மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றின் ஒரு தசாப்தகால முன்னணி அரசாங்கங்களுக்கு பின்னர், ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடைகையில், வலதுசாரி டச்சு பிரதம மந்திரி மார்க் ரூட் பள்ளிகளை மீண்டும் திறக்கிறார். ஆயினும்கூட, ரூட்டின் சுதந்திர மற்றும் ஜனநாயகக் கட்சியானது (VVD - Freedom and Democracy Party) இன்று முடிவடையும் டச்சு தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, "இடது" என்பது முதலாளித்துவ வர்க்கம் அழித்துவிட்ட மத்தியதர வர்க்க கட்சிகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறது. இதில் நெதர்லாந்தின் முன்னாள் மாவோயிச சோசலிஸ்ட் கட்சி (SP - ex-Maoist Socialist Party) முக்கிய இடம் பெற்றுள்ளது.
மற்றய ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடங்கங்களையும் கூட ரூட் நிராகரித்தார், இந்த ஆண்டு தான் ஊரடங்கு உத்தரவை விதித்தார், இது பெருந்தொற்று நோய் முழுவதும் அத்தியாவசியமற்ற தொழிலாளர்களை பணியில் இருக்க கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக, 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு, 16,000 க்கும் மேற்பட்டோர் 17.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் இறந்துள்ளனர். SP இன் பாராளுமன்றத் தலைவர் லிலியன் மரிஜ்னிசென் (Lilian Marijnissen) உடனான சமீபத்திய தேர்தல் நேர்காணலில், அங்கு அவர் தன்னுடைய கட்சியை சேர்த்துக் கொள்ள உடன்படக்கூடிய எந்த கூட்டணியிலும் நுழைவதை தேடுவதாக வலியுறுத்தினார். இந்த பொதுக் கொள்கைக்கு தனது ஆதரவைத் SP தெளிவாக்கியது.
"எங்கள் ஈடுபாடு ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கானது," என்று மரிஜ்னிசென் கூறினார். தேர்தலில் தீர்மானகரமாக வெற்றி பெறவுள்ள VVD கூட்டணி குறித்து அவர் பரிசீலிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: "வாக்காளர்கள் முடிவு செய்யட்டும்." VVD "என் பட்டியலின் கீழே" உள்ளது என்று அவர் மேலும் கூறினார். எவ்வாறெனினும், "நெதர்லாந்தை இன்னும் சிறப்பாக ஆக்க விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைப்பதற்கு" தான் தயாராக இருப்பதாக மரிஜ்னிசென் அறிவித்தார்.
பிப்ரவரி 15 அன்று YouTube இல் வெளியிடப்பட்ட மாணவர்களுடான ஒரு பேட்டியில், மாரிஜ்னிசென் மீண்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு தனது கட்சியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். "விரைவான பரிசோதனைகள் குறித்து யோசிங்கள், வர்க்க குழுக்கள் பாதியாக பிரிக்கப்பட்டது குறித்து சிந்தியுங்கள்," என்று அவர் கூறினார். SP ஆல் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணையானது அரசாங்கத்தை "கல்வியை எவ்வாறு பாதுகாப்பாக மீளத் திறப்பது என்பதை ஆராயவேண்டும்" என கோருகிறது.
ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவத்தால் விதிக்கப்பட்ட சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் (herd immunity) கொள்கையை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் SP ஆனது ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, அதற்கு பிரதியாக முஸ்லிம்களையும் புலம்பெயர்ந்தோரையும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுடன் இடைவிடாமல் குறிவைத்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது. "ஒரு சட்டத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் அதன் தேர்தல் வேலைத்திட்டம், வெற்று சொற்றொடர்களையும் நடவடிக்கைவாதத்தின் அழைப்புக்களையும் ஒருங்கிணைத்து, முஸ்லிம்களை குறித்து கட்சியின் அடையாள முத்திரை விமர்சனங்கள் மற்றும் பொலிஸ் படைகளை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளது.
"நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது வெறுப்பைக் கொண்டிருக்கும் அடையாளம் காணமுடியாத அதிதீவிர சலாஃபிஸ்டுகள் குழுக்களை" இந்த வேலைத்திட்டம் கண்டிக்கிறது, "வெறுப்பு போதகர்களை" தடை செய்ய அழைப்பு விடுக்கிறது மற்றும் "நம் நாட்டில் வேரூன்றியுள்ள குழந்தைகளின் வசிப்பிட உரிமையை சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்தவும்" அழைப்பு விடுக்கிறது. SP இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத குழந்தைகள் அல்லது பிற புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்கான அவர்களின் ஆதரவை தெளிவுபடுத்த, அவர்கள் உடனடியாக பின்னர் சேர்த்துக் கொள்கிறார்கள்: "குடியேறி தங்குவதற்கு அனுமதி உரிமை இல்லாதவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும்."
"பாதுகாப்பான நாடு" என்ற தலைப்பின் கீழ் SP எழுதுகிறது: "காவல்துறையில் பற்றாக்குறையின் காரணமாக, நகராட்சிகளில் மேலும் அசாதாரண புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு இன்னும் புலனாய்வு முகவர்கள் வேண்டும். உள்ளூர் சட்ட ஒழுங்கு அமூல்படுத்துபவர்கள் பொலிஸ் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பின், அவர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக்க வேண்டும், பொலிஸ் பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்த அமூலாக்கல் அதிகாரிகள் போலீஸ் அமைப்பில் அங்கம் பெறவேண்டும், அப்போதுதான் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால், சூழ்வட்டாரத்தில் உள்ளவர்களும், போலீசாரும் கூடுதலாக கண்களுடனும் காதுகளுடனும் விழிப்பாய் கூர்ந்து கவனிப்பதை பெறுகிறார்கள்' என்று SP எழுதுகிறது.
கடந்த தேர்தல்களில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது நேட்டோவை விட்டு நெதர்லாந்து வெளியேறவேண்டும் என்ற அதன் சம்பிரதாயமான அழைப்புக்களை SP கைவிட்டது, அதற்கு பதிலாக வெளிநாடுகளில் இன்னும் கூடுதலான "அமைதி காக்கும்" இராணுவ நடவடிக்கைகளுடன் சேர்த்து இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான "அமைதி காக்கும்" டச்சு இராணுவ கொள்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. வெகுஜன போர்-எதிர்ப்பு உணர்வுக்கு ஒரு சிடுமூஞ்சித்தனமான வகையில் தலையையாட்டுகிறது, "நிரந்தரப் போரின்" நகைப்பிற்கிடமான மூலோபாயத்தை SP விமர்சிக்கிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ இராணுவ தலையீடுகளுக்கு "உயிரிழப்பு இல்லாத" ஆதரவை மட்டுமே கொடுக்க உடன்பட்டதாக கூறி தன்னையே மன்னிக்க SP முயல்கிறது.
SP இன் உருவற்ற "ஐக்கியத்திற்கு" அழைப்பு விடுக்கிறது, பிளவுகள் மீதான அதன் விமர்சனங்களானது "நிறம், பாலினம் அல்லது வர்க்க அடிப்படையில்", மற்றும் "சோசலிசம்" என்ற அதன் அவ்வப்போதைய அழைப்புக்கள், அதன் பிற்போக்கு அரசியலை மூடிமறைக்க வாக்காளர்களின் கண்களில் தூசியை வீசுகின்றன. SP இன் உத்தியோகபூர்வ வலைத் தளம் பெருவணிகங்களுக்கு அவர்கள் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முற்படுகிறது, "நாங்கள் செல்வத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாங்கள் வறுமைக்கு எதிரானவர்கள்" என்று பிரகடனம் செய்கிறது.
1972ல் இந்த SP ஆனது சீனாவின் மாவோயிச ஆட்சியுடன் தொடர்புகளை பேணிவந்த நெதர்லாந்தின் கம்யூனிஸ்ட் ஐக்கிய இயக்கம் (KEN அல்லது Kommunistische Eenheidsbeweging Nederland) "மார்க்சிச-லெனினிச" மாவோயிச குழுக்களின் ஒரு கூட்டத்திலிருந்து தோன்றியது. ஐரோப்பிய மாவோயிச கட்சிகளிடையே பொதுவான தீவிர தேசியவாத நோக்குநிலையை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1983இல் அது "வெளிநாட்டுத் தொழிலாளர் மற்றும் மூலதனம்" என்ற தலைப்பில் ஒரு வெளிநாட்டவர் விரோதப் பிரசுரத்தை வெளியிட்டது, அது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டச்சு மொழி மற்றும் மதிப்புகளை ஏற்க வேண்டும் அல்லது இல்லையென்றால் வெளியேற வேண்டும் என்று கோரியது.
