முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான ஐரோப்பிய இயக்கத்திற்காக

ஜேர்மன் வாக்காளர்களுக்கு: ஐரோப்பிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பங்கேற்பதை உங்கள் கையெழுத்துடன் ஆதரியுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சோசலிச சமத்துவக் கட்சி (SGP, Sozialistische Gleichheits partei) ஐரோப்பிய தேர்தல்களில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் துருக்கியில் உள்ள அதன் சகோதரக் கட்சிகள் மற்றும் உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள ஆதரவாளர்களின் குழுக்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பங்கேற்கிறது. போருக்கு எதிராகவும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஒரு ஐரோப்பிய இயக்கத்தை நாங்கள் கட்டி வருகிறோம். நாங்கள் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்துடன் எதிர்க்கிறோம்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தினால் மட்டுமே பொறுப்பற்ற முறையில் மூன்றாம் உலகப் போரை தூண்டும் பெரும் வல்லரசுகளின் பைத்தியக்காரத்தனத்துக்கு முடிவு கட்ட முடியும். ரஷ்யாவுக்கு இராணுவத் தோல்வியை ஏற்படுத்துவதற்காக, இரு தரப்பிலும் நூறாயிரக்கணக்கான இறப்புகளையும் பொருட்படுத்தாமல், உக்ரேனில் நேட்டோ போரைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. அது ஒரு சிவப்பு கோட்டை ஒன்றன் பின் ஒன்றாக கடந்து வருகிறது, அதன் மூலம் அணுசக்தி போர் மற்றும் முழு கிரகத்தின் அழிவையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தில் ஆழ்த்துகிறது.

ஆளும் வர்க்கம் தனது சொந்த மக்களுக்கு எதிராக அதே இரக்கமற்ற தன்மையுடன் செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான பில்லியன்கள் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் பாய்ந்தாலும், பணவீக்கம் தொழிலாளர்களின் ஊதிய வீதத்தை குறைக்கிறது. பெரும் தொற்றுநோய்களின் போது “உயிர்களுக்கு மேலாக லாபம்” என்ற கொள்கை, ஐரோப்பாவில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிர்களை எடுத்துள்ளது. இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய், (சமூக) வெட்டுக்கள் மற்றும் போரைத் தவிர தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முதலாளித்துவத்திடம் வேறு எதுவும் இல்லை.

கண்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பிரான்சில், மில்லியன் கணக்கானவர்கள் மக்ரோன் அரசாங்கத்தின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களில் பங்கேற்றுள்ளனர் மற்றும் பொலிசின் கொலைகார அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். இங்கிலாந்தில், நூறாயிரக்கணக்கான மக்கள் வேலைநிறுத்த தடைகளுக்கு எதிராக போராடுகின்றனர், ஜேர்மனியில் தபால் ஊழியர்கள், பொது ஊழியர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் ஊதியக் கொள்ளைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்ட இயக்கத்தை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கவும் சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கவும் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

பிராங்பேர்ட் பிரதான ரயில் நிலையத்திற்கு முன்னால் வேலைநிறுத்தம் செய்பவர்கள்

போரை நிறுத்து

உக்ரேனில் நடக்கும் போர் “சுதந்திரம்” மற்றும் “ஜனநாயகம்” பற்றியது அல்ல. ஆனால் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடந்த போர்களைப் போலவே - மூலப்பொருட்கள், சந்தைகள், மலிவான உழைப்பு மற்றும் உலக அதிகாரம் பற்றியதாகும். அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற நேட்டோ சக்திகள் உக்ரேனைக் கட்டுப்படுத்தவும், ரஷ்யாவை அடிபணியச் செய்யவும் இரு நாடுகளின் பரந்த இயற்கை வளங்களைச் சூறையாடவும், சீனாவுக்கு எதிரான போரைத் தயாரிக்கவும் விரும்புகின்றன.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் இரண்டு உலகப் போர்களின்போது கொண்டிருந்த அதே போர் நோக்கங்களை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது மற்றும் ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெருமளவில் மறுபடியும் இராணுவத்தை ஆயுதபாணியாக்கி வருகிறது. ஆளும் வர்க்கம் 80 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவை அழித்திருக்குமாயின் இப்போது முழு கிரகமும் அணுசக்தியால் அழிந்து போவது நெருங்கிவிட்டது. இது வெறும் ரஷ்யா மற்றும் சீனா மட்டுமல்ல. நேட்டோ சக்திகளுக்கு இடையிலான பழைய பகை மீண்டும் வெடித்துள்ளது - ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலும் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளும் வெடித்துள்ளது. பேர்லின் ஐரோப்பாவை அதன் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்க முயற்சிக்கையில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் போலந்துடனான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

உக்ரேனில் பினாமிப் போர் என்பது ஏகாதிபத்திய சக்திகள் உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும், இது பெருகிய முறையில் வன்முறையாகவும் இரத்தக் களரியாகவும் உள்ளது. இது மொத்தப் போரின் ஈர்ப்புப் புலத்தில் நுழைந்துள்ளது, அதாவது வரம்பற்ற அழிவுக்கான போர், மனித வாழ்வு குறித்து முழுமையான அலட்சியம், இவற்றுக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளும் கீழ்படிய செய்யப்பட்டுள்ளன.

1930 களில் இருந்ததைப் போலவே, போர் என்பது வெளிப்புறமாக சர்வாதிகாரத்தையும் உள்நாட்டில் பாசிசத்தையும் குறிக்கிறது. உக்ரேனில், அரசாங்கம் நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகிறது மற்றும் அசோவ் பட்டாலியன் போன்ற பாசிச சக்திகளுக்கு ஆயுதம் வழங்குகிறது. ஜேர்மனியில், போலீஸ், பன்டேஸ்வேர் (ஆயுதப் படைகள்) மற்றும் உளவுத்துறையில் உள்ள வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களை உயர் அதிகாரிகள் ஊக்குவித்து மூடி மறைக்கின்றனர். அனைத்துக் கட்சிகளும் அதி தீவிர வலதுசாரி, ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியை பாராளுமன்றப் பணிகளில் ஒருங்கிணைத்து, அதன் பிற்போக்குத்தனமான அரச மறுஆயுதபாணியாக்கல், விஷத்தன்மை மற்றும் அகதிகளுக்கு எதிரான தூண்டுதல் ஆகியவற்றை செயல்படுத்துகின்றன. பாசிஸ்டுகளின் உதவியுடன், போர்க் கொள்கை மற்றும் சமூகத் தாக்குதல்களை எதிர்க்கும் எவரும் மிரட்டப்படுகிறார்கள்.

போருக்கு எதிரான போராட்டம் புட்டின் ஆட்சிக்கு எதிராகவும் திருப்பப்பட வேண்டும். நேட்டோதான் போரைத் தூண்டி விட்டது, ஆனால் அது ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற மற்றும் பிற்போக்குத்தனமான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தாது. புட்டின் ஆட்சியானது ரஷ்ய நிதி தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் சமூக சொத்துக்களை சூறையாடினர், மற்றும் இப்போது ஏகாதிபத்திய கொள்ளையர்கள் அவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கைப்பற்ற விரும்புவது குறித்து ஆத்திரமடைந்துள்ளனர்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவுதான் இந்தப் போர். முதலாளித்துவ மீட்சி என்பது “வரலாற்றின் முடிவு” என்று அர்த்தப்படுத்தவில்லை, மாறாக போர்கள் மற்றும் புரட்சிகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூன் 13, 2023 செவ்வாய்க்கிழமை, உக்ரேனின் கெர்சன் பகுதியில் உள்ள ரஷ்ய நிலைகளை நோக்கி, உக்ரேனின் சிறப்பு நடவடிக்கைப் படைகள் 122 மிமீ ஹோவிட்சர் D-30 ஆல் சுடுகின்றன. [AP Photo/Felipe Dana]

மற்றொரு உலகப் போரைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். உலக மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையாக உள்ள இந்த சமூக சக்தி, இன்று முன்பை விட அதிக எண்ணிக்கையிலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும் உள்ளது. நான்காம் அகிலத்தில் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, SGP போர் மற்றும் அதற்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய சோசலிச இயக்கத்தை கட்டி வருகிறது.

  • உக்ரேனில் நேட்டோ போரை நிறுத்து! தடைகள் மற்றும் ஆயுத விநியோகங்கள் வேண்டாம்!
  • இரண்டு உலகப் போர்கள் போதும்! போர் வெறியர்களை நிறுத்து!
  • மறு ஆயுதபாணியாக்கல் மற்றும் போருக்கு பதிலாக பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு €100 பில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும்!

ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

சமூக வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் போருக்கும் பணக்காரர்களின் லாப பேராசைக்கும் கீழ்ப்படிய செய்யப்பட்டுள்ளது. ஆயுதச் செலவுகள் கூரையை பிய்த்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் வேளையில், பெரும் தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்காக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. மேலும் புதிய வெட்டுக்கள் இப்போது தயாராகி வருகின்றன. பயங்கரமான பணவீக்கம் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கிறது மற்றும் நூறாயிரக்கணக்கானோர் வேலைகளை இழக்கின்றனர்.

ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள், அதற்காக அன்றாடம் போராட வேண்டியுள்ளது. ஜேர்மனியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகத்தின் (Eurostat) படி, வறுமை மற்றும் சமூக விலக்கிற்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளவர்களின் விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் 3.6 சதவீத புள்ளிகளால் உயர்ந்து 20.9 சதவீதம் அல்லது 17.3 மில்லியன் மக்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சராசரி 21.7 சதவீதமாகும். அதே சமயம் பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் பெருமளவில் ஊதிப் பெரிதாகி உள்ளன.

ஐரோப்பா முழுவதும், சமூக சமத்துவமின்மைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் பெரும் எழுச்சியை கண்டம் அனுபவித்து வருகிறது. இது ஏதோ ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படக்கூடிய தேசிய தொழிற்சங்கப் போராட்டங்களின் தொடர் அல்ல, மாறாக அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு சர்வதேச அரசியல் போராட்டமாகும். பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பயன்படுத்தி பதிலளிக்கும் மதிப்பிழந்த மற்றும் பரவலாக வெறுக்கப்பட்ட அரசாங்கங்களை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தை எதிர்கொண்டு, அரசாங்கத்தை தூக்கி வீசாமல் எந்த கோரிக்கையையும் செயல்படுத்த முடியாது என்பதை, பிரான்சில் உள்ள கிளர்ச்சி இயக்கம் தெளிவு படுத்தியுள்ளது. அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதிலும் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் நாடுகள் மற்றும் தொழில்களுக்கு ஏற்ப போராட்டங்களை தனிமைப்படுத்தி, தொழிலாளர்கள் மீது உண்மையான ஊதிய வெட்டுக்கள் மற்றும் பணிநீக்கங்களை அமுல்படுத்துகின்றனர்.

தெற்கு பிரான்சில் உள்ள மார்சேயில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேலைநிறுத்தம் செய்பவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். இரயில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர், ஓய்வூதிய முறையை மாற்றியமைக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டங்களைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் மற்றொரு நாளில் இணைந்தனர். ஜனவரி 14, 2020 செவ்வாய்கிழமை, (AP Photo/Daniel Cole) [AP Photo/Daniel Cole]

எனவே, வெட்டுக்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்காக சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்குவதை SGP ஆதரிக்கிறது. இந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அதிகாரத்திற்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபடும் புதிய உறுப்புகளாக அவை கட்டமைக்கப்பட வேண்டும்.

அத்தகைய இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிராகவே இயக்கப்பட வேண்டும். உக்ரேனில் நடக்கும் போர், முதலாளித்துவ நிலைமைகளின் கீழ் ஐரோப்பாவை அமைதியான முறையில் ஒன்றிணைப்பது ஒரு பிற்போக்குத்தனமான மாயை என்பதை காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் முழுமையாக ஆயுதம் ஏந்தி, ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுத்து, கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது.

அகதிகள் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்கு தன்மை குறிப்பாக தெளிவாக உள்ளது. வெளிப்புற எல்லைகளில் சுவர்கள், கம்பி வேலிகள் மற்றும் மனிதாபிமானமற்ற சிறை முகாம்கள் என தொடர்ந்து விரிவடைந்து வரும் “ஐரோப்பிய கோட்டை”, ஆயிரக்கணக்கான அகதிகளைக் கொன்று வருகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 20,000 க்கும் அதிகமானோர் மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். போர், சமூக சீரழிவு மற்றும் துயரங்களில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகளைத் தடுப்பது திட்டமிட்ட கொலைக் கொள்கையாகும்.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய யூனியன், வெகுஜன இறப்பு மற்றும் போர் ஆகியவற்றுக்கு மாற்றீடாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான முன்னோக்கை தொழிலாளர்கள் முன்வைக்க வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அவற்றை வைக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது, உயிர்களைக் காப்பாற்ற முடியாது, ஊதியத்தைப் பாதுகாக்க முடியாது. ஒருவரையொருவர் சுடுவதற்குப் பதிலாக, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களும், ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களும், இந்த முன்னோக்குடன் தங்கள் சொந்த நாட்டில் உள்ள போர்வெறியர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.

  • லாபத்திற்கு பதிலாக வாழ்க்கை!
  • எல்லா வேலைகளையும் காக்க! அனைவருக்கும் 30 சதவீதம் கூடுதல் ஊதியம் மற்றும் பணவீக்க இழப்பீடு!
  • கொள்ளையடிக்கும் நிலப்பிரபுக்கள், எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் போரில் லாபம் ஈட்டுபவர்களின் சொத்துக்களை இழப்பீடு இல்லாமல் அபகரிப்பு!
  • வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெகுஜன இறப்பு மற்றும் போருக்கு எதிராக! ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

தொழிலாளர்களுக்கு சொந்த கட்சி தேவை

இந்த கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முறையீடு செய்வதன் மூலம் நிறைவேற்ற முடியாது, ஏனெனில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் போரையும் சமூக அழிவையும் ஆதரிக்கின்றன. வேறு எந்தக் கட்சியும் போல் அன்றி பசுமைவாதிகள் நடுத்தர வர்க்கத்தின் செல்வந்த பிரிவுகளுக்காகப் பேசுகின்றனர், இது ஜேர்மனியின் பெரும் வல்லரசாகும் நலன்களுடன் ஒத்துப்போகும் வரையில் அமைதிவாதிகளாகவே இருப்பார்கள். ஹிட்லருக்குப் பிறகு 1998 இல் சேர்பியாவிற்கு எதிராக முதல் ஜேர்மன் ஆக்கிரமிப்புப் போரை ஏற்பாடு செய்த பின்னர், அவர்கள் மிக மோசமான இராணுவவாதிகளாக மாறிவிட்டனர்.

இடது கட்சி ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக் கொள்கையையும் போரின் போக்கையும் ஆதரிக்கிறது. கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஸ்ராலினிச அரசுக் கட்சியிலிருந்து (SED) வெளிவந்த இந்தக் கட்சி எந்திரம் சாமானிய தொழிலாளர்கள் குறித்து ஒருமுகப்படுத்தப்பட்ட இழிவான அணுகுமுறையை கொண்டிருக்கிறது. அதன் சகோதரக் கட்சிகளான கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக வெட்டுக் கொள்கைகள் மற்றும் பாரிய எதிர்ப்பிற்கு எதிராக போர் ஆகியவற்றை அமுல்படுத்தியுள்ளன. கட்சியின் Wagenknecht பிரிவுக்கு இராணுவ எதிர்ப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அது ரஷ்யாவிற்கு எதிரான போரை ஒரு தேசியவாதக் கண்ணோட்டத்தில் மட்டுமே விமர்சிக்கிறது மற்றும் ஜேர்மன்-ஐரோப்பிய மறுஆயுதபாணியாக்கலை உண்மையான எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக இயக்க வேண்டும் என்று நம்புகிறது.

SGP மட்டுமே இராணுவவாதம், பாசிசம் மற்றும் போருக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறது. நாங்கள் லாபகரமான பதவிகளுக்காக பாடுபடவில்லை, மாறாக ஐரோப்பிய தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள இடங்களைப் பயன்படுத்தி சண்டையிடும் கட்சிகளை எதிர்க்கிறோம். மிகப்பெரிய ஆபத்துகள் குறித்து எச்சரித்து, அவற்றிற்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்கிறோம்.

அவ்வாறு செய்கையில் நாம் சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக, நாங்கள் மார்க்சிசத்தின் பாரம்பரியத்தில் நிற்கிறோம் - ஆகஸ்ட் பெபல், ரோசா லக்சம்பர்க் மற்றும் கார்ல் லிப்க்னெக்ட், ரஷ்ய அக்டோபர் புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பின் பாரம்பரியத்தில் நிற்கிறோம்.

முதலாளித்துவத்தின் தீமைகளை நிரந்தரமாக அகற்றும் புதிய வெகுஜன சோசலிசக் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. வெளிப்படையான சமூக சமத்துவமின்மை, சுகாதாரம் மற்றும் கல்வி முறையின் அழிவு மற்றும் நமது கிரகத்தின் அணுவாயுத அழிவு ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள விரும்பாத அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்: இந்த அறிக்கையை முடிந்தவரை பரவலாகப் பகிருங்கள் மற்றும் SGP இன் பிரச்சாரத்தை ஆதரியுங்கள்.!