செலென்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்திற்குப் பின்னர், உக்ரேன் ரஷ்யாவிற்குள் மற்றொரு தாக்குதலை நடத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி வாஷிங்டனில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து, உக்ரேனின் எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சரடோவ் அருகே உள்ள ஏங்கெல்ஸ் விமானத் தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதலில் மூன்று ரஷ்ய சிப்பாய்களைக் உக்ரேன் கொன்றது.

கடந்த வாரம், செலென்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் நேரில் உரையாற்றி, உக்ரேனின் போர் முயற்சிகளுக்கு நிதியளித்து வழிநடத்தும் அமெரிக்கா, 'முழுமையான வெற்றியை' அடையும் வரை தனது இராணுவப் படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

உக்ரேனிய சிப்பாய் ஒருவர், 25 டிசம்பர் 2022, ஞாயிறு, 25 டிசம்பர், உக்ரேனில் உள்ள பாக்முட், டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நிலத்தடி கட்டளை மையத்திலிருந்து ட்ரோன் இயக்கத்தைப் பார்வையிடுகிறார் [AP Photo/Lib's]

செலென்ஸ்கி பேசிய மறுநாளே வெள்ளியன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் (NDAA) கையெழுத்திட்டார். இது அமெரிக்க இராணுவ செலவினத்தின் அளவை முந்தைய ஆண்டை விட 88 பில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளது மற்றும் இதுவரை உக்ரேன் போருக்கு ஒதுக்கப்பட்ட தொகையை இரட்டிப்பாக்குகிறது.

அவர் வரவ-செலவுத் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு முந்தைய நாள், பைடென் உக்ரேனுக்கு ஒரு பேட்ரியாட் ஏவுகணை பேட்டரியை அனுப்புவதாக அறிவித்தார். இது இதுவரைக்கும் உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பியவற்றில் அதிநவீன ஏவுகணை அமைப்பாகும்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில், ரஷ்யாவுடன் நடந்து கொண்டிருக்கும் போருக்கு நிதியளிப்பதற்காக உண்மையில் பணத்தை ஒதுக்கும் omnibus வரவ-செலவுத் திட்ட சட்டத்தில் பைடென் கையெழுத்திடுவார்.

ரஷ்யாவுக்குள்ளான உக்ரேனின் இந்த சமீபத்திய தாக்குதல், 2023 இலும் போர் தீவிரமடையும் என்ற ஒரு தெளிவான சமிக்ஞையை வாஷிங்டன் சார்பாக அனுப்பியுள்ளது.

பைடென் நிர்வாகத்தின் சிந்தனை பற்றிய ஒரு பார்வை நியூ யோர்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை மூலம் வழங்கப்பட்டது. அது அதிகரித்தளவில் மோதல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான அமெரிக்க நியாயத்தை தெரிவிக்கிறது.

'உக்ரேன், ரஷ்ய எல்லையிலிருந்து ஆழமான இலக்குகளை இன்னும் தைரியமாக தாக்குகிறது. ஏனெனில் மாஸ்கோவின் இராணுவம் அதன் மரபார்ந்த போரிடும் திறன்களின் அதிகூடிய சாத்தியமான அளவுடன் போராடுகிறது என்று கியேவ் மதிப்பிட்டுள்ளது' என்று டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

அது தொடர்கிறது, “அணுவாயுத மோதலாக தீவிரமடையும் சாத்தியம் இல்லாததால், ரஷ்யா உக்ரேனுக்கு இதுவரை செய்ததைவிட அதிகம் செய்ய முடியாததாலும் ஸ்கோவின் ஏவுகணை திறன்களை உள்நாட்டில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எந்த ஒரு தீவிரமடையும் கவலையையும் குறைவாக இருக்கும் என்ற உணர்வு கியேவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவியுள்ளது”.

செய்தித்தாள் ஒரு உக்ரேனிய கேர்னலை மேற்கோள் காட்டி, 'எந்த எதிர்வினையும் இல்லை... ஏன்? ஏனெனில் ரஷ்யர்களுக்கு அவ்வாறு செய்வதற்கான திறன் இல்லை.” என்று முடித்தார்.

'உக்ரேன் தனது சொந்த ஆயுதங்களுடன் மீண்டும் தாக்குதல் செய்வதை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்” என விமர்சன ரீதியாக, டைம்ஸ் கவனித்தது.

இதுவரை, புட்டின் அரசாங்கம், உக்ரேனிய மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளுடன், அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களுக்கும் கியேவில் உள்ள அதன் பினாமிக்கும் எதிராக உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பதிலளித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் தற்போது மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று செலென்ஸ்கி இந்த வாரம் ஒரு உரையில் கூறினார்.

ஆனால் ரஷ்யா அதன் சொந்த விரிவாக்கத்துடன் பதிலளிக்காது என்று டைம்ஸ் வலியுறுத்திய போதிலும், கடந்த வாரத்தின் நிகழ்வுகள் ரஷ்ய அதிகாரிகளின் தொனியில் ஒரு பெரிய மாற்றத்தைத் தூண்டியுள்ளன.

உக்ரேனியப் படையினர், திங்கள், டிசம்பர் 26, 2022 அன்று உக்ரேனில் உள்ள அவ்திவ்கா, டொனெட்ஸ்க் பகுதிக்கு அருகே ரஷ்ய நிலைகளை நோக்கி பிரெஞ்சுத் தயாரிப்பான CAESAR சுய-இயக்க ஹோவிட்ஸரைச் சுடுகின்றனர் [AP Photo/Lib's]

டிசம்பர் 23 அன்று, செலென்ஸ்கி வாஷிங்டனுக்கு விஜயம் செய்த அதே நாளில், ரஷ்ய இராணுவ அதிகாரிகள் ஒரு பெரிய இராணுவ மறுசீரமைப்பை அறிவித்தனர் மற்றும் ரஷ்யாவின் இராணுவத்தின் அளவு 30 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.

டிசம்பர் 22 அன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த மோதலை —இது வரை ஒரு 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிப்பிட்தை— இது ஒரு போர் என்று குறிப்பிட்டார்.

'எங்கள் இலக்கு இராணுவ மோதலின் இந்த சுழலும் சக்கரத்தை சுழற்றுவது அல்ல. மாறாக, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது' என்று புட்டின் வியாழன் அன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

டிசம்பர் 26 அன்று, ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் கியேவில் ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியத்தை எழுப்பினார், “[உக்ரேனிய] ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இராணுவமயமற்றதாக்குதல் மற்றும் நாஜிகளற்றதாக்குதல், நமது புதிய நிலங்கள் உட்பட ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை நீக்குதல் ஆகிய எங்கள் முன்மொழிவுகள் எதிரிகளுக்கு நன்கு தெரிந்தவை... விஷயம் எளிது: உங்கள் சொந்த நலனுக்காக அவற்றை நிறைவேற்றுங்கள். இல்லையெனில், ரஷ்ய இராணுவம்தான் பிரச்சினையை முடிவு செய்யும்.

பின்னர், டிசம்பர் 25 அன்று, ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவரான டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக ரஷ்யா முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்று முதன்முறையாக பரிந்துரைத்தார்.

'இன்று நமது எதிரிகளை தடுக்கும் ஒரே விஷயம், அணுசக்தி தடுப்பு துறையில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசு கொள்கையின் அடிப்படைகளால் ரஷ்யா வழிநடத்தப்படுகின்றது என்ற புரிதல் மட்டுமே. உண்மையான அச்சுறுத்தல் இருந்தால், அது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்' என்று ரோசிஸ்காயா கெஜெட்டாவிற்கான 4,500 வார்த்தை கட்டுரையில் மெட்வெடேவ் எழுதினார்.

'சிக்கல் என்னவென்றால், இந்த விஷயத்தில், ஒரு பழிவாங்கும் தாக்குதலா அல்லது தடுப்பு நடவடிக்கையா என்பதை யாரும் பின்னர் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது, நிச்சயமாக, மேற்கத்திய பயனாளிகளை பயமுறுத்துகிறது. அவர்கள் நீண்ட காலமாக உக்ரேனிய அரசியல் சண்டையை முழுமையாகக் கீழ்ப்படிதலுக்கு ஈடாக அழிக்க முடியாத தன்மை மற்றும் தண்டனையின்மை என்ற மாயையுடன் ஊக்கப்படுத்தினர். ஆகையால், ஒருபுறம், ரஷ்யாவை அதிகபட்சமாக அவமானப்படுத்தவும், காயப்படுத்தவும், துண்டிக்கவும், அழிக்கவும் எரியும் விருப்பத்திற்கும் மறுபுறம் ஒரு அணுவாயுத பேரழிவைத் தவிர்ப்பதற்கான விருப்பத்திற்கும் இடையில் மேற்கத்திய உலகம் தடுமாறுகின்றது.”

அவர் கேட்டார், 'கியேவின் கைகளில் ஒரு அணுவாயுத போர் உட்பட எங்களுக்கு எதிராக ஒரு முழு அளவிலான போரை கட்டவிழ்த்துவிட மேற்கு நாடுகள் தயாராக உள்ளதா?”

ரஷ்யாவிற்கு எதிராக முன்கூட்டியே அணுவாயுத தாக்குதல் செய்வதற்கான வாய்ப்பை செலென்ஸ்கி முன்பு எழுப்பியிருந்த போதிலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை ரஷ்ய அதிகாரிகள் இதுபோன்ற மொழியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.

அக்டோபர் 7 அன்று, 'ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அகற்ற நேட்டோ என்ன செய்ய வேண்டும்?' என செலென்ஸ்கி கூறினார். 'எங்களுக்கு தடுப்புத் தாக்குதல்கள் தேவை, எனவே அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும், மாறாக வேறு வழியில் அல்ல.'

விமர்சன ரீதியாக, போரின் விரிவாக்கம் மனித நாகரிகம் 'இறுதிப்பேரழிவு வாய்ப்பை' எதிர்கொள்கிறது என பைடென் எச்சரித்த அதே நாளில் செலென்ஸ்கி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த வாரம் செலென்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, போரில் உக்ரேனியர்களின் குறிக்கோள் கிரிமியாவை மீண்டும் கைப்பற்றுவதாகும் என்ற தனது அறிக்கைகளை இரட்டிப்பாக்கினார். 2021 இல் உக்ரேன், 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட பிரதேசத்தை இராணுவ ரீதியாக மீட்பதாக உறுதியளித்த போதிலும், உக்ரேனிய அதிகாரிகள் மோதலில் தங்கள் பங்கை தற்காப்புப் பாத்திரமாக சித்தரிப்பதற்காக, போரின் முந்தையகாலப் பகுதியில் இந்தக் கோரிக்கையை பகிரங்கமாக முன்வைக்கவில்லை.

காங்கிரஸில் அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக, செலென்ஸ்கி ஒரு தொலைக்காட்சி உரையில், 'இது எங்கள் லுஹான்ஸ்க் பகுதி, இது உக்ரேனின் தெற்கு பகுதி, இது எங்கள் கிரிமியா' என்று கூறினார். மேலும் 'உக்ரேன் தனக்கு சொந்தமாக எதையும் எதிரிக்கு விட்டுவிடாது' என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் எகனாமிஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வெற்றியைப் பற்றிய அவரது வளர்ச்சியடைந்து வரும் வரையறை குறித்து செலென்ஸ்கியிடம் கேட்கப்பட்டது.

பத்திரிகை மேலும், “போரின் தொடக்கத்தில் நாங்கள் உங்களிடம் கேட்டோம்: 'வெற்றி என்றால் என்ன?' உங்கள் பதிலானது: 'முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றுவது. ஏனென்றால் நிலம் நல்லது, ஆனால் அது ஒரு பிரதேசம் மட்டுமே. மக்கள் இல்லாமல் அது ஒன்றுமில்லை.' எப்படி உங்கள் வெற்றி உணர்வு மாறிவிட்டது?” என கேட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, கிரிமியாவை மீட்பதே உக்ரேனின் நோக்கம் என்று செலென்ஸ்கி தனது அறிவிப்பை இரட்டிப்பாக்கினார். உக்ரேன் '1991 எல்லைகளுக்கு' முன்னேறுவதற்கு என்ன 'கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்' என்று கேட்டதற்கு, செலென்ஸ்கி, இழப்பு எதுவாக இருந்தாலும் தீபகற்பத்தை முழுமையாக மீட்பதே தனது நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்.

மோதலில் அமெரிக்கா தனது ஈடுபாட்டை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ள நிலையில், 2022ம் ஆண்டு போரின் போது இரு தரப்பினரும் சந்தித்த 200,000 இராணுவ மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள், வெறும் ஆரம்ப எண்ணிக்கையாக இருக்கக்கூடும் என்ற கொடூரமான சாத்தியத்தை உலகம் எதிர்கொள்கிறது.