1986 இல், SP ஆனது தனது "மாவோயிச கிளர்ச்சியூட்டலை" கைவிட்டது, இது செல்வி மரிஜ்னிசெனின் தந்தையான Jan Marijnissen இன் தலைமையில், கட்சி வேலைத்திட்டத்திலிருந்து லெனின் மற்றும் மார்க்ஸ் பற்றிய குறிப்புகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு "பாராளுமன்றத்தில் திருப்புமுனை" தேவை என்று அழைப்பு விடுத்தது. SP தலைமையானது இப்போது முந்தைய சகாப்தங்களில் மார்க்சிசம் பற்றிய அதன் வெற்றுக் குறிப்புக்கள் குறித்து வெட்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக தொழிற்சங்க கூட்டமைப்புக்குள்ளும் மற்றும் டச்சு அரசு எந்திரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் "நடைமுறை" யதார்த்த அரசியல் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது.
தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பாரிய ஊதிய வெட்டுக்களை "பேரம் பேசி" தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நலன்களை வெட்டி, மற்றும் வேலைநிறுத்தங்களை திட்டமிட்டு கழுத்தை நெரித்தநிலையில், இக்கட்சியின் சலுகை பெற்ற மத்தியதர வர்க்க செயற்பாட்டாளர்கள் இலாபங்களை ஈட்டினர். இது டச்சு சமூகத்தின் மேல் நோக்கி செல்வவளத்தை பாரியளவில் மாற்ற அனுமதித்தது.
இந்த இடைவிடா செல்வம் கீழிருந்து மேல்மட்டத்திற்கு மறுபங்கீடு செய்யப்பட்டதன் மூலம் தொழிற் கட்சி (PvdA) மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. மாறாக, Geert Wilders இன் சுதந்திரத்திற்கான கட்சி (PVV - Party for Freedom) போன்ற அதிவலது ஜனரஞ்சகவாத அமைப்புக்கள், இந்த ஊழல் நிறைந்த கட்டமைப்பின் மீது ஆழமான சமூக சீற்றத்தை முஸ்லீம்-விரோத மற்றும் வெளிநாட்டவர் வெறுப்புகளுக்கு முறையீடுகள் செய்வதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டன. SP ஆனது தன்னுடைய பங்கிற்கு, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கோபத்தை அரசியல் ஸ்தாபகத்திற்கு முட்டுக் கொடுக்கச் செய்து, தீவிர வலதுகளை வளர அனுமதித்தது.
இந்த பெருந்தொற்று நோயின் போது, அது தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிடக்கூடும் என்று அஞ்சுகின்ற எந்த ஒரு செயலையும், அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், SP ஆனது அதன் இளைஞர் இயக்கமான ROOD (அதாவது "சிவப்பு" என்று பொருள்) உடன் வெளிப்படையான மோதலுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் தளம் (Communist Platform) என்ற அமைப்பின் இரட்டை உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட பல முக்கிய ROOD உறுப்பினர்களை SP தலைமை வெளியேற்றியது. SP மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களின் சுற்றுவட்டத்திலுள்ள ஒரு ஸ்ராலினிச குழுவே கம்யூனிஸ்ட் தளம் ஆகும். "ஆய்வு அறை-கம்யூனிஸ்டுகள்" என்று கூறும் அதாவது "மிகவும் பயங்கரமான விஷயங்கள்" என்று SP அவர்களை முத்திரை குத்தியதோடு, மேலும் சேர்த்துக் கொண்டது: "அவர்கள் ஒரு உள்நாட்டுப் போரைத் தொடங்குவதற்கு மக்களை ஆயுதம் தரிக்க விரும்புகிறார்கள்."
கடந்த ஆண்டு இறுதியில், நெதர்லாந்தில் மற்றும் ஐரோப்பா எங்கிலும் COVID-19 இறப்புக்கள் பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில், SP அதன் சொந்த இளைஞர் இயக்கத்துடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. மேலும், இந்த ஸ்ராலினிச தளம் என்கிற குழுவின் தீவிரமயமாதல் குறித்த அதனுடைய கூற்றுக்கள் அபத்தமானவை. இந்த ஸ்ராலினிச குழுவானது போலி "புரட்சிகர" வண்ணங்களில் SP இன் பிற்போக்குத்தனமான பாராளுமன்ற நடவடிக்கைகளை வரைய வேலை செய்கிறது, மற்றும் அதன் இடது புறத்தில் SP க்கு ஒரு மாற்றீட்டைத் தேடும் இளைஞர்களை நெறிபிறழச் செய்வதோடு திசைதடுமாறவும் செய்கிறது.
"அரசு மற்றும் மூலதனத்தால் ஒடுக்குவதில் SP உடந்தையாக உள்ளது" என்பதை ஒப்புக் கொண்டு கம்யூனிஸ்ட் தளம் எழுதுகிறது: "இருப்பினும் நாங்கள் SP க்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சியாக அபிவிருத்தி செய்யும் பெரும் சாத்தியங்களை தொழிலாள வர்க்கத்திற்குள் SP கொண்டுள்ளது. மேற்கூறிய பிரச்சினைகள் இருந்தபோதிலும்கூட, பாராளுமன்றத்திலுள்ள மற்றய "இடது" கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நவ- தாராளவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மிகவும் ஒத்திசைவான கட்சியாக SP தன்னை நிரூபித்துள்ளது."
ஒரு பெருகிய அரசியல் நெருக்கடியானது ரூட் அரசாங்கத்தையும் கிட்டத்தட்ட முழு அரசியல் ஸ்தாபகத்தையும் சூழ்ந்து கொண்டநிலையில், ROOD உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டவுடன் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குழந்தை நல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புலம்பெயர்ந்தோர் குடும்பங்கள் மீது பொய் மற்றும் பழிசுமத்தும் வகையில் டச்சு அதிகாரிகள் குற்றம் சாட்டினர் என்று விசாரணைகள் உறுதி செய்தது, அவர்கள் பெற்ற நலன்களை திருப்பிக் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாழாக்கியிருந்தனர். குடும்பங்களின் புகார்களுக்கு கவனம் அளித்தாலும், SP ஆனது முன்னரே முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை கொடூரமாக இலக்கு வைப்பதற்கு சாதகமான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.
ஆயினும்கூட, SP ஆனது தன்னுடைய ஒவ்வொரு திருப்பத்தையும், நியாயப்படுத்தவும் அது வேறு எதுவும் செய்ய முடியாது என்ற கூற்றுக்களுடன் ஒரு பரந்த மத்தியதர-வர்க்க, போலி-இடது குழுக்களின் பின்வாங்காத ஆதரவைக் கொண்டுள்ளது. தொழிலாளர் சர்வதேச குழுவின் (CWI) டச்சு பிரிவான சோசலிஸ்ட் மாற்றீடு (Socialistish Alternatief- SA) ஆனது SP இன் அரசியல் குறிக்கோளை குறைத்து மூடிமறைக்கிறது இவ்வாறு அது எழுதுகிறது: "தேர்தலில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெகுஜன தொழிலாளர் கட்சி எதுவும் இல்லாதநிலையில், SP ஆனது பல தொழிலாளர்களுக்கு சிறந்த வாக்களிப்பு விருப்பமாக பார்க்கப்படலாம்."
SP மற்றும் அதன் அரசியல் துணைக்கோள்களின் அரசியல் முற்றிலும் அழுகியது. ஜேர்மன் இடது கட்சி, ஸ்பானிய பொடேமோஸ் மற்றும் கிரேக்க சிரிசா போன்று டச்சு SP ஆனது ஆளும் வர்க்கம் ரூட்டை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் சூழ்ச்சிகளை COVID-19 இனால் இன்னும் இறப்புக்களை கொண்டு வர ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் அதேவேளையில், ஒரு சில வெற்று சொற்றொடர்களை வாய்வழி மொழிகிறது.
முன்னாள் மாவோயிஸ்ட் சோசலிஸ்ட் கட்சி (SP) என்றால் என்ன என்பது பற்றி அம்பலப்படுத்தப்பட வேண்டும்: ஒரு சுயாதீனமான, சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக போராடுவதிலிருந்து அதற்கு பதிலாக அது ஸ்தாபக கட்சிகளுடன் கட்டிவைப்பதோடு, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிராக போராடுவதை தடுக்கும் நோக்கமும் கொண்ட ஒரு மோசமான அரசியல் பொறியைக் கொண்டதாகும்.