ஐக்கிய இராச்சியத்தின்னதும் அமெரிக்காவினதும் ஆயுதங்களைப் பயன்படுத்தி யேமன் மீதான வான்வழித் தாக்குதல்கள் "பொதுமக்களுக்கு எதிரான வன்முறை வடிவத்தின் ஒரு பகுதி"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒக்ஸ்பாமின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனவரி 2021 முதல் பெப்ரவரி 2022 இறுதி வரை யேமனில் பொதுமக்கள் மீதான நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கு வழங்கியுள்ளன.

ஆயுதங்கள் மற்றும் மோதல்கள் தொடர்பான ஒக்ஸ்பாமின் கொள்கை ஆலோசகர் மார்ட்டின் புட்சர், சவுதி தலைமையிலான கூட்டணி குறைந்தது 87 பொதுமக்கள் இறப்புகள் மற்றும் 136 காயங்கள், சுகாதார நிலையங்கள் மீதான 19 தாக்குதல்கள் மற்றும் 39 சதவீதம் இடப்பெயர்வை ஏற்படுத்தும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்திய 293 தாக்குதல்களுக்கு பொறுப்பாகும். 'எங்கள் பகுப்பாய்வு பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் மாதிரியைக் காட்டுகிறது. மேலும் இந்த மோதலில் உள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யக் கடமைப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க போதுமான அளவு செய்யவில்லை”.

அவர் மேலும் கூறுகையில், “ஆயுத வினியோகங்கள் இல்லாமல் இந்த தாக்குதல்களின் தீவிரம் சாத்தியமில்லை. அதனால்தான் இங்கிலாந்து அரசாங்கமும் மற்றவர்களும் யேமனில் போரைத் தூண்டும் ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்துவது முக்கியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2019 செப்டம்பரில் தென்மேற்கு யேமனின் தாமர் மாகாணத்தில் குறைந்தது 60 பேரைக் கொன்ற சவுதி தலைமையிலான வான்வழித் தாக்குதல்களால் ஹவுதி தடுப்பு மையம் அழிக்கப்பட்டது [AP Photo/Hani Mohammed, File]

ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரம் (CAAT) என்ற அமைப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தலைமையிலான யேமனில் போருக்கு டைபூன் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் உட்பட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பல பில்லியன் பவுண்டு ஆயுத விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வழக்கைத் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒக்ஸ்பாம் அறிக்கை வெளிவந்தது. 

2014 ஆம் ஆண்டு ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் சொந்த விதிகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் (IHL) கடுமையான மீறலில் ஒரு ஆயுதம் 'பயன்படுத்தப்படலாம்' என்ற 'தெளிவான ஆபத்து' உள்ளபோது ஆயுத விற்பனையைத் தடை செய்கிறது. கூட்டணி பலமுறை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியுள்ளது என்பதற்கான அதிகமான சான்றுகள் இருந்தபோதிலும், அரசாங்கம் ஆயுத விற்பனையை ஊக்குவித்து பாதுகாத்து வருகிறது. CAAT இன் கூற்றுப்படி, யேமனில் ஏப்ரல் 2015 இல் போர் தொடங்கியதிலிருந்து, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட பல மடங்கு 'பகிரங்க விற்பனை உரிமங்களை' கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, சவுதி அரேபியாவிற்கு £23 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை இங்கிலாந்து வழங்கியுள்ளது.

பிரித்தானிய சிறப்புப் படைகள் போரில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சவுதி போர் விமானங்களை பிரிட்டிஷ் இராணுவம் பராமரிக்கும் அதே வேளையில், அது யேமனைத் தாக்குவதற்கும் மற்றும் கூட்டணி உளவுத்துறைக்கு ஆதரவும் வழங்கியுள்ளது.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஆயுத விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையினதும், பிற சர்வதேச அமைப்புகளின் அழைப்புகளை பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்துள்ளது. கையொப்பமிடப்பட்ட விற்பனைப்பத்திரங்கள் அல்லது ஒப்பந்தங்களின் மதிப்பின் அடிப்படையில், அமெரிக்காவிற்குப் பிறகு, உலகளவில் பாதுகாப்புத்துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனமாக இது உள்ளது. இந்த மதிப்பில் பாதிக்கும் மேற்பட்டவை மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றன.

