பிரிட்டனின் போலி-இடது குழுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை பாதுகாப்பதற்காக போலி "சாமானியக் குழுக்களுக்கான" முன்முயற்சிகளை மேற்கொள்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த கோடையில் பிரிட்டனில் முதன்முதலில் வெடித்த வேலைநிறுத்த அலையானது, இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வருகிறது, இது இரயில் வலையமைப்பு, ரோயல் மெயில், தேசிய சுகாதார சேவை (NHS), கல்வித் துறைகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சிவில் சேவையைப் பாதித்துக்கொண்டிருக்கிறது.

கோவிட் பெருந்தொற்று நோய்களின் போது பெருவணிகங்களுக்கு பாரிய அரச மானியங்கள், பிரெக்ஸிட்டின் தாக்கம் மற்றும் உக்ரேனில் நேட்டோவின் போருடன் தொடர்புடைய பாரிய செலவுகளுடன் ஒன்றிணைந்து எரியூட்டப்பட்ட சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் தூண்டப்பட்ட இந்த வேலைநிறுத்த அலையானது, 1968 மே-ஜூனுக்குப் பிறகு பிரான்சில் நடந்த மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட இயக்கம் உட்பட ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அக்டோபர் 13, 2022 அன்று கிரிஃப் விநியோக அலுவலகத்தில் அஞ்சல் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்

ஆரம்பத்தில், 'இடது' தொழிற்சங்கத் தலைவர்களின் ஒரு குழுவானது ஒரு எதிர்தாக்குதல் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கூறியது — அதற்கு தலைமை தாங்கியவர்களாக ஐக்கிய (Unite) தொழிற்சங்கத்தின் ஷரோன் கிரஹாம், இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (RMT) மிக் லிஞ்ச், தகவல்தொடர்பு தொழிலாளர் சங்கத்தின் (CWU) டேவ் வார்ட் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தொழிற்சங்கத்தின் (UCU) ஜோ கிராடி ஆகியோர்கள் ஆவார்கள். லிஞ்ச் மற்றும் வார்ட் ஆகியோர் முன்னணி வகித்த ஒரு புதிய பிரச்சாரக் குழுவான Enough is Enough என்ற குழுவில் பிரிட்டன் முழுவதும் பேரணிகளில் அவர்கள் பேசியதுடன், சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி உள்ளிட்ட போலி-இடது குழுக்களிடமிருந்து உற்சாகமான ஆதரவைப் பெற்றதுடன், லிஞ்ச் மற்றும் அவரது சக அதிகாரிகளை போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதத்தின் மறுபிறப்பை வழிநடத்துவதாக இக் கட்சிகள் அவர்களைச் சித்தரித்தன.

ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், விரிசல்கள் ஏற்படத் துவங்கின. லிஞ்ச், வார்ட் மற்றும் பிறர் மில்லியன் கணக்கானவர்களின் வேலைநிறுத்தங்களைத் தடுத்து நிறுத்தினர், ஒன்றுபட்ட நடவடிக்கையைத் தடுத்தனர், அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் பின்கதவுப் பேச்சுவார்த்தைகளில் நுழையும் போது தொழிலாளர்களை பயனற்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு மட்டுப்படுத்தினர். 40,000 தொலைத் தொடர்பு நிறுவன (BT) தொழிலாளர்கள், (அதில் உள்ளடங்கியிருப்பது CWU, Network Rail (RMT) 20,000 உறுப்பினர்கள்) மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) தொழிலாளர்களுக்கு எதிராக பணவீக்கத்திற்குக் கீழான உடன்படிக்கைகளின் தொழிற்சங்க-பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, ஊதியங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தியாகம் செய்தனர்.

இது ஒரு கடும் சினம்கொண்ட விடையறுப்பைத் தூண்டியது, ரோயல் செவிலியர் கல்லூரி (RCN) பொதுச் செயலாளர் பாட் கலென் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று செவிலியர்கள் கோரினர், மற்றும் UCU இலுள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் கிராடி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். வார்ட்டும் அவரது உதவிச் தேசிய செயலாளர் ஆண்டி ஃப்யூரியும் இப்போது மூன்று முறை அஞ்சல் ஊழியர்கள் மீது விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை திணிக்க முயற்சித்ததால் வெறுப்பூட்டும் நபர்களாக மாறியுள்ளனர்.

