நவ-பாசிச தேசிய பேரணி பதவிக்கு வரவிருக்கும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அதன் நடவடிக்கை உத்தரவுகளை வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரான்சின் அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியானது (RN), சமீபத்தில் பாராளுமன்றத்தில் அதன் ஆதரவுடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி மிஷேல் பார்னியே தலைமையிலான வரவிருக்கும் வலதுசாரி அரசாங்கத்தின் கொள்கைகளை ஆணையிட விரும்புகிறது. நேட்டோ போர்கள், கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கடுமையான புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளுக்கு ஆதரவாக பார்னியே அடிப்படையில் அதிதீவிர நிலைப்பாடுகளை முன்னெடுக்கிறார். எவ்வாறிருந்த போதினும், பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு RN வாக்குகளை நம்பியிருக்கும் அரசாங்கத்தின் திட்டநிரலை அமைக்க தேசிய பேரணி கட்சியினர் உத்தேசித்துள்ளனர்.

பிரான்ஸ் அதிதீவிர வலதுசாரி தலைவர் மரின் லு பென் பேசும்போது, பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணியின் தலைவரான ஜோர்டான் பார்டெல்லா தேர்தல் இடம்பெற்ற இரவு, கட்சியின் தலைமையகத்தில் உரையைக் கேட்கின்றார். [AP Photo/Lewis Joly]

ஞாயிறன்று லா ட்ரிபியூன் (La Tribune) க்கு அளித்த ஒரு நேர்காணலில், RN தலைவர் மரின் லு பென், பார்னியேவை தான் தேர்ந்தெடுத்ததாகவும், புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகள் குறித்த அவரின் எதிர்பார்ப்புகளை விவரித்ததாகவும் பெருமைபீற்றிக் கொண்டார். மக்ரோன், “அவரது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பதில் RN இன் அளவுகோல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டார். … மிஷேல் பார்னியே குடியேற்றம் குறித்து நம்முடையதைப் போலவே அதே அவதானிப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தி, “மிஷேல் பார்னியே புலம்பெயர்வு குறித்த விடயத்தில் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்பதை மறுக்க முடியாது. இனி அவரது நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். அதிகார மாற்றத்தின் போது அவரே இதைச் சொன்னார்: குறைவாகச் சொல்லுங்கள், அதிகம் செய்யுங்கள்” என்று மரின் லு பென் குறிப்பிட்டார்.

நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்குப் பின்னர், அதிவலது ஆதரவைச் சார்ந்திருக்கும் பிரான்சின் முதல் தேசிய அரசாங்கம் பார்னியே அரசாங்கம் என்பதை இந்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. இது ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் அவருடைய புதிய மக்கள் முன்னணியின் (NFP) அரசியல் திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது. RN ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக, மேக்ரோனுடன் NFP ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியது. ஆனால், மக்ரோன் தேர்தல் முடிவுகளை மிதித்து ஒரு அதிதீவிர வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சிக்கு வரச் செய்தார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் RN க்கு வாக்களிக்கும் அளவிற்கு, மரின் லு பென்னின் கருத்துக்கள் அவரது கட்சியின் தீவிர பிற்போக்குத்தனமான கொள்கையை வெளிப்படுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் வாக்குகளை வெல்வதற்காக அதை குறைக்க முயன்றார் எவ்வாறாயினும், அவரது கட்சி, விச்சி ஆட்சியால் உருவாக்கப்பட்ட அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யும் பரவலாக வெறுக்கப்படும் ஜனாதிபதிக்கு இது ஆதரவை வழங்குகிறது, ஓய்வூதியங்களைக் குறைக்கவும், காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கவும், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் பிரெஞ்சு இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுக்கவும் வேலை செய்கிறது.

லா ட்ரிபியூன் பத்திரிகையில் லு பென், பார்னியே அரசாங்கத்தை தான் ஸ்திரப்படுத்தி ஆதரிக்கப் போவதாக விளக்கினார். புதிய அரசாங்கத்தைத் தடுப்பது RN இன் நோக்கம் அல்ல என்று வலியுறுத்திய அவர், அதன் “விருப்பம் ஒரு தடையை ஏற்படுத்தக்கூடாது” என்று விளக்கினார். அவர் மேலும், “நாங்கள் விரும்பியிருந்தால், புதிய மக்கள் முன்னணி செய்ததைப் போலவே நாங்களும் செய்திருப்போம், ஒவ்வொருவரையும் தணிக்கை செய்ய அச்சுறுத்தியிருப்போம். எங்கள் மனநிலை அதுவல்ல” என்று அவர் கூறினார்.

இதேபோல, RN தலைவர் ஜோர்டான் பார்டெல்லா சனிக்கிழமை இரவு TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பார்னியே அரசாங்கத்தைத் தடுப்பதன் மூலமாக, RN அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்காது என்று உறுதியளித்தார். ஆரம்பத்தில் இருந்தே எதிர்கால அரசாங்கத்தை கண்டனம் செய்வதன் மூலம் “நிறுவன ஒழுங்கின்மை மற்றும் ஜனநாயக குழப்பத்தில்” பங்கேற்க அவர் விரும்பவில்லை என்று பார்டெல்லா கூறினார். மேலும், அவர் “நேரடியாக எந்த விவாதங்களையும்” நடத்தவில்லை என்று பார்டெல்லா தெரிவித்தார்.

பிரான்சில் இப்போது வெளிப்படையாக ஒரு அதிவலது அரசாங்கமாக இருக்கும் ஒன்றின் உருவாக்கமானது, ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் துரிதமாகவும் கூர்மையாகவும் வலதை நோக்கித் திரும்புகின்ற நிலையில், மெலோன்சோன் மற்றும் புதிய மக்கள் முன்னணியின் திவால்நிலையை திறம்பட அம்பலப்படுத்துவதை உள்ளடக்கி உள்ளது. இது NFP இன் ஏகாதிபத்திய-சார்பு வேலைத்திட்டம் மற்றும் முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க சமூக அடித்தளம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் விடுத்த எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகிறது. உண்மையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரை ஆதரிப்பது மற்றும் பிரான்சிற்குள் உளவுத்துறை முகமைகள் மற்றும் இராணுவ போலிஸைப் பலப்படுத்துவது போன்ற வலதுசாரி நடவடிக்கைகளுக்கு NFP வேலைத்திட்டம் அறிவுறுத்தியது.

ஜூனில், மக்ரோன் ஒரு வலதுசாரி அரசாங்கம் அல்லது ஒரு அதிவலது RN அரசாங்கத்தை உருவாக்க பெரும்பான்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பிற்போக்குத்தனமான கொள்கைகளைப் பின்தொடர்வதற்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெளிநாட்டவர் விரோத நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ தலைமையிலான போரை விரிவாக்குவதற்கும் அவர் நோக்கம் கொண்டிருந்தார். ஆனால், “செல்வந்தர்களின் ஜனாதிபதி” மக்ரோனுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்ததால் நிலைமை நேர்மாறாக நடந்தது. முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிஸ்டுகள் (PCF), பசுமை கட்சியினர் மற்றும் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (France Unbowed – LFI) கட்சி ஆகியவற்றின் ஒரு கூட்டணியான NFP தேர்தலில் முதலிடத்தைப் பிடித்தது.

ஜோன் லூக் மெலோன்சோனின் NFP ஜூலை 7ம் தேதி 182 இடங்களை வென்றது. மக்ரோனின் குழும (Ensemble) கூட்டணி 163 இடங்களுடன் பின்தொடர்ந்தது, அதேவேளையில் அதிவலது தேசிய பேரணி 143 இடங்களைப் பெற்றது, பெரும்பாலும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் RN இன் வெற்றியைத் தடுக்க NFP குழும வேட்பாளர்களை வழிமொழிந்தது.

RN அதிகாரத்தை எடுப்பதைத் தடுக்க தொழிலாளர்கள் NFP க்கு வாக்களித்தனர். எவ்வாறிருப்பினும், NFP குழும வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமையானது, நவ-பாசிசவாதிகளுடன் சேர்ந்து மக்ரோன் அவரது கூட்டணி அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப நடைமுறையளவில் உதவியது என்பதையே இது அர்த்தப்படுத்தியது.

ஆனால் மக்ரோன் ஒரு NFP வேட்பாளரை பிரதமராக நியமிக்க மறுத்ததுடன், RN நிர்வாகிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், அதற்கு பதிலாக ஏழு வாரங்கள் காத்திருந்து, இறுதியில் RN ஆதரவிலான ஒரு வலதுசாரி, சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்க பார்னியரை பரிந்துரைத்தார். இந்த பிற்போக்குத்தனமான விளைவு, NFP மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் மீண்டும் மீண்டும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதன் விளைவாக ஏற்பட்டதாகும்..

பிரான்சின் போர் பொருளாதாரத்திற்கு நிதியாதாரத்தை திரட்டுவதற்காக ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்திய மக்ரோனின் செல்வாக்கிழந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை மில்லியன் கணக்கானவர்கள் கடந்த ஆண்டு எதிர்த்தனர். அதேநேரத்தில், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் மக்ரோனை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்திருந்ததை கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன. அதேபோல, மக்களில் பெரும் பெரும்பான்மையினர் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ தலைமையிலான போரில் பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்தும் திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மெலோன்சோன், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவற்றின் கூட்டாளிகள் இறுதியில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான அத்தனை போராட்டங்களையும் இரத்து செய்து, அவற்றை நிறைவேற்ற அனுமதித்தன.

இந்த ஆண்டு, ஜூலை 7 தேர்தல்களுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகளை மதிக்க மக்ரோன் மறுத்ததற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மெலோன்சோன் மறுத்துவிட்டார். ஒரு அதிதீவிர வலது அரசாங்கத்தை நிறுவுவதற்கு சதித்திட்டம் தீட்டுவதற்கு மக்ரோனுக்கு அவகாசம் வழங்கி, இந்த கோடை முழுவதிலும் இந்த பிரச்சினை மீது ஒரேயொரு வேலைநிறுத்தத்திற்கும் கூட NFP அழைப்பு விடுக்கவில்லை. மக்ரோன் முன்கணித்தபடியே ஒரு வலதுசாரி செயற்பாட்டாளரான பார்னியரை பிரதமராக தேர்ந்தெடுத்த பின்னர், செப்டம்பர் 7 அன்று, NFP ஒரேயொரு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை TF1 தொலைக்காட்சியில் இடம்பெற்ற தனது நேர்காணலில், நிர்வாகம் ஒரு “புதிய சகாப்தத்தில்” நுழைகிறது என்று பார்னியே உறுதியளித்தார். முன்னாள் வலதுசாரி அமைச்சரும் EU Brexit பேரம் பேசுபவருமான அவரது சொந்த “பேச்சுவார்த்தை திறன், மக்களை ஒன்றிணைக்கும் திறன், மற்றவர்களை மதிக்கும் திறன், மற்றும் கவனத்துடன் கேட்பது” ஆகியவை பார்னியரின் நியமனத்திற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

கடந்த ஆண்டின் ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து வினவிய போது, இந்த ஆண்டும் இன்னும் கூடுதலான வெட்டுக்களுடன் தொடர அவர் உத்தேசித்திருப்பதாக கூறிய பார்னியே, சீர்திருத்தத்தை “மேம்படுத்துவதற்காக” அவர் “விவாதத்தைத் தொடங்க” விரும்புவதாக தெரிவித்தார், மேலும் “மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக இந்த சட்டத்தை மேம்படுத்துவதற்கான விவாதத்தை நான் தொடங்குவேன், நான் அதை சமூக பங்காளிகளுடன் சேர்ந்து செய்வேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார். NFPயுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இப்போது தொழிலாளர்களை இலக்கு வைத்து மேலதிக சமூக வெட்டுக்கள் குறித்து பார்னியேயின் அதிவலது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன என்பதற்கு இது ஒரு சமிக்ஞையாகும்.

மக்ரோனும், அத்துடன் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் மதிப்பிழந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளின் இறுதி விழாவில் அவர் கலந்து கொண்டபோது, ஆயிரக்கணக்கானோர் அவரை கேலி செய்தனர்.

எவ்வாறிருப்பினும், அதி தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தை ஆளும் வர்க்கம் சட்டப்பூர்வமாக்குவதற்கான எதிர்ப்பை, பல தசாப்தங்களாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக இருந்து, தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமாக இருந்துவரும் அழுகிய NFP மற்றும் மெலோன்சோன் ஆகியோரால் தலைமை கொடுக்க முடியாது. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கும் மெலோன்சோன் போன்ற போலி-இடது சக்திகளுக்கு எதிராக சோசலிசத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading