளை நிராகரிப்பதோடு, இந்த அரசியல் வன்முறைக்குப் சார்பாக இருக்கமாட்டோம்.

பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பிற்போக்கு அரசியலைப் பொறுத்தளவில் அத்தகைய தாக்குதலை ஏற்றுக்ககொள்ளக் கூடியாத கருதினாலும் தொழிலாளர்கள் மாணவர்களுக்கு முன்னால் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கொள்கைகளை மீறியமைக்கு அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர். மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பிரச்சாரம் செய்ய சகல உரிமையும் எமது கட்சிக்கு உள்ளதோடு அதன் நிலைப்பாடுகளுக்கு கணிசமான ஆதரவையும் வென்றுள்ளது. எமது உறுப்பினர்கள் மீதான தாக்குதல் அவர்களின் உரிமைகளை மட்டுமன்றி சுதந்திரமாக அரசியல் கலந்துரையாடல் செய்ய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ள உரிமையும் மீறுகின்றது.

இறுதியாக, இன்திக பெரேரா மற்றும் சுரங்க பியவர்தனவின் நடவடிக்கைகள் சந்தர்ப்பவாத தாக்குதல் அல்ல, மாறாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் தொடர்புடைய தனிநபர்களால் முன்னெடுக்கபட்ட திட்டமிட்ட மற்றும் அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த குற்றகரமான நடவடிக்கையின் தயாரிப்புக்கு காரணமான அனைவரையும் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நாம் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

தோமஸ் ஸ்கிறிப்ஸ்

உதவித் தேசிய செயலாளர்

சோசலிச சமத்துவக் கட்சி

பிரித்தானிய சோ.ச.க.

சோ.ச.க. தெற்கு யோர்க்க்ஷைர் கிளை:

சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன, துணைவேந்தர், மொரட்டுவ பல்கலைக்கழகம்.

திரு. சஞ்சய் இராஜரட்ணம், சட்டமா அதிபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியில் இருக்கும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் தொடர்புடைய பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் அதிகாரிகள் எமது இலங்கைத் தோழர்கள் மீது முன்னதாகவே திட்டமிடப்பட்டு அரசியல்ரீதியாக உள்நோக்கம் கொண்டு நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் உறுதியாகக் கண்டிக்கிறோம்.

பட்டப்பகலில் இந்த குண்டர் தாக்குதலை மேற்கொள்வதற்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முழு அதிகாரத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமையை வன்முறையில் நசுக்குவதை மன்னித்து ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதற்கு சமனாகும்.

எமது தோழர்கள், நவம்பர் 30 அன்று மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசுவதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சட்டப்பூர்வமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது குண்டர்கள் காரணமின்றி காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் உடனடியான இலக்கு சோசலிச சமத்துக் கட்சியாக இருந்த போதிலும், இது அதிகளவில் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமது உயிர் மற்றும் பாதுகாப்பு பற்றி அஞ்சாமல் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமைக்கு எதிராக இயக்கப்பட்டது ஆகும்.

தாக்குதலின் விளைவாக தோழர்கள் லக்ஷ்மன் பெர்ணான்டோ மற்றும் தேஹி வசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமளவுக்கு உடற்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் இன்திக பெரேரா மற்றும் செயலாளர் சுரங்க பியவர்தன என நாம் குறிப்பிடுகின்றோம். “நாம் இன்றே உங்களை தீர்த்துக் கட்டுவோம். மீண்டும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வர அனுமதியோம்” என அவர்கள் கூச்சலிட்டதால், அவர்களின் குற்றச் செயலின் நோக்கம் தெளிவாக உள்ளது.

தைரியமாகவும் ஒழுக்கமாகவும் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், கோழைத்தனமான குண்டர்களை தடுத்து நிறுத்த ஏனைய சோ.ச.ச. உறுப்பினர்களின் உதவியை பெறாமல் இருந்திருந்தால் எமது தோழர்கள் மீதான சரீர பாதிப்பு மோசமாக இருந்திருக்கும்.