அதிகாரத்துவத்தின் பெயரளவிலான 'இடது' பகுதிகள் உட்பட அனைவர் மீதும் ஒரு கூட்டு நடுக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. அங்கு போலி-இடது குழுக்கள் தேசிய, பிராந்திய மற்றும் கிளை மட்டத்தில் தொழிற்சங்கத் தலைமையின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவை உருவாக்குகின்றன, மேலும் தொழிலாளர்களை 'அணிதிரட்டவும்', 'நடவடிக்கையை தீவிரப்படுத்தவும்' மற்றும் பல்வேறு 'பரந்த இடது' தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் பல ஆண்டுகளாக அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பாக ரோயல் மெயிலில் அஞ்சல் ஊழியர்களின் சாமானியக் குழு (PWRFC) பெற்ற விடையிறுப்பானது, முக்கியத்துவத்திற்குரியது. சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் உதவியுடன் ஏப்ரல் 2 அன்று ஸ்தாபிக்கப்பட்ட அஞ்சல் ஊழியர்களின் சாமானியக் குழு (PWRFC), அதிகாரத்துவத்தின் ஒரு வருடகால சர்ச்சையின் பிடியை உடைக்கவும், சாமானிய தொழிலாளர்களை பொறுப்பில் அமர்த்தவும் முயற்சிக்கும் அனைவரின் ஆதரவையும் வென்றுள்ளது. PWRFC இன் கட்டுரைகள் கால் மில்லியனுக்கும் அதிகமான முறைகள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.

இது, ஜூன் 10 அன்று Counterfire என்ற குழுவால், ''நாம் எப்படிப் போராடுகிறோம், எப்படி வெற்றி பெறுகிறோம்'' என்ற தலைப்புடன் ஒரு 'ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின்' மூலம், ஒரு புதிய ''சாமானிய இயக்கத்தைக்'' கட்டியெழுப்ப போலி-இடது வட்டாரங்களில் பல்வேறு அழைப்புகளைத் தூண்டியுள்ளது.

இந்த மாநாடு உண்மையான சாமானிய தொழிலாளர் குழுக்களின் முன்முயற்சிக்கு நேர்மாறானது. சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) போன்ற குழுக்களின் இதேபோன்ற முன்முயற்சிகளின் நோக்கமானது, தொழிற்சங்க உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியைத் கட்டுப்படுத்துவதும், அது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். 

'சாமானிய உறுப்பினர்கள்' 'தொழிற்சங்கத் தலைமைகளை பொறுப்பேற்க வேண்டும் மற்றும் ஒரு பயனுள்ள மூலோபாயத்திற்காக போராட வேண்டும்' என்ற வேண்டுகோளுடன் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்ட ஒரு மாதிரித் தீர்மானமானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எந்த விதத்திலும் விமர்சிக்கவில்லை, வேலைநிறுத்த இயக்கத்தை 'விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும்' மற்றும் 'தொழிற்சங்க இயக்கம் முழுவதிலுமுள்ள சாமானிய தொழிலாளர்களிடையே அதிக விவாதம் மற்றும் ஒழுங்கமைப்பிற்கு' மட்டுமே அழைப்பு விடுத்தது. மாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 4 அன்று வெளியான ஒரு கட்டுரையில் பெரும்பாலும் 'மூத்த PCS பொதுச் செயலாளர் மார்க் செர்வோட்கா' இனால் வழங்கப்பட்ட கருத்துக்களாக சிவில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்தும், ஷரோன் கிரஹாமின் ஹீத்ரோ பாதுகாப்பு காவலர்களின் வேலைநிறுத்தம் குறித்தும் மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் கருத்துக்களும் தான் அதில் இருந்தன.