தனது எதிர்ப்பாளர்களை வழமையாக படுகொலை செய்வது, சித்திரவதை செய்வது, சிறையில் அடைப்பது மற்றும் எதிர்ப்பாளர்களை தலை துண்டிக்கும் சவூதி அரேபிய மன்னராட்சியும் மற்றும் அடக்குமுறை ஐக்கிய அரபு எமிரேட்ஸும்  எஞ்சியிருக்கும் சில உற்பத்தித் துறைகளில் ஒன்றான பிரிட்டனின் பாதுகாப்புத் தொழிற்துறைக்கு முக்கிய ஆதரவை வழங்குகின்றன. அவர்கள் எரிசக்தி வளம் கொண்ட பிராந்தியத்தில் பிரிட்டனின் புவிசார் மூலோபாய நலன்களின் முக்கிய பாதுகாவலர்களாகவும், ரஷ்யா, சீனாவுடனான போருக்கான பரந்த தயாரிப்புகளின் ஒரு பகுதியாக ஈரானையும் அதன் பிராந்திய கூட்டாளிகளான ஈராக், சிரியா, லெபனான் மற்றும் யேமனையும் தனிமைப்படுத்தும் வாஷிங்டன் தலைமையிலான பிரச்சாரத்தில் கூட்டாளிகளாகவும் பணியாற்றுகின்றனர். ரஷ்யா,சீனாவுடன் தெஹ்ரான் நெருங்கிய உறவுகளை உருவாக்கியுள்ளது.

பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் அரசாங்கம் அரேபிய தீபகற்பத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான சவுதியின் கட்டுப்பாட்டை பராமரிக்கும் நோக்கத்தில் உள்ளது. ரியாத் அல்லது அதன் ஆதரவாளர்கள் போர்க்குற்றங்களைச் செய்கிறார்கள் என்ற எந்தத் தகவலையும் அது அடக்குவதுடன் மற்றும் ஆயுதங்களை வினியோகிப்பதால் இங்கிலாந்து அதன் சொந்த விதிகளை மீறுகிறது என்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கிறது.

ஜூன் 2019 இல், CAAT இன் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவெடுக்கும் செயல்முறை 'பகுத்தறிவற்றதால்' அது 'சட்டவிரோதமானது' என்று முடிவு செய்தது. யேமனில் போரில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களுக்கான ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு அரசாங்கத்தை  கட்டாயப்படுத்தியது. இந்த ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய மதிப்பாய்வு நிலுவையில் உள்ளதுடன் மற்றும் எதிர்கால ஆயுத விற்பனை அரசாங்கத்தின் சொந்த விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் இணங்கியிருக்கவேண்டும் என்பதை உறுதி செய்தது.

ஆனால் ஜூலை 2020 இல், அப்போதைய வர்த்தக செயலாளர் லிஸ் ட்ரஸ் ஆயுத விற்பனையை மீண்டும் தொடங்கினார்.  சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் எந்தவொரு மீறலும் 'தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள்' என்று அவர் கூறினார். அப்போதிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கம் குறைந்தபட்சம் £2.2 பில்லியன் கூடுதல் ஆயுத விற்பனையை கூட்டணிக்கு அனுமதித்துள்ள அதே நேரத்தில் யேமனுக்கு 2021-22 இற்கான உதவியை பாதிக்கு மேல் குறைத்தது.

உயர் நீதிமன்றத்தில் CAAT இன் சமீபத்திய வழக்கு, கூட்டணிப் படைகளால் 'சிறிய எண்ணிக்கையிலேயே' சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மீறல்கள் மட்டுமே இருந்தன மற்றும் வழமையான “நடைமுறையின்”  ஒரு  பகுதியாக இருக்கவில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றுகளை சவால் செய்கிறது. இந்த மீறல்களின் 'தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள்' மட்டுமே இருந்தாலும், இது இன்னும் மீறல்களின் தெளிவான ஆபத்தை உள்ளடக்கியிருக்கலாம்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மத்திய கிழக்கின் மிகவும் ஏழ்மையான நாடான யேமனில் சவுதியால் திணிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி எறிந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரை நடத்தி வருகின்றன. இது மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இனப்படுகொலைக்கு சமம் எனக் கண்டனம் செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில், நீடித்த தாக்குதலில் 377,000 யேமனியர்கள் கொல்லப்பட்டனர். அதில் 150,000 பேர்கள் போரின் நேரடி விளைவாகவும், மீதமுள்ளவர்கள் 'உணவு பற்றாக்குறை அல்லது சுகாதார அணுகல், அத்துடன் இந்த சேவைகளை வழங்குவதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு பற்றாக்குறையால்' கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

சுமார் 4.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதே சமயம் 2016 முதல் பரவிய கொலரா மற்றும் தொற்றுநோய் உள்ளிட்ட பயங்கரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மக்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தடுத்துள்ளன. இந்தப் போர் யேமனின் பொது சுகாதார அமைப்பின் பெரும்பகுதியை அழித்து 50 சதவீத சுகாதார வசதிகளை மட்டுமே இயங்கும் நிலையில் விட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக செயல்படவில்லை.