எமது தோழர்கள் மீதான தாக்குலின் வீடியோ பதிவில் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் அதிகபட்ச தீங்கை விளைவிப்பதற்காக மரத்தடிகளைப் பயன்படுத்தி அத்தகைய குற்றவியல் நடவடிக்கையை தண்டணையின்றி செய்ய முடியும் என்பது போல் செயற்பட்டிருப்பது தெரிகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து பொலிஸ் மற்றும் நீதவான்களின் பிரதிபலிப்பின் மூலம், அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. பொலிஸ், காயங்களின் அளவைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதோடு முறையான விசாரணைகளை பின்பற்றி ஆதாரங்களை சேகரிப்பதற்கு தாக்குதல் நடத்தியவர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்படவில்லை. நீதிபதியால் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் இன்னமும் பதவியில் உள்ளனர்.

ஸ்ராலினிசத்திற்கு எதிராக சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நுாறாவது ஆண்டு குறித்து அமெரிக்க பிரிவின் முன்னணி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற இருந்த இரண்டு கூட்டங்களுக்கு எமது தோழர்கள் பிரசுரங்களை விநியோகித்தனர். எமது உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பிரிவு, ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சிக்கான போராட்டத்திற்கு முக்கியமான மற்றும் முன்னணி பாத்திரத்தை வகித்து வருகின்றது.

உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் 20 ஆம் நுாற்றாண்டின் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுடன் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேல் சியோனிச ஆட்சியின் கொலைகார முற்றுகை உட்பட ஏகாதிபத்திய போரின் வெடிப்பை எதிர்நோக்குகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் முகங்கொடுக்கும் சமூக சமத்துவமின்மை, போர், கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம், அரச ஒடுக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் எழுச்சி போன்ற அனைத்து எரியும் பிரச்சனைகளும் சர்வதேசப் பிரச்சினைகள் ஆகும், அவற்றுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் உலகலாவிய மற்றும் புரட்சிகர தீர்வே அவசியமாகும்.”

இந்த சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டத்தில் அவர்களின் வளரந்துவரும் நன்மதிப்பு காரணமாகவே இலங்கையில் உள்ள எமது உறுப்பினர்கள் வன்முறை அரசியல் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என நாம் நம்புகிறோம். இந்தப் போராட்டமானது, விக்கிரமசிங்க ஆட்சிக்கும், பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தில் உள்ள தொழிற்சங்க குண்டர்கள் நியாயப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிர்ச்சி சிக்கன நடவடிக்கைக்கும் எதிரானதாகும்.

சோ.ச.க., உறுப்பினர்களுக்கு எதிராக நவம்பர் 30 அன்று மேற்கொள்ளப்பட்ட வன்முறையான தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலைமை உத்தியோகபபூர்வ மூடிமுறைப்பின் அனைத்து அடையாளங்களையும் வெளிப்படுத்துகின்றது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அதன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து எமது இலங்கைப் பிரிவால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை விரிவுபடுத்த நாம் செயற்படுவோம்.

உண்மையுள்ள

தெற்கு யோர்க்க்ஷைர் கிளை

சோசலிச சமத்துவக் கட்சி

எதிர்ப்புக் கடிதங்களை பின்வரும் முகவரிகளுக்கு அனுப்புமாறு சோ.ச.க. வலியுறுத்துகிறது. பிரதி ஒன்றை சோ.ச.க.யின் மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வையுங்கள்.

சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன, துணைவேந்தர், மொரட்டுவ பல்கலைக்கழகம்.

மின் அஞ்சல்: vc@uom.lk அல்லது ndg@uom.lk

சட்டமா அதிபர் திரு. சஞ்சய் இராஜரட்ணம்.

மின் அஞ்சல்: agdurgentmotions@gmail.com

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அதன் உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சி குண்டர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கிறது

இலங்கை சோ.ச.க. அதன் உறுப்பினர்கள் மீதான அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதலுக்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது

விக்கிரமசிங்க ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு: தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை நோக்கி முன்செல்!

Loading