இது முக்கியமாக தொழிற்சங்கங்களின் தலைமைக்கு 'அழுத்தத்தை' பிரயோகிக்கும் நன்கு தேய்ந்த வாதத்தின் புதுப்பிக்கப்பட்ட மறு பதிப்பையே பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் படிப்பினை என்னவென்றால், அவர்கள் சாமானிய தொழிலாளர்களின் கருத்துக்கு இணங்கவில்லை, அல்லது இன்னும் சரியாக கூறினால் விரோதமாக இருக்கிறார்கள்.

''நாம் எப்படிப் போராடுகிறோம், எப்படி வெற்றி பெறுகிறோம்' என்ற மாநாடு

இந்த திவாலான முன்னோக்கானது சுமார் 150-200 நபர்களை ஈர்த்தது, இதில் போலி-இடது குழுக்களால் நடத்தப்படும் அல்லது செல்வாக்கு செலுத்தப்பட்ட ஒரு சில தொழிற்சங்க கிளைகள் மற்றும் வர்த்தக கவுன்சில்களின் பிரதிநிதிகள் அல்லது கோர்பினைட் தொழிற்கட்சி 'இடதுகள்' – அதாவது ஒரு சாமானிய இயக்கம் எதிர்க்க வேண்டிய அதே அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவாக இவைகள் இருக்கின்றன — மற்றும் வேலைநிறுத்த வரைபடம் (Strike Map), டுனல் விஷன் (Tunnel Vision), ஸ்ராலினிச ஆதிக்கம் செலுத்தும் மக்கள் மன்றம் (People’s Assembly) உள்ளிட்ட, NHS தொழிலாளர்கள் கோருவது வேண்டாம் (NHS Workers Say No), NHS ஊழியர் குரல்கள் (NHS Staff Voices), மற்றும் Keep Left (Aslef) போன்ற நடவடிக்கைக் குழுக்கள் பங்குபற்றியிருந்தன.

தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பொறுத்தவரை இந்த நிகழ்வின் அச்சுறுத்தல் இல்லாத தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு பேச்சாளராக ஜெரேமி கோர்பின்  நியமிக்கப்பட்டிருந்தார். பிளேயரிய வலதுசாரிக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் எதிர்க்காத, தொழிற்கட்சியின் தலைவராக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை செலவிட்டும் வெளியேற்றப்பட்ட ஜெரேமி கோர்பின், வேலைநிறுத்தங்களை நிராகரித்து, சிக்கன நடவடிக்கைகளை ஆதரித்ததோடு, ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிடக் கோரும் அதேவேளையில் தொழிற்கட்சியை 'நேட்டோவின் கட்சி' என்று பெயரிட்ட சேர் கெய்ர் ஸ்டார்மரிடம் பொறுப்பை பணிவுடன் ஒப்படைத்தார். 

தொழிற்சங்க அதிகாரத்துவம் குறித்த உண்மையான விமர்சனம், அங்கு நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற துன்பந் தணிக்கும் உரைகளில் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லை. இதில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பின்வருமாறு : பொது மற்றும் வணிக சேவைகள் சங்கத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் கவானக், அலெக்ஸ் கென்னி, தேசிய கல்வி சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், ஒரு பப்லோவாதியும், ஒரு காலத்தில் RMT இன் உதவிப் பொதுச் செயலாளராக இருந்தவருமான பாட் சிகோர்ஸ்கி, மற்றும் தெற்கு பிராந்தியத்திற்கான RMT நிவாரண அமைப்பாளர் க்ளென் ஹார்ட் ஆகியோர் அங்கு உரையாற்றினார்கள்.

'மிக நீண்ட கால வரலாறுகளை' கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலமும், அவற்றின் 'நிலைமையை சரிபார்க்கும் பொருட்டு அதிகரித்த நடவடிக்கைகளை' மேற்கொள்வதன் மூலமும் மட்டுமே தொழிற்சங்கங்கள் 'மறுசீரமைக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்துவதே சிகோர்ஸ்கியின் (ஒரு பப்லோவாதி) உரையின் பங்களிப்பாக இருந்தது. தான் சாமானிய மட்டத்தைச் சேர்ந்தவன் என்றும், ஒரு தேசிய அதிகாரி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படமாட்டேன் என்றும், 'நான் உங்களில் ஒருவன்' என்றும் பார்வையாளர்களுக்கு அவர் உறுதியளித்தபோது, ஹார்ட் நெகிழ்ந்து போனார்.  

Counterfireன் தலைவர் லிண்ட்சே ஜெர்மன், வேலைநிறுத்தங்கள் நாம் செய்ய விரும்பும் வழியில் அவை உண்மையில் முன்னேறவில்லை என்று கூறினார். ஆனால், ''தொழிற்சங்கத் தலைவர்களாலும் தொழிற்கட்சி தலைவர்களாலும்'' நடவடிக்கை திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் வெவ்வேறு வேலைநிறுத்தக்காரர்களுக்கு இடையே, கூடுதல் நடவடிக்கை மற்றும் கூடுதலான ஒத்துழைப்புக்கான அழைப்பைத் தவிர வேறு எதையும் அவர் வழங்கவில்லை.

Counterfire குழு மாநாட்டில் பேசிய லிண்ட்சே ஜெர்மன்

Counterfire குழுவின் ஜோன் ரீஸ் ஒரு அறிக்கையை முன்வைத்தார், இது திருத்தத்திற்கு உட்பட்டது அல்ல என்று கென்னி ஏற்கனவே கூறியிருந்தார், அதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு விசுவாசம் என்ற உறுதிமொழியைக் கொண்டிருந்தது, ‘’எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தங்களுக்குத் தலைமை தாங்கும் போது அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம், தொடருவோம்’’ என்று உறுதியளித்தார். இல்லையெனில், 'சாமானிய தொழிற்சங்கவாதிகள்', இன்னும் உண்மையாக இரண்டாம் நிலை அதிகாரத்துவத்தினர் மற்றும் போலி-இடது அரசியல் செயற்பாட்டாளர்கள், 'ஒப்பந்தங்களை எதிர்ப்பார்கள்' மற்றும் 'நமது ஊதியங்கள், நிலைமைகள் மற்றும் சேவைகளைப் பாதுகாப்பதில் பின்தங்கியிருக்கும் ஒப்பந்தங்களை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்பார்கள்' என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைக்கு ஆதரவாக Counterfire மாநாட்டு பிரதிநிதிகள் வாக்களிக்கின்றனர்

'இப்போது தொழிற்சங்கங்கள் வெளிப்படையாக அரசாங்கத்துடன் அல்லது முதலாளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மிகவும் கடினமான காலகட்டத்தில்' இருந்த ஒரு 'அற்புதமான தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள்' என்று கோர்பின் பேச்சின் முடிவுரையில் கூறியது, அவரையே இத்தகைய தெளிவற்ற பிரகடனங்களுக்கு முற்றிலும் ஆதரவாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

அவர் குறிப்பாக ஒரு சர்ச்சையை மட்டுமே குறிப்பிட்டார்: அதாவது 'அஞ்சல் ஊழியர்களைப் பொறுத்தவரை, ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் ரோயல் மெயிலின் சுதந்திரமான ஒப்பந்ததாரர் பொருளாதார முன்மொழிவுகளை தோற்கடிப்பது ஆகும். ரோயல் மெயிலால் பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த பிரதிநிதிகள், சங்க நிர்வாகிகளை பாதுகாப்பது, அவர்களுக்கு முழு இழப்பீட்டுடன் அவர்களின் வேலைகள் திரும்ப கிடைப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும்” என்று குறிப்பிட்டார்.

நாம் எப்படிப் போராடுகிறோம், எப்படி வெற்றி பெறுகிறோம் என்ற மாநாட்டில் கோர்பின் பேசுகிறார்

CWU இன் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் ரோயல் மெயிலுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஏப்ரல் 16 தீர்மானம் போன்ற தபால் ஊழியர்களின் சாமானிய குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலிருந்து இந்தக் கோரிக்கை கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது. ''CWU தலைமை எங்கள் சக ஊழியர்களை ஓநாய்களிடம் தள்ளியுள்ளது, வேலைநிறுத்தங்களின் கல்லறையை நியமித்தவரின் தலைமையில், நடுவர் சேவையான ACAS ஒரு பயனற்ற மறுஆய்வுக்கு ஒப்புக்கொள்கிறது, பாதிக்கப்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன், அனைத்து வருமான இழப்புகளுக்கும், இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன் தீர்வு ஏற்படக்கூடாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

Counterfire குழுவினதும் சோசலிச தொழிலாளர் கட்சியினதும் தோற்றம்

லிண்ட்சே மற்றும் ரீஸ் உட்பட முன்னணி பிரமுகர்கள், 2010ல் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து பிளவுபட்டனர். 'இடதில்' உள்ள இதர குழுக்களுடன் இவர்களது அர்த்தமற்ற மோதல்களானது, 'ஐக்கிய முன்னணி' வேலை என்று அழைக்கப்படுவதற்கு ஒரு தடையாக இருந்தன என்ற புகார்களின் அடிப்படையில், மக்கள் மன்றம் (People’s Assembly) மற்றும் போரை நிறுத்தும் கூட்டணி (Stop the War Coalition) போன்ற குழுக்களிலுள்ள பல்வேறு ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தொழிற்கட்சியினருடன் தொடர்ச்சியான சந்தர்ப்பவாத கூட்டணிகளில் இருந்தனர். ஆனால் எந்த அடிப்படையும் Counterfire குழுவை அதன் தாய் அமைப்பான SWP தோற்ற மூலத்திலிருந்து அல்லது அதுபோன்ற பல அமைப்புகளிலிருந்து பிரிக்கவில்லை—இவைகள் அனைத்தும் தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவத்தின் ஈர்ப்பு வட்டப்பாதையில் இருக்கின்றன.  

சோசலிச தொழிலாளர் கட்சியின் தோற்றமானது நான்காம் அகிலத்தில் இருந்து ஒரு வலதுசாரி முறிவில் இருந்து உருவானது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு தோற்றப்பாட்டுவாத பதிலிறுப்பை (impressionistic response) அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்திரப்படுத்தலானது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் புரட்சிகர இயக்கங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதைச் சார்ந்திருந்தது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் அதன் சொந்த பூகோள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. அதேவேளையில், அதன் பரந்த பொருளாதார வளங்களைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தையும் அதற்கு வழங்கியது.

சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவர் டோனி கிளிஃப், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் உருவானதற்கு விடையிறுக்கும் வகையில், அவற்றை அரசு முதலாளித்துவத்தின் ஒரு வடிவம் என்று பிரகடனம் செய்து, சோவியத் ஒன்றியத்திற்கும் அதே வரையறையை விரிவுபடுத்தினார். ஸ்ராலினிச எந்திரம் அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய ஒரு அதிகாரத்துவ சாதியை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது, சோவியத் ஒன்றியத்தை ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு என்று லியோன் ட்ரொட்ஸ்கி பகுப்பாய்வு செய்ததை ஒரு அரசியல் நிராகரிப்பின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தியது. எனவே, அதிகாரத்துவமானது ஒரு சமூகப் புரட்சிக்கு மாறாக, ஒரு அரசியல் புரட்சியின் மூலம்  தூக்கியெறியப்பட வேண்டும் என்றும் மற்றும் தொழிலாள வர்க்கத்தால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் பாகமாக, புரட்சியின் ஆதாயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

டோனி கிளிஃப் [Photo: marxists.org]

அதிகாரத்துவத்தை ஒரு புதிய வர்க்கம் என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் மதிப்பீடானது, ஸ்ராலினிசமானது அது ஒரு ஒட்டுண்ணி கழலை வளர்ச்சி என்பதற்கு மாறாக, ஒரு புதிய பொருளாதார ஒழுங்கின் பிரதிநிதியாக ஒரு வரலாற்று அங்கீகாரத்தை அதற்கு வழங்கியது. அது ஏகாதிபத்தியத்திற்கும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலுமுள்ள அதன் அதிகாரத்துவ முகமைகளுக்கும் மொத்தமாக தகவமைத்துக் கொள்வதுடன் பிணைந்திருந்தது. 

இது போட்டி ஏகாதிபத்திய சக்திகளான வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான மோதல் என்று அவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில், அமெரிக்கா தொடுத்த போரின் போது வட கொரியாவை பாதுகாக்க மறுத்ததற்காக கிளிஃபினுடைய ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்தின் பிரிட்டிஷ் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஊடகங்களும் பரப்பிய கம்யூனிச-விரோதத்திற்கு சோசலிச தொழிலாளர் கட்சி தகவமைத்துக் கொண்டதானது, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகளுடன் அதன் உறவுகளை கட்டியெழுப்புவதில் ஒருங்கிணைந்ததாக இருந்தது. ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரித்த அரசு முதலாளித்துவவாதிகள், தொழிற்சங்கங்களை தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத அமைப்புக்கள் என்றும், தொழிலாள வர்க்கத்தின் சீர்திருத்தவாத தன்மையையே தொழிற்கட்சியின் சீர்திருத்தவாத தலைமை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அறிவித்தனர். எனவே அதிகாரத்துவமானது இடது பக்கம் தள்ளப்படலாம், தொழிற்கட்சியை தெரு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒற்றைப் பிரச்சினை பிரச்சாரங்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்படலாம், ஆனால் அதற்கு மேல் எதுவும் இல்லை என்றது. 

தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த மற்றும் நலன்புரி அரசில் பொதிந்திருந்த சமூக சலுகைகளால் பயனடைந்த ஒரு குட்டி-முதலாளித்துவ அடுக்கில் இருந்து தனது தொண்டர்களை, முதன்மையாக இந்தக் கட்சி ஈர்த்ததோடு, திட்டவட்டமாக அதன் சமூக நலன்களையும் அது பிரதிபலித்தது, மேலும் அதன் முன்னணி உறுப்பினர்கள் உயர் கல்வித்துறை (academia), உள்ளூராட்சி மற்றும் குறிப்பாக தொழிற்சங்க எந்திரங்களுக்குள் முக்கிய பதவிகளை வகிக்க வந்தனர்.

'சாமானிய இயக்கம்' என்றால் உண்மையில் என்ன?

Counterfire மற்றும் இதேபோன்ற போலி-இடது அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்ட சாமானிய நடவடிக்கையின் கருத்து, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கத்திற்கு, அதாவது அதன் உறுப்பினர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்படுகிறார்கள் என்ற கூற்றை மையமாகக் கொண்டுள்ளது. அதாவது, அதன் உறுப்பினர்கள் மற்றும் முதலாளிகள், ஒரு பழமைவாத தடுப்புக்கருவியாக ஆக முனைகிறார்கள், அவர்களின் சலுகை பெற்ற நிலையின் காரணமாக தொழிலாளர்களின் நலன்களிலிருந்து முற்றிலும் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்து வரும் அழுத்தங்களுக்கு அவர்களை உட்படுத்துவதன் மூலமும், அவர்களின் ஊதியத்தை குறைக்கும் அழைப்புகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமும், அவர்களுக்கு மேலும் ஜனநாயகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இதை எதிர்க்க முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதன் அடிப்படையிலும், தேசியவாதத்தை ஆதரிப்பதன் அடிப்படையிலும், அதிகாரத்துவ எந்திரத்தை மேலாளர் நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அரசின் கட்டமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பதைக் கண்ட தொழிற்சங்கங்களின் தசாப்தகால சீரழிவை இது வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. 

ட்ரொட்ஸ்கியால் 1940 இல் எழுதப்பட்ட 'ஏகாதிபத்திய சிதைவு சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்' என்ற நூலில் இந்த நிகழ்வை பகுப்பாய்வு செய்தார்:

'ஏகபோக முதலாளித்துவமானது, போட்டி மற்றும் சுதந்திரமான தனியார் முன்முயற்சியில் தங்கியிருக்கவில்லை, மாறாக மையப்படுத்தப்பட்ட கட்டளையில் தங்கியிருக்கிறது. பலமான அறக்கட்டளைகள், சிண்டிகேட்கள், வங்கிக் கூட்டமைப்புகள்  மற்றும் பலவற்றைப் போன்றவற்றின் தலைமையாக இருக்கும் முதலாளித்துவக் கும்பல்கள், பொருளாதார வாழ்க்கையை அரசு அதிகாரத்தைப் போலவே அதே உயரளவு கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன; ஒவ்வொரு கட்டத்திலும் பிந்தையவர்களின் கூட்டு ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. தொழில்துறையின் மிக முக்கியமான கிளைகளிலுள்ள தொழிற்சங்கங்கள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியால் இலாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை இழக்கின்றன. அரசு அதிகாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ள ஒரு மையப்படுத்தப்பட்ட முதலாளித்துவ எதிரியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். எனவே, தொழிற்சங்கங்கள் சீர்திருத்தவாத நிலைப்பாடுகளில், அதாவது தனியார் சொத்துடைமைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் நிலைப்பாடுகளில் இருக்கும் வரை - முதலாளித்துவ அரசுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளவும், அதன் ஒத்துழைப்பிற்காக போராடவும் வேண்டிய தேவை எழுகிறது. இந்த நிலைப்பாடு, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மிகப்பெரும் இலாபங்களின் பங்கில் ஒரு துண்டுக்காக போராடும் தொழிலாளர் பிரபுத்துவம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் சமூக நிலைப்பாட்டுடன் முற்றிலும் இணக்கமாக உள்ளது. 

லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் நிறுவனர்

ட்ரொட்ஸ்கி இந்த மதிப்பீட்டை எழுதியதில் இருந்து பல தசாப்தங்களில், தொழிற்சங்கங்களின் பெருநிறுவன சீரழிவானது பொருளாதார பூகோளமயமாக்கலால் தீவிரப்படுத்தப்பட்டது, தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு ஒரு புதிய சர்வதேச அளவுகோலை அமைத்த தேசிய எல்லைகளைக் கடந்து உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டது. அதிகாரத்துவத்தின் பெருநிறுவன பங்காளிகள் உலகளாவிய போட்டித்தன்மை என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிருகத்தனமான வேகப்படுத்தல்கள், செலவு குறைப்பு நடவடிக்கைகள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புகளை கோரியதால், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அதிகாரத்துவ எந்திரங்களின் பாத்திரமானது, தொழிலாளர்களின் சலுகைகளுக்காக முதலாளிகளுக்கும் அரசிற்கும் அழுத்தம் கொடுப்பதில் இருந்து, முதலாளிகளின் சலுகைகளுக்காக தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது வரை மாற்றப்பட்டது.

தொழிற்சங்கங்களிலுள்ள பிரச்சினை என்பது என்னவென்றால், மோசமான தலைவர்கள் எப்படியோ எல்லோரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அமைப்புகளின் தலைமைக்கு வந்துவிட்டார்கள் என்பதல்ல. சோசலிச தொழிலாளர் கட்சியின் மறைமுகமான வாதம் என்னவென்றால், தொழிற்சங்கங்களின் அழுகிய பதிவு இந்த தலைவர்களை பொறுப்பேற்க வைப்பதில் உறுப்பினர்களின் செயலற்ற தன்மையின் விளைவு என்பதாகும்.

உண்மையில், இந்த அமைப்புகளின் கட்டமைப்புகள்தான் தொழிற்துறை தகராறுகளை நடத்துவதில் உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் மேற்பார்வையைத் தடுக்க வேலை செய்கின்றன. அவைகள் ஒரு குறுகிய, தனிமைப்படுத்தப்பட்ட அடுக்கு மூலம் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இருக்கின்றன. இந்த அமைப்புகளுக்குள், அதே பெருநிறுவன மனநிலையைப் பகிர்ந்து கொள்ளும் அதிகார வர்க்கத்தின் ஒரு சாதியானது, தொழிற்சங்கத்தின் கட்டமைப்புகளை அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரே மாதிரியான நபர்கள் மட்டுமே பதவியில் நிரந்தரமான பதவியை அடைவதை உறுதிசெய்கிறது.

இந்த அடுக்குகள், தொழிற்சங்கங்களின் கொள்கையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக எதிர்க்கிறது, மேலும் சாமானிய தொழிலாளர்களால் அதன் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படும்போது அதன் எதிர்ப்பு அதிகரிக்கிறது. ஏனெனில் அதன் இருப்பானது தொழிலாளர்களின் உண்மையான ஜனநாயக அமைப்பு மற்றும் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வதில் இணக்கமற்று இருக்கிறது.

இதன் விளைவாக பல தசாப்தங்களாக நீடித்த தொடர்ச்சியான விற்றுத்தள்ளல்கள் மற்றும் காட்டிக்கொடுப்புகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை கடுமையான துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், தொழிற்சங்கங்கள் மில்லியன் கணக்கான உறுப்பினர்களை இழந்துள்ளன, ஆனால் அதிகாரத்துவத்தின் அதன் சொந்த வருமானம் மற்றும் சலுகைகள் பெருமளவில் அதிகரித்திருப்பதைக் கண்டுள்ளது. இன்று தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தை முற்றிலும் கணக்கிட முடியாத சாதியாக எதிர்கொள்கிறது, மக்கள் பொறுப்புக்கூறலின் அனைத்து வழிகளையும் மூடுவதன் மூலமும், தங்கள் சொந்த உறுப்பினர்களுக்கு எதிராக போர் தொடுப்பதன் மூலமும் 'கீழிருந்து வரும் அழுத்தத்திற்கு' அது பதிலளிக்கிறது. 

சாமானியக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கு!

பெருநிறுவனங்கள் மற்றும் அரசுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது 'தொழிற்சங்கங்களுக்குள் உள்ள எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகவும், இந்த ஆட்சியை நடைமுறைப்படுத்தும் தலைவர்களுக்கு எதிராகவும்' ஒரு போராட்டமாகும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். 'முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான வெகுஜன போராட்டத்தின் பணிகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புக்களின் சாத்தியமான அனைத்து நிகழ்வுகளிலும்; தேவைப்பட்டால், தொழிற்சங்கங்களின் பழமைவாத எந்திரத்துடன் ஒரு நேரடி முறிவை எதிர்கொண்டாலும் கூட பின்வாங்கக்கூடாது' என்று மேலும் அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு பெரும் போராட்டமும் ஏற்கனவே தொழிற்சங்கங்களால் வர்க்கப் போராட்டம் மீதான நீண்டகால ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாக அபிவிருத்தியடைந்துள்ளது. ஆனால் அதிகாரத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டமானது அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் வெளிப்பாட்டைக் காண வேண்டும். பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகம் கோருவதை அல்ல, தொழிலாளர்களுக்குத் தேவையானதை அடைய தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே பொது நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட வேண்டும், இதன் மூலம் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட மற்றும் தொழிற்சங்கத்தில் அல்லாத தொழிலாளர்களிடையே உண்மையான ஜனநாயக விவாதத்திற்கான அடித்தளத்தை உருவாக்க, சாமானியக் குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும். 

பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி மற்றும் பெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களால் மேலாதிக்கம் செலுத்தப்படும் பொருளாதார வாழ்க்கையின் உலகில், வர்க்கப் போராட்டமானது வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சர்வதேசமாக இருக்க வேண்டும், இல்லையெனில் தொழிலாள வர்க்கம் தோற்கடிக்கப்படும்.

அதனால்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சாமானியக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ஸ்தாபித்துள்ளது. இது சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களிலுள்ள தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க சாமானிய அமைப்புகளின் புதிய வடிவங்களை அபிவிருத்தி செய்வதற்கான கட்டமைப்பை வழங்குகிறது, சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதற்கும், கோவிட் பெருந் தொற்றுகளிலிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல், தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போரை தூண்டிவிடுவதற்கும், ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரமடைதல் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி என்ற ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான தேவையானது அதன் மையத்தில் உள்ளது, அதன் மூலம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.