கடந்த ஆண்டு பருவகால மழை, புயல், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவை இன்னும் பேரழிவு நிலைமைகளை உருவாக்கின. இதனால் 210,000 க்கும் அதிகமான மக்கள் இறப்புகளுக்கும் மற்றும் காயங்களுக்கும் ஆளாகினர்.  

21.5 மில்லியனுக்கும் அதிகமான யேமனியர்களுக்கு உதவி தேவைப்படுவதுடன் மற்றும் 17.3 மில்லியன் பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு மில்லியன் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளனர்.

ஆறு மாத கால போர்நிறுத்தம் மற்றும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒரு வீழ்ச்சி இருந்தபோதிலும், படுகொலை தொடர்ந்தது. 2022 இல் குறைந்தது 643 யேமன் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதில் குறைந்தது 102 குழந்தைகள் மற்றும் 27 பெண்கள் உள்ளடக்கியிருக்கலாம். உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான மனிதநேயத்திற்கான (Eye for Humanity Centre for Rights and Development) யேமனை தளமாகக் கொண்ட அமைப்பின் படி 3,000 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 14,300 வீடுகள், 12 மருத்துவமனைகள், 64 பள்ளிகள் மற்றும் 22 மின் நிலையங்கள் அழிக்கப்பட்டிருப்பது மக்களின் துன்பத்தை மேலும் கூட்டியுள்ளது.

அக்டோபர் 1 மற்றும் 15, 2016 க்கு இடையில் ரியாத்தில் ஆயுத விற்பனை தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு Middle East Eye என்ற இணையதளத்தின் தகவல் சுதந்திரக் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது. சனா நகரில் நிகழ்ந்த நெரிசலான இறுதிச் சடங்கு மண்டபத்தில் சவுதி தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8, 2016 அன்று 140 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக ஐ.நா கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர். நீண்ட கால தாமதங்களுக்குப் பிறகு பிரிட்டன் இக்கோரிக்கைகளை நிராகரித்து, முதலில் கொள்கை உருவாக்கும் முடிவுகள் மற்றும் இங்கிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வணிக நலன்களுக்கு பாதகமான முடிவுகளுக்கான விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி, அது தவறானது எனக் காட்டப்பட்டால், ஆவணங்களை மீட்டெடுப்பது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறியது.

தகவலை வழங்க அரசாங்கம் மறுப்பது, கூட்டணிப்படைகளை அரசாங்கம் ஆயுதபாணியாக்குவதில் பிரிட்டிஷ் பொதுமக்களிடம் உள்ள பரவலான மற்றும் ஆழ்ந்த விரோதப் போக்கை நிரூபிக்கிறது.

பிரிட்டிஷ் அரசாங்கம் உலகில் சில மோசமான காட்டுமிராண்டித்தனமான மற்றும் அடக்குமுறை ஆட்சிகளை ஆதரிக்கிறது. யேமன் மீதான சவுதி தலைமையிலான போருக்கு அதன் தொடர்ச்சியான ஆயுதங்களை வழங்குதல் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த முயலும் பாசாங்குத்தனம் உட்பட  சர்வதேச அரங்கில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான அதன் கூற்றுக்களை அம்பலப்படுத்துகிறது.

லண்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளினதும் மற்றும் அவர்களின் பிராந்திய பினாமிகளின் பார்வையில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினை அப்பட்டமாக மீறல்கள் மற்றும் யேமன்,  சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற மனிதாபிமான நெருக்கடிகள் ஆகியவை மூலவளங்கள் நிறைந்த-மத்திய கிழக்கில் மேலைதிக்கத்திற்கான போராட்டத்தில் துணை சேதங்கள் ஆகும்.  உக்ரேனில் எப்போதும் விரிவடைந்து வரும் போரின் தாக்கங்கள் பற்றிய ஒரு தெளிவான எச்சரிக்கையை இது வழங்குகின்றது. இது மாணவர்களும் இளைஞர்களும் சர்வதேச போரெதிர்ப்பு இயக்கத்தை, கட்டியெழுப்புவதற்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது