இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) ஜனவரி 3 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தின் மீதான பேராதனைப் பல்கலைக் கழகத்தின் ஜனநாயக-விரோத தடைக்கு எதிராக, தீவு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பிரச்சாரஙக்களை அதிகரித்துள்ளன.
“சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகப் போராடுவது எப்படி?” எனத் தலைப்பிடப்பட்ட ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் திட்டமிடப்பட்ட கூட்டம், அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தால் அனுசரணை வழங்கப்பட்டது. சங்கமானது இந்த விரிவுரைக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவரிடம் இருந்து அவசியமான அனுமதியைப் பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட இந்த விரிவுரை நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, “இந்த விரிவுரையை விளம்பரப்பட்டுத்தப்பட்டுள்ள அதன் தலைப்பு மற்றும் கருப்பொருளின் கீழ் நடத்த முடியாது” என, உதவி துணைவேந்தர் ரஞ்சித் பல்லேகம, அரசியல் விஞ்ஞானத் துறையின் ஊடாக அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் சிரேஷ்ட பொருளாளருக்கு தகவல் அனுப்பினார். இந்த ஜனநாயக விரோத தடையின் உடனடியான அழுல்படுத்தலானது ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் மீது மாத்திரம் அல்லாமல், சகல மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி-சார ஊழியர்களினதும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
கடந்த வாரங்களாக ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கொழும்பு, மொரட்டுவ அதே போல் வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் தெற்கில் ருகுணு பல்கலைக்கழகங்களிலும் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் ”இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரை மீதான தடையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது“ எனத் தலைப்பிடப்பட்ட ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கையின் நுாற்றுக்கணக்கான தமிழ் மற்றும் சிங்களப் பிரதிகளை விநியோகித்தனர்.
உலக சோசலிச வலைத் தளம் இந்தக் கூட்டத் தடையை கண்டித்து மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து வந்த பல அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்தப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்கு, பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகபுர்வ மாணவர் ஒன்றியத்தின் பிரதான ஆதரவாளரான மளிஷ கவிந்தவும் முயற்சித்த போதிலும், ஜனவரி 23 அன்று மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து பலமான ஆதரவு கிடைத்தது. அவர்களின் முயற்சிகள் தோற்றுப் போயின.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவரான ஹர்ஷ, “ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தை பல்கலைக்கழகம் தடை செய்தமையானது உண்மையை அறிவதற்கு எமக்குள்ள வாய்ப்பை தடுக்கின்றது. அரசாங்கம் சொல்வதை மாத்திரம்தான் நாம் கட்டாயம் கேட்க வேண்டுமா? கூட்டங்கள் மீதான இத்தகைய தடைகளை பற்றி நாம் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இதற்கு எதிராக போராடுவது அவசியம்,” எனக் கூறினார்.
மாணவர்கள் முகங்கொடுக்கும் சமூக துயரங்களை பற்றி குறிப்பிட்ட அவர், ”பல்கலைக்கழகங்களில் தாங்கமுடியாத நிலமை காணப்படுகிறது. நான் மத்திய மாகாணத்தில் கண்டியை விடவும் அதிகளவான துாரத்தில் இருந்து வருகின்றேன். ஆனால் எனது முதலாவது கல்வி ஆண்டின் போது கூட தங்குமிட வசதியை பெற்றுகொள்ள முடியாது இருந்தது.
“நான் தங்குமிடச் செலவுகளை செலுத்த வேண்டும். பல்கலைக்கழக உணவகத்திற்கு வெளியே உணவு வாங்க வேண்டுமானால் மூன்று வேளைக்கு 800 ரூபா செலவாகும். இவை அனைத்தையும் கணக்கிட்டால் மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான செலவு செய்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.
“நானும் எனது நண்பரும் இந்தச் செலவுகளுக்கு ஈடுகொடுக்க பகுதி நேர வேலை செய்கின்றோம். பல மாதங்களாக வழங்கப்படாமால் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தின் அற்ப தொகை கொடுப்பனவு கூட எமக்கு கிடைக்கவில்லை.”
பிரச்சாரகாரர்கள், மாணவர்களின் நிலைமைக்கும் சர்வதேச நாணய நிதிய சிக்கன வெட்டுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை சுட்டிக்காட்டிய போது, அவர் இவ்வாறு கூறினார்: ”நாம் உயர்ந்த நம்பிக்கைளிலேயே இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். பல்வேறுபட்ட பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விடயங்கள் பற்றி மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புகள் வளர்ச்சியடைகின்றன என நான் நினைக்கின்றேன்.”
ஜனவரி 20 அன்று, ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகாரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
முதலாம் ஆண்டு கணனி விஞ்ஞான மாணவன் தேஷ், “பல்கலைக்கழகங்கள் தனியார் நிறுவனம் கிடையாது என்பதால், கூட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது. ஒரு ஜனநாயக நாட்டில் தமது திட்டங்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. எவரும் இந்தக் கூட்டத்தை எதிர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை,” என்றார்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் கூட்டத்தின் மீதான தடை ஏனைய பல்கலைக் கழகங்களுக்கும் நீடிக்க முடியுமென எச்சரித்த அவர், ”அரசாங்கமும் பல்கலைக்கழக அதிகாரிகளும் வெற்றியடைந்தால், இந்த தடையை நிறுத்த முடியாமல் போகும். அதாவது உங்களுடைய போராட்டத்தை தொடர வேண்டும் என்பதே அதன் அர்த்தம் ஆகும். இத்ததையதொரு கூட்டத்தை நாம் ஏற்பாடு செய்வோமாயின் இங்கும் அது பாதிப்புக்குள்ளாகும்.”
”சாதகமானதும் எதிர்மறையானதுமான தாக்கங்களை கொண்டிருக்கின்றது” என கூறிய தேஷ், அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்த கலவையான புரிதலைக் கொண்டிரந்தார். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் மறுசீரமைத்தல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் மோசமான சமூகத் தாக்கங்களை ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகாரர்கள் தெளிவுபடுத்திய பின்னர், பல எதிர்மறையான விடயங்கள் இருக்கும் என அவர் உடன்பட்டதோடு, கல்விக்கான ஒதுக்கீடுகள் குறைக்கபட்டும் எனவும் அத்தகைய வெட்டுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் ”வளர்ச்சியடையும்” எனவும் ஏற்றுக்கொண்டார்.
ஜனவரி 22 அன்று மாணவர்களிடம் பலமான ஈடுபாட்டையும் ஆதரவையும் கவர்த ஒரு சக்திவாய்ந்த தலையீடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆதவாளர்களை பயமுறுத்துவதற்கும் பிரச்சாரத்தை குழப்புவதற்குமான ஒரு முயற்சியல் ஒன்றியத்தின் உறுப்பினர்களை அணிதிரட்டினார்.
விஞ்ஞான பீட மாணவனான அபிஷாந் கூறியதாவது: “யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட பல்கலைக்கழகங்களில் சர்வதேச நாணய நிதிய சிக்கன் நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடல்கள் நடப்பதில்லை. பல மாணவர்களுக்கு சர்வதேச நாணய நிதிய, உலக வங்கி கடன்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு கடன் பொதிகள் பற்றி தெரியும். ஆனால் அவர்ளுக்கு இந்த வெளிநாட்டு கடன்களின் விளைவுகள் பற்றித் தெரியாது.”
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னைய தலையீடுகளை சுட்டிக்காட்சிய அவர், “பட்டம் முடித்த பலர் வேலையில்லாமல் உள்ளனர், பல தொழிலாளர்கள் போதுமான ஊதியம் இல்லாமல் வேலை செய்வதுடன் பல இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளைத் தேடி புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறினார். இந்தப் பிர்ச்சினைகள் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளால் உருவானவை. சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை நிராகரிக்காமல் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடையாது.”
“அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரிக்கும் சோசலிச முன்னோக்கு உள்ளது என நான் விளங்கிக்கொள்ளவில்லை. சரியான முன்னோக்கை பெற முடியாமைக்கும் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையே காரணம் ஆகும்,” என அவர் குறிப்பிட்டார்.
கலைப்பீட மாணவியான நேருஜா, முன்னைய அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்ககைகள் மற்றும் பல்கலைக்கழங்களில் அவற்றின் தாக்கங்களைளை குறிப்பிட்டுக்காட்டினார்.
“இலங்கையின் சகல பொருளாதார பிரச்சினைகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதே காரணம் என நான் அறிவேன். இந்த விடயங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட வேண்டும். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள், கற்றல் உபகரணங்களின் விலை உயர்வுகள் மற்றும் வசதிகள் பற்றாக்குறை உட்பட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம்.
“எமது மாதாந்த செலவுகளை 20,000 மற்றும் 25,000 ரூபாவுக்குள் கட்டுப்படுத்த எமது நாளாந்த உணவு உட்பட பெரும்பாலான அத்தியவசிய தேவைகளை குறைக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் உதவித் தொகை எமது செலவுகளை சமாளிக்க மூன்று மடங்காக உயர்த்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
பல்கலைக்கழக விடுதியின் மோசமடைந்து வரும் நிலையை பற்றி நேருஜா குறிப்பிட்டார்: “சாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே நாங்கள் பல்கலைக்கழக விடுதியில் தங்கி அதன் வசதிகளைப் பயன்படுத்த முடியும். மழைக்காலத்திலும், கனமழை பெய்யும் போதும் நாங்கள் அங்கு தங்க முடியாது. ஏனெனில் வளாகத்தை வெள்ள நீர் சூழ்ந்துகொள்ளும். சமீபத்திய மாதங்களில் நாங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம்.
“அதே போல, வெள்ளப் பெருக்கால் ஏற்படும் நோய்களில் இருந்து எமக்குப் பாதுகாப்பும் கிடையாது, நுளம்பு வலை கூட கிடையாது. இதன் காரணமாக இந்த தங்குமிடத்தில் உள்ள பல மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படையும் அபாயத்தில் உள்ளனர்.”
பிரச்சாரகர்கள் ஜனவரி 24 அன்று ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையடினர்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தின் மீதான தடையை அறிந்திராத விஞ்ஞான பீட மாணவியான சானுஜி, இந்தத் தடையை உறுதியாக கண்டித்தார். “பல்கலைக்கழகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தவதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இதைத் தடுப்பது மாணவர்கள் மீதான உரிமைகளில் மாத்திரம் தொடுக்கப்படும் தாக்குதல் கிடையாது மாறாக சகலரின் உரிமைகள் மீதான தாக்குதல் ஆகும். பல்கலைக்கழக மாணவியாக நான் இதற்கு எதிராக உள்ளளேன்” என அவர் கூறினார்.
ஜனவரி 27 அன்று, களனி பல்கலைக்கழகத்தின் வாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் பிரச்சாரக்காரர்கள் பதாகைகளை காட்சிப்படுத்தி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடபட்டனர்.
“மாணவர்கள்” எனக் கூறிக்கொண்ட அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புடைய பல குண்டர்கள் கொழும்பு-கண்டி வீதியில் இருந்து பிரச்சாரகாரர்களை விரட்டுவதற்கு சரீர அச்சுறுத்தல் விடுத்தனர். அ.ப.மா.ஒ., போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இந்த பயமுறுத்தல் இருந்தபோதிலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகாரர்கள் நுாற்றுக்கணக்கான துண்டுப்பிரசுங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்தனர்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க. பிரச்சாரங்கள் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் மத்தியதர-வர்க்கத்தினரிடம் இருந்து பலமான ஆதவைப் பெறுகின்றன. இந்தத் தடையை நீக்கி, விரிவுரையை நடத்துவதற்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ.யை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு நாம் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். பேராதனைப் பல்கலைக்கழக துனைவேந்தரக்கு கடிதங்களை அனுப்புங்கள். அதன் பிரதியை ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கும் அனுப்பிவையுங்கள்.
பதில் துணைவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல்: vc@pdn.ac.lk
பிரதிகள்: ஐ.வை.எஸ்.எஸ்.இ.
மின்னஞ்சல்: iysseslb@gmail.com